22 October 2015
16 October 2015
‘‘ஆசிரியர்கள் போராட்டம் ஆட்சிக்கு பெரிய சிக்கலை உருவாக்கிவிட்டதாமே?”-மிஸ்டர் கழுகு:ஜூனியர் விகடன்
‘‘ஆசிரியர் சங்கங்களின் கூட்டு குழுவான ஜாக்டோ அமைப்பு கடந்த
8-ம் தேதி தமிழகத்தில் பள்ளிகளில் 15 அம்ச கோரிக்கைகளை
வலியுறுத்தி போராட்டம் நடத்தியது. ஆசிரியர்கள் மற்றும் அரசு
ஊழியர்களின் முக்கியமான கோரிக்கை 6-வது ஊதிய ஊயர்வுகமிஷன்
நிர்ணயித்த சம்பள விகிதங்களில் உள்ள குளறுபடிகளை நீக்க
வேண்டும் என்பது. இதை வைத்து ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்
சங்கங்கள் நீண்ட நாள் போராட்டங்கள் நடத்தி வந்தன.
ஆசிரியர்சங்கங்களின்
இந்தப் போராட்டம் சட்டசபை தேர்தலில் பெரியஅளவில் பாதிப்பை
ஏற்படுத்தும் என்று உளவுத் துறையினர் ஆளும்கட்சி மேலிடத்தின்
கவனத்துக்குக் கொண்டு சென்றனர். இதையடுத்து தலைமைச்
செயலகத்தில் அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன்
தலைமையில்தலைமைச்செயலாளர், நிதித்துறை செயலாளர்,
பொதுத்துறைசெயலாளர் ஆகியோர் கூடிய அவசர கூட்டம்
நடந்தது.
இதையடுத்து நிதித் துறை செயலாளர் சண்முகம் அனைத்து துறை
முதன்மைச் செயலாளர்களுக்கும் ஓர் உத்தரவை அவசர
அவசரமாக
அனுப்பி வைத்தார். அதில் 6-வது ஊதியக்குழுவில் என்னென்ன
முரண்பாடுகள் இருக்கின்றன. அதை எப்படி தீர்ப்பது என்று
அறிக்கை
அளிக்கும்படி அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது. விரைவில்
ஆசிரியர்கள் பிரச்னை தீரலாம்!”
15 October 2015
ரசு ஊழியர்கள், ஆசிரியர்களின்ஊதிய முரண்பாடுகள்: விபரங்களை நவ.,31 க்குள் அனுப்பி வைக்க அரசு உத்தரவு
அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான 7 வது ஊதிய மாற்றத்தை 2006 ஜன., 1 முதல் தமிழக அரசு செயல்படுத்தியது. இதில் முரண்பாடுஇருப்பதாகவும், அவற்றை களைய வலியுறுத்தியும், அரசு ஊழியர்,ஆசிரியர் சங்கங்கள்
போராடி வருகின்றன.
மேலும் பல்வேறு சங்கங்கள் மற்றும் தனிநபர்கள் சார்பிலும்நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளன.ஊதியமுரண்பாடுகளை ஆராய அரசு நிதிச்செயலர் அனைத்து துறைசெயலர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் 7 வது ஊதியமாற்றத்திற்கு முன் மற்றும் பின் ஒவ்வொரு பதவிகளின் ஊதியகட்டுவிபரம், துறை வாரியாக ஊழியர்களின் எண்ணிக்கை,அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள், காலியிடங்கள், அதிகாரத்திற்குஉட்பட்ட பதவி, பணியாளர்களின் கல்வித்தகுதி, பணி தன்மைஉள்ளிட்ட விபரங்களை நவ.,31 க்குள் அனுப்பி வைக்க வேண்டுமென,தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 October 2015
09 October 2015
ஆசிரியர் சங்கங்களின் போராட்ட அறிவிப்பை எதிர்த்து மனு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
ஆசிரியர் சங்கங்களின் போராட்ட அறிவிப்பை எதிர்த்து தாக்கல்செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ்அனுப்ப,
சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.இதுதொடர்பாக பி.ஆரோக்கியதாஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: தமிழ்நாடு ஆசிரியர்கள்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ("ஜாக்டோ') சார்பில்வியாழக்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்ய ஆசிரியர்களுக்குஅழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனால், பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் குழப்பம்ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த வேலைநிறுத்தப் போராட்டம்சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்தமனுவை விசாரித்த நீதிபதி எம்.எம். சுந்தரேஷ், இது குறித்து தமிழகஅரசு பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டா
07 October 2015
06 October 2015
பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் ஜாக்டோ உயர்மட்ட உறுப்பினர்கள் அளவிலான இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பொழுது 15 அம்சக் கோரிக்கைகளின் மீது தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்ட பதில்
சென்னை பள்ளிக்கல்வி இயக்ககத்தில் இன்று மாலை பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் ஜாக்டோ உயர்மட்ட உறுப்பினர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
இதையடுத்து திட்டமிட்டப்படி அக்டோபர் 8ல் வேலை நிறுத்தம் தொடரும் என ஜாக்டோ அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது கீழ்கண்ட 15 அமசக் கோரிக்கைகளின் மீது தமிழக அரசின் சார்பில் பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களின் பதில் விவரம்
**மொத்தமுள்ள 15 கோரிக்கைகளில் 9 நிதிச் சார்ந்த கோரிக்கைகள் எனவும், 4 பணி சார்ந்த கோரிக்கைகள் எனவும் மீதமுள்ள 2 பொதுவானகோரிக்கைகள் எனவும் எடுத்துரைக்கப்பட்டது. அதில் பணிச் சார்ந்த கோரிக்கைகள் மீது ஆராய்ந்து முடிவெடுப்பதாக தெரிவித்தார்.
**நிதிசார்ந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க நேற்று நிதித்துறைச் செயலாளரை, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்தித்து பேசியுள்ளார் எனவும், இவையனைத்தும் நிதிச்சார்ந்த கோரிக்கைகள் என்பதால் இதுகுறித்து நிதித்துறை தான் முடிவெடுக்க வேண்டுமெனவும்,
**மத்திய அரசிற்கு இணையான இடைநிலை ஆசிரியர் ஊதியம் குறித்து அரசாணை எண்.200ன் படி 6வது ஊதியக் குழுவில் தற்பொழுது முடிவு காண இயலாது எனவும், ஆனால் 7வது ஊதியக் குழுவின் பொழுது தீர்க்கப்படும் என தெரிவித்தார்.
**பங்களிப்பு ஓய்வூதியம் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவை சட்டம் சார்ந்தவை என்பதால் இவைகள் குறித்து தமிழக முதல்வர் அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும் எனவும், இவற்றில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணியி இறந்த மற்றும் ஓய்வுப் பெற்றவர் மற்றும் கடன் பெறுதல் போன்றவைகளுக்கான புதிய வழிக்காட்டுதல்கள் அரசாணை வாயிலாக விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.
**தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் அனைவருக்கும் அவர்கள் நியமனம் செய்த நாள் முதல் பணிவரன்முறை செய்ய விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளது எனவும் இவற்றில் அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு அத்ற்காக சுமார் ரூ.172 கோடி செலவினமாகும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு நிதியுதவிப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் விவரம் தொகுக்கப்படவில்லை, அவைகள் விரைவில் தொகுக்கப்பட்டு விரைவில் அரசுக்கு விவரங்கள் அளிக்கப்படும் என தெரிவித்தார்.
**தமிழ் பாடத்திற்கு முன்னுரிமை அளித்து அதற்கான பணியிடங்கள் முதலில் ஒதுக்க என்ற கோரிக்கைக்கு விரைவில் தீர்வு காண்பதாக பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்தார்.
05 October 2015
வரும் 8ம் தேதி ஆசிரியர்கள் 'ஸ்டிரைக்' பள்ளிகள் உண்டா; மாணவர்கள் குழப்பம்
அரசு பள்ளி ஆசிரியர்கள், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,வரும், 8ம் தேதி, 'ஸ்டிரைக்'கில் ஈடுபடுவதால், அன்று பள்ளிகள்இயங்குமா என,
பெற்றோர் மற்றும் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
ஆசிரியர்களுக்கான, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான, 'ஜாக்டோ' பல கட்டப்போராட்டங்களை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, வரும், 8ம்தேதி, தமிழகம் முழுவதும் ஸ்டிரைக்கில் ஈடுபடப் போவதாகஅறிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு பொதுச்செயலர் பேட்ரிக் ரைமண்ட் கூறும்போது, ''அரசுக்கு எதிராக போராடவேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்தல், தொகுப்பூதிய காலத்தை முறைப்படுத்துதல்போன்ற கோரிக்கைளை அரசு ஏற்காதது வருத்தமானது. இதே நிலைநீடித்தால், ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை என்பதால் தான்இந்த போராட்டம்,'' என்றார்.
தமிழ்நாடு உயர் மற்றும் மேல்நிலை தலைமை ஆசிரியர் சங்க பொதுச்செயலர் சாமி சத்தியமூர்த்தி கூறும்போது, ''போராட்டம் திட்டமிட்டபடிநடக்கும். ஆசிரியர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டுள்ளனர்.பள்ளிகளை மூடுவதோ, மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதோஎங்கள் நோக்கம் அல்ல,'' என்றார்.
காலாண்டுத் தேர்வு விடுப்பு முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கும்நிலையில், 8ம் தேதி பள்ளிகள் உண்டா, விடுமுறையா என,தெரியாமல், பெற்றோர், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.இதுகுறித்து, தமிழக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாமல் மவுனமாகஉள்ளது.
'வாட்ஸ் ஆப்'பில்...:ஜாக்டோ போராட்டத்துக்கு, ஆசிரியர்களும், சங்கநிர்வாகிகளும், 'வாட்ஸ் ஆப்' மூலம் ஆதரவு திரட்டு கின்றனர். 1.50கோடி ஆசிரியர்களின் ஓட்டுகள் தான், அடுத்த அரசை நிர்ணயிக்கும்என்பதால், கோரிக்கையை நிறைவேற்றும் கட்சிக்கே, வரும்தேர்தலில் ஆதரவு என்றும், 'வாட்ஸ் ஆப்' பில், தகவல் அனுப்பிவருகின்றனர்.
03 October 2015
விரைவில் PGTRB : முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களில் இந்த ஆண்டு 600 காலிப் பணியிடங்கள்
அரசுப் பள்ளிகளின் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள்பணியிடங்களில் இந்த ஆண்டு சுமார் 600 பணியிடங்கள் காலியாகஉள்ளன. இவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில்
வெளியிடப்படும் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 2013-14, 2014-15-ஆம் கல்வியாண்டுகளில் காலியான 1,807முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்காக, 2014-ஆம் ஆண்டு நவம்பரில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கானபோட்டித் தேர்வு இந்த ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி நடத்தப்பட்டு,முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம்செய்யப்பட்டனர்.இந்த ஆண்டுக்கான காலிப் பணியிடங்கள், நியமனம்தொடர்பாக சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிடப்படும் எனஎதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்த நிலையில், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில்இந்த ஆண்டு 500 முதல் 600 காலியிடங்கள் உள்ளதாக கல்வித் துறைவட்டாரங்கள் தெரிவித்தன.பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டியுள்ளது.அதன்பிறகு, இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும்அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.பின்னர் முதுநிலைப் பட்டதாரிஆசிரியர் காலிப்பணியிடங்கள் தொடர்பான அரசாணைவெளியிடப்பட்டதும், இதற்கான நடவடிக்கைகளை ஆசிரியர் தேர்வுவாரியம் தொடங்கும்.
பெரும்பாலும், கடந்த ஆண்டு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்போட்டித் தேர்வு நடைபெற்ற அதேகாலத்திலேயே இந்த ஆண்டும்போட்டித் தேர்வு நடைபெற வாய்ப்புள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியஅதிகாரிகள் தெரிவித்தனர்.
விவசாயத் துறை பணியிடங்களை நிரப்புவதில் தாமதம்: பள்ளிக்கல்வித் துறைக்கு விவசாயத் துறையில் பட்டம் பெற்ற 25 முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். இதுதொடர்பாகஅரசாணை உள்ளிட்டவை பிறப்பிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகின்றன.இருப்பினும், இந்தப் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம்நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று பட்டதாரிகள்வேதனையுடன் கூறுகின்றனர். இந்தப் பணியிடங்களை நிரப்பநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதும் அவர்களின் எதிர்பார்ப்பு
02 October 2015
01 October 2015
மாற்று திறனாளிகள் தினம் டிசம்பர் 3 சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்குதல் ஆணை
மாற்று திறனாளிகள் தினம் - அவர்களுக்கு டிசம்பர் 3 சிறப்பு விடுமுறை எடுத்துகொள்ளலாம் சமூக நலம் - ஊனமுற்றோர் நலம் - அரசு / அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து வகை ஊனமுற்றோருக்கும் டிசம்பர்- 3ம் நாள் சர்வதேச ஊனமுற்றோர் தினம் கொண்டாடுவதற்காக சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்குதல் ஆணை G.O.Ms.No.72 Dt: May 26, 2009 டிசம்பர் 3 - சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு - 1 நாள் சிறப்பு தற்செயல் விடுப்பிற்கான தமிழக அரசு ஆணை . அரசாணை நிலை எண்: 72. எண்: 10506/ ஊ.ம 2-2/2008.நாள் 6.11.2008. இந்த அரசானை பொருந்தும்.
உச்ச நீதிமன்ற தடையால் தமிழ் நாட்டடில் 7 வது ஊதிய குழு அமைப்பது கேள்வி குறியே ? - TATA Federation
ஊதிய பிரச்சனையில் உச்ச நீதிமன்ற தடை காரணமாக 6வது ஊதிய முறன்பாடு அரசு தீர்க்க முடியாது .கல்வி துறைசார்பாக டாட்டா சங்க சங்கம் SLP-9109 /2015. ல்
I.A.NO.6/2015.வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

உச்ச நீதிமன்ற தடையால் தமிழ் நாட்டடில் 7 வதுஊதிய குழு அமைப்பது கேள்வி குறியே ? இதோ தடைஆணை ...
யார் கள போராட்டம் செய்தாலும் சென்னை மாநிலசெயற்குழுவில் எடுத்த முடிவு படி டாட்டா முழு ஆதரவு .
தமிழ் நாட்டில் 6 வது ஊதிய குழு அரசு ஆணை 234நிதி நாள் .1.6.2009 ன் படி நடைமுறை படுத்தப் பட்டது .அதில்இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்கனவே பெற்று வந்ததைவிட ரூ 370 குறைவாக நிர்ணயம் செய்யப் பட்டது.தற்காலிகதீர்வாக அரசு ஆணை 258 நிதி .நாள் 27.6.2009 ன் படி 1.1.2006முதல் 31.5.2009 முடிய பணி நியமனம் பெற்றவர்கள்1.86.என்ற விதியை பயன் படுத்தி ஊதியத்தை பெருக்கிநிர்ணயம் செய்து கொள்ள ஆணையிடப்பட்டது .அதன் பின்அரசு ஆணை 444 ன் படி ஊதிய பிரச்சனையை தீர்க்க ஒருநபர் குழு அமைக்கப்பட்டது.இந்த குழு அரசின்கைபாவையாக செயல் பட்டு முரண்பாடான அறிக்கையைஅரசிடம் சமர்பித்தது.இதனால் பாதிக்கப்பட்டவர்கள்நிதிமன்றத்தை நாடினர் .நீதிமன்ற தீர்ப்பு படி அரசு ஆணை123 ன் படி 3 நபர்களை கொண்ட ஊதிய குறைதீர்க்கும் பிரிவுஅமைக்கப்பட்டது .இந்த குழுவும் 4342 பேரிடம் 4 நாளில்விசாரணை செய்து முரண்பாடான பொய்யான அறிக்கைஅரசிடம் கொடுக்கப்பட்டது..டாட்டா சங்கம் தகவல் பெரும்உரிமை சட்டம் மூலம் பல்வேறு ஆதரங்களை சேகரித்துவழக்கு தாக்கல் செய்தது..மேலும் இணையம் மூலம்சேகரித்த தகவலை வெளியிட்டு அனைவரயும்விழிப்படைய செய்த சங்கம் டாட்டா மட்டுமே .
27.2.2014 ல் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியதீர்ப்பு படி 6 வது ஊதிய குழு அறிக்கையை ரத்து செய்துஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 6 ஊதிய குழுமுரண்பாடுகளை தீர்க்க ஆனையிடப்பட்டது..தமிழக அரசின்6 வது ஊதிய குழு தவறானது என உயர் நீதிமன்றத்தில் 3642பேர் வழக்கு நடத்தி உள்ளார்கள் .மேலும் 72,000 இடைநிலைஆசிரியர்கள் பிரச்சனைக்காக உயர் நீதிமன்றத்தில் வழக்கு டாட்டா வும் ,எஸ் எஸ்.டி எ மட்டுமே நடத்தியது .தற்போதுஇந்திய உச்ச நீதிமன்றத்திற்கு டாட்டா மட்டுமே சென்றுஉள்ளது. 5.5 இலச்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்தாலும் 6 வதுஊதிய குழு வுக்கு எதிராக சமரசம் இல்லாமல் வழக்குநடத்துவது டாட்டா சங்கம் மட்டுமே .
அன்பர்களே ஜேம்ஸ் என்ற ஒரே ஒரு உதவிதொடக்க கல்வி அலுவலர் மட்டுமே 2011 ல் இருந்து சட்டபோராட்டம் நீதிமன்றத்தில் நடத்தி இன்று தர ஊதியத்தில்200 ரூபாய் உயர்வு பெற்று உள்ளார்கள் ஒட்டு மொத்த உதவிதொடக்க கல்வி அலுவலர்களுக்கு ஊதிய மாற்றம்செய்யப்பட வில்லை .எனவே சாட்சி டாட்டா சட்டபோராட்டம் கண்டிப்பாக வெற்றி பெரும் .அன்றுஇடைநிலை ஆசிரியர்களுக்கு 1.1.2006 முதல் 9300+4200 எனஊதிய மாற்றம் ஏற்படும் .
மேலும் TET வழக்கு உச்ச நீதிமன்றத்தில்நிலுவையில் இருப்பதால் தமிழ் நாட்டில் தகுதி தேர்வுநடத்த முடியவில்லை ,பணி நியமனம் செய்யமுடியவில்லை .அது போல் 2009 ல் நியமனம் பெற்றஇடைநிலை ஆசிரியர்களுக்குவழக்கு முடியும் வரைபணிமாறுதல் முடியவில்லை .அது போல் 6 வது ஊதியபிரச்சனைக்கு உச்ச நீதிமன்றத்தில் இறுதி முடிவு ஏற்படாதவரையில் தமிழ் நாட்டில் 7 ஊதிய குழு அமைக்க முடியாதநிலை ஏற்பட்டு உள்ளது .இந்த நிலை ஏற்பட காரணம்தமிழக அரசு தான் கரணம் ஆகும் .
மகிழ்ச்சியான செய்தி என்ன வென்றால் 6ஊதிய குழு பிரச்சனைக்கு இறுதி முடிவு வந்த பின்புதான் 7ஊதிய குழு தமிழ் நாட்டில் அமைக்க முடியும் .இதற்குகாரணம் டாட்டா வின் சட்ட போராட்டம் தான் .எனவேகண்டிப்பாக நமக்கு சட்ட போராட்டத்தால் மட்டுமே மாற்றம்ஏற்படும் என்பதை அனைவருக்கும் தெருவித்துகொள்கிறேன் .
டாட்டா கிப்சன்
.9025054081//9443464081..
Subscribe to:
Posts (Atom)