05 October 2015

வரும் 8ம் தேதி ஆசிரியர்கள் 'ஸ்டிரைக்' பள்ளிகள் உண்டா; மாணவர்கள் குழப்பம்

அரசு பள்ளி ஆசிரியர்கள், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,வரும், 8ம் தேதி, 'ஸ்டிரைக்'கில் ஈடுபடுவதால்அன்று பள்ளிகள்இயங்குமா என,
பெற்றோர் மற்றும் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

ஆசிரியர்களுக்கான, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான, 'ஜாக்டோபல கட்டப்போராட்டங்களை நடத்தி வருகிறதுஇதன் தொடர்ச்சியாகவரும், 8ம்தேதிதமிழகம் முழுவதும் ஸ்டிரைக்கில் ஈடுபடப் போவதாகஅறிவித்துள்ளது.

இதுகுறித்துதமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு பொதுச்செயலர் பேட்ரிக் ரைமண்ட் கூறும்போது, ''அரசுக்கு எதிராக போராடவேண்டும் என்பது எங்கள் நோக்கமல்லபங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்தல்தொகுப்பூதிய காலத்தை முறைப்படுத்துதல்போன்ற கோரிக்கைளை அரசு ஏற்காதது வருத்தமானதுஇதே நிலைநீடித்தால்ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை என்பதால் தான்இந்த போராட்டம்,'' என்றார்.

தமிழ்நாடு உயர் மற்றும் மேல்நிலை தலைமை ஆசிரியர் சங்க பொதுச்செயலர் சாமி சத்தியமூர்த்தி கூறும்போது, ''போராட்டம் திட்டமிட்டபடிநடக்கும்ஆசிரியர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டுள்ளனர்.பள்ளிகளை மூடுவதோமாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதோஎங்கள் நோக்கம் அல்ல,'' என்றார்.

காலாண்டுத் தேர்வு விடுப்பு முடிந்துஇன்று பள்ளிகள் திறக்கும்நிலையில், 8ம் தேதி பள்ளிகள் உண்டாவிடுமுறையா என,தெரியாமல்பெற்றோர்மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.இதுகுறித்துதமிழக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாமல் மவுனமாகஉள்ளது.


'வாட்ஸ் ஆப்'பில்...:ஜாக்டோ போராட்டத்துக்குஆசிரியர்களும்சங்கநிர்வாகிகளும், 'வாட்ஸ் ஆப்மூலம் ஆதரவு திரட்டு கின்றனர். 1.50கோடி ஆசிரியர்களின் ஓட்டுகள் தான்அடுத்த அரசை நிர்ணயிக்கும்என்பதால்கோரிக்கையை நிறைவேற்றும் கட்சிக்கேவரும்தேர்தலில் ஆதரவு என்றும், 'வாட்ஸ் ஆப்பில்தகவல் அனுப்பிவருகின்றனர்.

No comments:

Post a Comment