Posted: 23 Feb 2016 07:03 PM PST
TAMIL NADU GOVERNMENT SERVANTS’ FAMILY SECURITY FUND SCHEME – Lumpsum amount payable in case of death of Government servant while in service – Enhancement from Rs.1,50,000/- to Rs.3,00,000/- - Orders - Issued.
G.O.No.57 Dt: February 22, 2016 |
Posted: 23 Feb 2016 07:04 PM PST
GIS - GROUP INSURANCE SCHEME for employees of Local Bodies, Aided Schools, Aided Colleges, Aided Technical Education Institutions including employees working under Nutritious Meal Programme, Panchayat Assistant / part time clerks and other part-time employees like Sanitary Workers, Over Head Tank / Power Pump Operators drawing consolidated pay / honorarium - Enhancement of lumpsum payment from Rs.1,50,000/- to Rs.3,00,000/- - Orders - Issued.
G.O.No.58 Dt: February 22, 2016 |
Posted: 23 Feb 2016 06:45 PM PST
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதையடுத்து தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பவானி, கோபி, பெருந்துறை, அந்தியூர், பவானிசாகர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் 18 லட்சத்து 12 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.
இதற்காக 869 வாக்குசாவடி மையங்களில் 2114 வாக்குசாவடிகள் அமைக்கப்பட உள்ளது.
இந்நிலையில் தேர்தல் பணியில் மாநில அரசு ஊழியர்கள், மத்திய அரசு ஊழியர்கள், தனியார் கல்லூரி ஆசிரியர்கள் என மொத்தம் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்காக துறை அதிகாரிகளிடம் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஊழியர்களின் பெயர் பட்டியலை தயார் செய்து அனுப்பும்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கோரப்பட்டிருந்தது.
இதில் இது வரை 10 ஆயிரம் ஊழியர்களின் பெயர் பட்டியல் மட்டுமே மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பபட்டுள்ளதாகவும், மீதமுள்ள ஊழியர்களின் பட்டியல் இரண்டு நாட்களுக்குள் மாவட்ட தேர்தல் பிரிவுக்கு அனுப்பி வைக்காவிட்டால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பிரபாகர் எச்சரித்துள்ளார்.மேலும் இது வரை அனுப்பி வைக்கப்பட்ட பெயர் பட்டியலில் தேர்தல் பணியாற்ற உள்ள ஊழியரின் வாக்காளர் அடையாள அட்டை எண் பெரும்பாலான ஊழியர்கள் குறிப்பிடாமல் உள்ளதால் வாக்காளர் அடையாள அட்டை எண் குறிப்பிடாதவர்கள் மீண்டும் புதிய பட்டியல் தயாரித்து அனுப்ப வேண்டும் என்று உத்தர விடப்பட்டுள்ளது.
|
Posted: 23 Feb 2016 06:44 PM PST
வழக்கம்போல், எதிர்பார்ப்புக யூகங்களுக்கு விடை தரப்போகும் 2016 - 2017-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் ‘வந்தே தீரும்’ என நம்பப்படும் தகவல் ஒன்று உள்ளது. வருங்கால வைப்பு நிதியில் ஊழியர்களின் பங்களிப்பு பற்றிய சீரமைப்புதான் அந்த தகவல். வரவிருக்கும் இந்த ‘சீரமைப்பில்’ இரண்டு அம்சங்கள் சொல்லப்படுகின்றன.
ஊழியர்கள் பெறும் ஊதியத்தில் 12% என்று உள்ள வைப்பு நிதி சந்தாவை வருமானத்துக்கு ஏற்றாற்போல் திருத்தி அமைப்பது முதலாவது அம்சம். ரூ.15,000 ஊதியம் பெறுவோருக்கு வருங்கால வைப்பு நிதிக்கு மாதாந்திர சந்தா செலுத்துவதிலிருந்து ‘விலக்கு அளிப்பது’ மற்றொரு அம்சம். இந்த இரண்டாவது அமசம் பற்றி அதாவது, ரூ.15,000 ரூபாய் ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு வைப்பு நிதி செலுத்துவதிலிருந்து விலக்குப் பற்றி ஓர் அலசல்.தமிழ்நாடு அரசு ஊழியர்களை உதாரணமாகக் கொள்வோம். இவர்களுக்கான ‘வருங்கால வைப்பு நிதி’ (general provident fund) இது 01.04.1935 முதல் அமலில் உள்ளது. முறையான அரசுப் பணியில் உள்ள அனைவரும் வருங்கால வைப்பு நிதி (general provident) சந்தாதாரர் ஆவது கட்டாயம். எவருக்கும் விதிவிலக்கு கிடையாது.அரசுப் பணியில் சேர்ந்தது முதல் ஓய்வு பெறுவதற்கு நான்கு மாதங்கள் முன்பு வரை, வைப்பு நிதிக்கான சந்தா தொகையானது அந்தந்த மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டு அவரவர் கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிடும்.1976-ல் குறைந்தபட்சம் ரூ.15-ஆகவும் அதிகபட்சமாக ரூ.250-ஆகவும் இருந்தது. 1992-ல் குறைந்தபட்சமாக இருந்த சந்தா வீதம் ரூ.90-ஆகவும், அதிகபட்சம் ரூ.800-ஆகவும் இருந்தது. 2001-ல் குறைந்தபட்சமாக ரூ.360-ஆகவும் அதிகபட்சமாக ரூ.3,120-ஆகவும் இருந்தது. தற்போதைய குறைந்தபட்ச சந்தா தொகை ரூ.1,610-ஆகவும் அதாவது, இன்றைய தேதியில் அமலில் உள்ள சந்தா தொகை 12%.இதன்படி குறைந்தபட்ச ஊதியமான ரூ.6100 மற்றும் இதற்கான 119 சதவிகித அகவிலைப்படி மீது 12% என ரூ.1,610 கிடைக்கும்.12% கணக்கீடு என்பது, ஊழியர் பெறும் அடிப்படை ஊதியம் (Basic pay), தர ஊதியம் (grade pay), தனி ஊதியம் (personal pay), சிறப்பு ஊதியம் (Special Pay) மற்றும் அந்தந்த தேதியில் தரப்படும் அக விலைப்படி ஆகியவற்றின் கூட்டுத் தொகையில் 12% ஆகும்.எப்போதெல்லாம் ஊதிய உயர்வு மற்றும் அகவிலைப்படி உயர்வு தரப்படுகிறதோ, அப்போது சந்தா தொகை, அதற்கேற்ப 12% பிடித்தம் செய்யப்படும். ஊழியர் விருப்பம் தெரிவித்தால், 12 சதவிகிதத்துக்கும் அதிகமான தொகையை வைப்பு நிதி சந்தாவாக செலுத்தலாம். மொத்த ஊதியம் அத்தனையையும்கூட சந்தா தொகை ஆக்கி சேமிக்கலாம், தடை இல்லை. ஆக எல்லா காலகட்டத்திலும் வருங்கால வைப்பு நிதிக்கான சந்தா தொகையானது ஊதியத்தின் அடிப்படையிலேயே நிர்ணயம் செய்யப்பட்டு மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது.
வட்டி!
1976-ல் வருங்கால வைப்பு நிதியில் செலுத்தப்படும் ஊடியர்களின் சந்தா தொகைக்கு தரப்பட்ட வட்டி விகிதம் 8%. இந்த 8 சதவிகித வட்டி விகிதமானது மெல்ல மெல்ல ஊர்ந்து, உயர்ந்து தொண்ணூறுகளில் 12 சதவிகிதமாக நிலைகொண்டது, அது மட்டுமன்றி செலுத்தப்பட்ட சந்தா தொகை இருப்பில் கடன் பெறாத - அதாவது, தொடர்ந்து இரண்டுஆண்டுகள் கடன் வாங்காத - கணக்குகளுக்கு ஒரு சதவிகிதம்போனஸ் வட்டி வழங்கப்பட்டு அதிகபட்ச வட்டி விகிதம் 13சதவிகிதமாக இருந்தது.2000 மாவது ஆண்டு வரை 12% சதவிகிதமாக இருந்த வட்டி, 2001-ல் 11% ஆக இறங்கி, 2002-ல் 9.5 சதவிகிதமாக குறைந்து 2003-ல் 9 சதவிகிதமாக சுருங்கி, 2004-ல் 8 சதவிகிதமாக குறைந்துவிட்டது. மறுபிறவி எடுத்தது போல் 2011-ல் 8.6 சதவிகிதமாக உயர்ந்து 1.4.2012-ல் 8.8 சதவிகிதமாக வளர்ந்த வட்டி விகிதம், 1.4.2013 முதல் மீண்டும் சரிந்து 8.7 சதவிகிதமாக உள்ளது. இந்த வட்டியை அரசுதான் வழங்குகிறது.
வட்டி சிறப்பு!
வேறு எந்த சேமிப்பு முறைக்கும் இல்லாத வட்டி சிறப்பு (Interest speciality) இந்த வருங்கால வைப்பு நிதி சேமிப்புக்கு உண்டு. அதாவது, ஓர் ஊழியரின் ஜனவரி மாதம், பிப்ரவரி மாதம் அல்லது ஆண்டின் ஏதோ ஒரு மாதத்துக்கான ஊதியமானது, அவர் விடுப்பில் இருந்ததாலோ அல்லது வேறு ஏதாவதொரு காரணத்தாலோ ஓரிரு மாதங்கள் தாமதமாக வழங்கப்படலாம். ஊதியம் வரைவு செய்யும்போதுதான் வைப்பு நிதிக்கான சந்தா தொகை பிடித்தம் செய்யப்படும். என்றாலும், ஊதியம் எந்த மாதத்துக்கு உரியதோ அந்த மாதத்திலிருந்தே இந்த சந்தா தொகைக்கு வட்டி கணக்கிடப்படும். இது வருங்கால வைப்பு நிதி வட்டி கணக்கீட்டின் மீதான சிறப்பம்சம்.
ஊழியர் பங்களிப்பை ரத்து செய்யலாமா?
‘ரூ.15,000/- ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு, வருங்கால வைப்பு நிதிக்கு சந்தா செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கலாமா’ என்பது தற்போதைய பரிசீலனை. ‘அப்படி ரத்து செய்தால், அந்த குறைந்த சம்பளத்தினர் ரூ.1,800 சதவிகிதத்தை (அதாவது, இன்றைய நிலையில்) கூடுதலாக வீட்டுக்கு எடுத்துச் செல்வர்’ என்பது இந்தப் பரிசீலனைக்கான உபாயம். வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சம்பளத்தை உயர்த்துவதற்காக இந்த நடைமுறை பரிசீலனைக்கு உள்ளதாக சொல்லப்படுகிறது.ஆனால், நடைமுறை சித்தாந்தம் எதிர்மறையாகத்தான் உள்ளது. அதாவது, குறைந்த சம்பளக்காரர்களின் சம்பளமானது அவ்வப்போது அளவு கூடினாலும், விளைவு கூடுவதில்லை என்பதே நிதர்சனம். எனவே, இந்த 1,800 ரூபாயை வீட்டுக்கு எடுத்துச் சென்று விளையப் போவது அதிகமில்லை, ரூ.15,000 சம்பளம் வாங்குகிறவர்களுக்கு!காணும் பொருள் யாவும் தேவையானதாகத் தோன்றும் கடை வீதியில் கண நேரம் நடந்து சென்றால், ரூ.1,800 அர்த்தமற்று கரைந்து போகலாம். இதைவிட பேரபாயம் ஒன்றும் உண்டு.
செல்ஃப் ஃபைனான்சியர்!
வருங்கால வைப்பு நிதியின் இருப்பில் உள்ள தொகையில் 75% வரை கடன் பெற்றுக்கொள்ளலாம். நீண்ட கால, நிலையான சேமிப்பை இலக்காகக் கொண்டதுதான் வருங்கால வைப்பு நிதி என்றாலும், அவசர பணத் தேவைக்கு அடமானம் ஏதுமின்றி ஆறு மாதத்துக்கு ஒருமுறை கடன் பெற அபயமளிக்கும் செல்ஃப் ஃபைனான்சியர் இந்த வருங்கால வைப்பு நிதிதான். குறைந்த சம்பளத்தினருக்கு வருங்கால வைப்பு நிதியில் விலக்கு அளிக்கப் பட்டால் இந்த செல்ஃப் ஃபைனான்சியர் செத்துப் போய்விடுவார்.
சம்பளத்துக்கு ஏற்ப சந்தா சதவிகிதம்!
இது ஏற்புடைய ஒன்றுதான். ஏனெனில், அகவிலைப்படி (Dearness Allowance) வழங்குவதில் இப்படி ஓர் இரட்டை அணுகுமுறை ஆறாவது சம்பளக்குழு வரை அமலில் இருந்தது. அதாவது, கூடுதல் சம்பளம் பெறுவோருக்கு குறைந்த (சதவிகித) அகவிலைப்படியும், குறைந்த சம்பளத்தினருக்கு கூடுதல் (சதவிகித) அகவிலைப்படியும்தரப்பட்டது. 01.01.1996 முதல் அமலுக்கு வந்த ஆறாவதுஊதியக்குழு பரிந்துரைக்குப்பின் அனைவருக்கும் ஒரே சதவிகித அகவிலைப்படி என்றானது.கூடுதல் சம்பளம் பெறுவோருக்கு வருங்கால வைப்பு நிதியின் சந்தா தொகையில் சதவிகித அளவை அதிகரிப்பதால்,அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடாது. ஏனெனில் அவர்கள் ஏனைய சேமிப்பு முறைகளில் செய்யும் முதலீட்டை வருங்கால வைப்பு நிதிக்கே கூடுதல் சந்தா செலுத்தி பிரிவு 80சி-யின் கீழ் அனுமதிக்கப்படும் வரிக்கழிவை பெற்றுக் கொள்ளலாம்.ஆனால், குறைந்தபட்ச ஊதியமான ரூ.15,000 வரை சம்பளம் பெறுபவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி பங்களிப்பில் இருந்து விலக்கு அளிக்க முற்பட்டால், சேமிக்கவும் சேமிப்பில் கடன் பெறவும் அவர்களுக்கு உள்ள ஒரே வழியும் அடைபட்டுப் போகும். சந்தா தொகையை ரத்து செய்து வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சம்பளத்தை அதிகரிக்கலாம் என்கிற கொள்கை முடிவு ரூ.15,000 சம்பளம் பெறும் ஊதியத்தினரை பொறுத்தமட்டில் பாதகத்தையே ஏற்படுத்தும். குறைந்த சம்பளம் வாங்குகிற அரசு ஊழியர்களை நோகடிப்பதில் என்னதான் இன்பமோ!
|
Posted: 23 Feb 2016 06:43 PM PST
தேசிய மனித உரிமைகள் கமிஷன் தலைவராக பதவி வகித்து வந்த கே.ஜி. பாலகிருஷ்ணன் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். அதன்பின்பு புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை.
இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய மனித உரிமைகள் கமிஷனுக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான குழு கூட்டம் நேற்று டெல்லியில் கூடியது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மத்திய உள்துறை மந்திரி
ராஜ்நாத் சிங், டெல்லி மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், டெல்லி மேல்-சபை துணைத் தலைவர் பி.ஜே.குரியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தேசிய மனித உரிமை கவுன்சில் தலைவராக எச்.எல் தத்து நியமனம் செய்வதற்கான முடிவுக்கு எடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மக்களவையின் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கலந்து கொள்ளவில்லை. குழு கூட்டத்தின் இந்த முடிவு ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பட்டு அவர் அனுமதி அளித்த பிறகே எச்.எல். தத்து தேசிய மனித உரிமை கவுன்சில் தலைவராக நியமிக்கப்படுவார்.
65 வயதான எச்.எல். தத்து கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றார். தேசிய மனித உரிமை கவுன்சில் தலைவராக நியமிக்கப்படும் எச்.எல்.தத்து அந்த பதவியில் 5 ஆண்டுகள் நீடிப்பார்.
|
Posted: 23 Feb 2016 06:42 PM PST
மாணவர்களின் கல்வி நலன் கருதி 8-வது வகுப்பு வரை மாணவ-மாணவிகளை கட்டாய பாஸ் செய்யும் முறையை
ரத்துசெய்யவேண்டும் என்று தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன், மேல்நிலைப்பள்ளி, சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்க பொதுச்செயலாளர் கே.ஆர்.நந்தகுமார்
கூறியதாவது:-
நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன், மேல்நிலைப்பள்ளிகளுக்கு விண்ணப்பித்துள்ள பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கவேண்டும். 3
வருடத்திற்கு ஒரு முறை அங்கீகாரம் புதுப்பிக்கவேண்டியதை 5 வருடமாக நீட்டிக்கவேண்டும்.
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி 8-வது வரை அனைத்து மாணவ-மாணவிகளும் கட்டாயம் தேர்ச்சி செய்து ஆகவேண்டும்.
இதனால் மாணவர்களின் கல்வித்தரம் போய்விட்டது. மாணவர்களுக்கு வாசிக்கக்கூட தெரிவதில்லை. எனவே மாணவர்களின் கல்வி
நலன் கருதி 8-வது வகுப்புவரை கட்டாய தேர்ச்சி என்ற முறையை ரத்து செய்யவேண்டும்.
கட்டாய கல்வி உரிமைசட்டத்தில் பள்ளிக்கூடங்களில் 25 சதவீத ஏழை மாணவர்கள் கல்வி கட்டணம் இன்றி சேர்க்கப்படவேண்டும்.
அவ்வாறு சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய கல்வி கட்டணத்தை பள்ளிக்கு அரசு செலுத்தவேண்டும்.
அதன்படி தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு 2014-2015-ம் ஆண்டு கல்விக்கடன் பாக்கி ரூ.20 கோடியும், 2015-2016-ம் கல்விக்கடன் பாக்கி
ரூ.130 கோடியும் அரசு வழங்க வேண்டும்.
தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழ்பாடப்புத்தகத்தை மட்டுமாவது விலை இன்றி தமிழக அரசு
வழங்கவேண்டும். பள்ளிக்கூடங்களுக்கு கல்வி கட்டணத்தை ஒரே விதமாக நிர்ணயிக்கவேண்டும்.
தரமற்ற சமச்சீர் கல்வியை ரத்துசெய்துவிட்டு சி.பி.எஸ்.இ., என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தை அமல்படுத்தவேண்டும். அதாவது இந்தியா
அளவில் நடத்தப்படும் போட்டித்தேர்வுக்கு தயாராகும் வண்ணம் இமயம் முதல் குமரி வரை ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை
அமல்படுத்தவேண்டும்.
11-வது வகுப்பு மற்றும் 12-வது வகுப்பு பாடத்திட்டத்தை வளரும் இந்திய சூழலுக்கு ஏற்ப புதிய பாடத்திட்டத்தை தமிழ்நாட்டில்
அமல்படுத்தவேண்டும்.
இவ்வாறு நந்தகுமார் தெரிவித்தார்.
|
Posted: 23 Feb 2016 06:41 PM PST
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, ௧௪ வயதுக்கு குறைவானவர்கள் எழுத முடியாது' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில், பள்ளி மாணவர்கள் மற்றும்தனித்தேர்வர்களுக்கு, ஆண்டுதோறும் மார்ச் மற்றும் ஏப்ரலில், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இந்த ஆண்டு, மார்ச் 4ம் தேதி, பிளஸ் 2; மார்ச் 15ம் தேதி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் துவங்குகின்றன
. இந்நிலையில், தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சிலருக்கு, பல காரணங்களால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன.இதில், பள்ளி மாணவர்களுக்கு வயது பிரச்னையே காரணமாக இருந்ததால், அதை சரி செய்து மீண்டும் அனுமதிப்பது குறித்து, தேர்வுத் துறை அதிகாரிகள், மாவட்ட முதன்மை கல்விஅதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.இதன்படி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வை, பள்ளி மாணவர்கள் எழுத, வயது கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர் சான்று அவசியம்l பொதுத்தேர்வு துவங்கும் மார்ச் மாதம், முதல் நாளில், மாணவர்களுக்கு,15 வயது முடிந்திருக்க வேண்டும்l மாணவர்களுக்கு, 14 ஆண்டு,ஆறு மாதம் ஆகியிருந்தால், வயது வரம்பு தளர்வு சலுகை வழங்கலாம்l வயது வரம்பு தளர்வு சலுகையை, மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள்வழங்கலாம். ஆனால், வயதுவரம்பு தளர்வு சான்றிதழ் பெற, மருத்துவரிடம் இருந்து பெற்ற உடல் நிலை தகுதி சான்றை மாணவர் சமர்ப்பிக்க வேண்டும். அதாவது, 'அந்த மாணவர் மன அழுத்தமின்றி, தேர்வு எழுத முடியும்' என,மருத்துவர் கூற வேண்டும்l தனித்தேர்வர்களுக்கு, 14 வயதுபூர்த்தியாகி இருக்க வேண்டும். ஆனால், அவர்களுக்கு வயது குறைவாக இருந்தால், இரண்டு ஆண்டு வரை வயது வரம்புதளர்வு செய்யலாம்.
|
Posted: 23 Feb 2016 06:40 PM PST
'பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், விடைகளை அடித்தால், தேர்வு முடிவும் நிறுத்தப்படும்' என, அடுத்த எச்சரிக்கையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான விதிமுறைகளை, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதன்விவரம் வருமாறு:
● முதன்மை விடைத்தாளின் பக்க எண்ணிக்கை, முகப்பு சீட்டிலுள்ள மாணவர் பெயர், பதிவு எண் மற்றும் புகைப்பட விவரங்களை சரிபார்க்க வேண்டும்
● தேர்வு எழுதும் மேஜை அல்லது பெஞ்சுக்கு அடியில், 'பிட்' எதுவும் இல்லை என்பதை தேர்வர்கள் உறுதி செய்ய வேண்டும்.
● விடைத்தாளின் எந்த பக்கத்திலும், தேர்வு எண், பெயர்விவரங்கள் எழுதக் கூடாது
● கூடுதல் விடைத்தாள் தேவைப்பட்டால், இரண்டு பக்கங்கள் காலியாக உள்ளபோதே கேட்டு வாங்க வேண்டும்
● தேர்வர்கள், ஒரு சில விடைகளை மட்டும் அடித்தால், 'இந்த விடைகள் என்னால் அடிக்கப்பட்டது' என, தேர்வர்கள் பேனாவால் எழுதி, தங்கள் பதிவு எண் எதையும் எழுத வேண்டாம்
● தேர்வர்கள் தான் எழுதிய அனைத்து விடைகளையும் முழுவதுமாக, தானே அடித்து விடும் நிகழ்வு ஒழுங்கீன செயல். அப்படி செய்யும் மாணவர் மற்றும் தனித்தேர்வரின் தேர்வு முடிவுகள் நிறுத்தம் செய்யப்படும். மேலும், அவர்கள் அடுத்து வரும், இரண்டு பருவங்களுக்கு தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே, தேர்வர்கள் தங்களின் அனைத்து விடைகளையும் அடிக்கக் கூடாது.இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையால், மாணவர்கள் பீதியடைந்துள்ளனர். மதிப்பீட்டை உயர்த்தும் தேர்வும் இல்லாமல், 200க்கு 200 மதிப்பெண் பெற வாய்ப்பும் தராமல், தேர்வுத்துறை அச்சமூட்டுவதாக, மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
|
Posted: 23 Feb 2016 06:39 PM PST
|
Posted: 23 Feb 2016 06:35 PM PST
கடந்த 19–ந் தேதி தமிழக சட்டசபையில் முதல்–அமைச்சர்ஜெயலலிதா, பேரவை விதி 110–ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், அரசு ஊழியர்களுக்காக செயல்படுத்தப்படும் குடும்ப நல நிதி திட்டத்தின் கீழ் அவர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் தொகை ரூ.30–ல் இருந்து ரூ.60 என்று உயர்த்தப்படுகிறது.
அதுபோல அந்த ஊழியர் இறந்து விட்டால் அவரது வாரிசுதாரருக்கு வழங்கப்படும் தொகை ரூ.1.50 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுகிறது என்று குறிப்பிட்டார்.இந்த அறிவிப்புக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில்,நிதித்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் கே.சண்முகம் அரசாணை பிறப்பித்துள்ளார். அதில், முதல்–அமைச்சரின் இந்த அறிவிப்பு 1.2.16 அன்றிலிருந்து செயல்பாட்டுக்கு வரும் என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும், அதே தேதியில் மற்றொரு அறிவிப்பையும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார். அதில், உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், அரசு உதவிபெறும் கல்வி நிறுவன அலுவலர்கள், ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர் ஆகியோருக்கு குழு காப்பீட்டு திட்டம் செயல்பட்டு வருகிறது.
ஊழியரின் மரணத்தை அடுத்து, இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காப்பீட்டு தொகையும் ரூ.1.50 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுகிறது என்று குறிப்பிட்டு இருந்தார்.இதுதொடர்பாக கே.சண்முகம் பிறப்பித்துள்ள மற்றொரு அரசாணையில், இந்த தொகையை வாரிசுக்கு எல்.ஐ.சி. நிறுவனம் நேரடியாக வழங்கும். பிப்ரவரி 1–ந் தேதியில்இருந்து இந்த அறிவிப்பு செயல்பாட்டுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது
|
Posted: 23 Feb 2016 06:34 PM PST
அரசு பொதுத் தேர்வில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெறுவதற்காக, மாணவர்கள் சில குறுக்கு வழிகளை கடைபிடிக்கின்றனர். இதை தடுக்கும் வகையில், தேர்வுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு, பெற்றோர் மற்றும் மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள், 'சென்டம்' எனப்படும்,
100 சதவீத மதிப்பெண் பெறுவதற்காக, கடும் முயற்சி எடுக்கின்றனர். தேர்வெழுதும் போது, அதில் சில வினாக்களுக்கு விடை தெரியாவிட்டால், அவர்கள் எழுதிய விடைத்தாள் முழுவதிலும், குறுக்கு கோடிட்டு அடித்து விடுகின்றனர்.இதன் மூலம், அவர்கள் அந்த குறிப்பிட்ட பாடத்தில், 'பெயில்' ஆவதால், உடனடி தேர்வெழுதி, அதில் சென்டம் பெற முயற்சிக்கின்றனர்.
மருத்துவம், இன்ஜினியரிங் படிப்புகளில் சேர்ப்பதற்காக, பிளஸ் 2 மாணவர்களை சென்டம் எடுக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும், 'டுடோரியல்' நிறுவன ஆசிரியர்கள், இது போன்ற, 'ஐடியா'க்களை தருகின்றனர்.மாணவர்களின் இந்த குறுக்கு வழியை தடுக்கும் வகையில், தேர்வுத் துறை, அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 'மாணவர்கள், பொதுத் தேர்வு எழுதிவிட்டு, அந்த விடைத்தாளை குறுக்கு கோடிட்டு, முழுவதுமாக அடித்து விட்டால், அது ஒழுங்கீனமாகக் கருதப்படும். இந்த ஒழுங்கீனத்தில் ஈடுபடும் மாணவர்கள், அடுத்து வரும், இரண்டு பருவத்துக்கு தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.இதற்கு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, பெற்றோர் கூறியதாவது: தேர்வுத் துறை விதிகள் என்ன என்பதை, எந்த பெற்றோருக்கும் தெரிவிப்பதில்லை. எந்த அடிப்படை தகவல்களையும் இணையதளத்தில் வைக்கவில்லை. தேர்வு கால அட்டவணையை கூட பதிவேற்றம் செய்யவில்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், அடிப்படை தகவல்களை, பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இந்த நிலையில், எந்த விதியையும் பின்பற்றாமல், யாரிடமும் கருத்து கேட்காமல், புதிய தண்டனை விவரங்களை தன்னிச்சையாக அறிவித்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை, உடனே வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு பெற்றோர் கூறினர்.'கிரிமினல்கள் போல் பார்ப்பதா?'தமிழ்நாடு பெற்றோர், மாணவர் நல சங்க தலைவர் எஸ்.அருமை நாதன் கூறியதாவது: தேர்வுத் துறை தன் விதிகளை, அனைவருக்கும் தெரியும்படி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டியது அவசியம்.
அதே போல், மாணவர்களுக்கு முன்கூட்டியே விதிகளை அறிவிக்க வேண்டும். ஆனால், எந்த பள்ளியிலும் மாணவர்களுக்கு, விதிகளை விளக்கமாக எழுத்து மூலம் காட்டியது இல்லை. 'விடைத்தாளை அடித்தால், இரண்டு பருவங்களுக்கு தேர்வு எழுத தடை' என்ற அறிவிப்பு, மாணவர்களை விபரீத உணர்வுகளுக்கு கொண்டு செல்லும். மாணவர்களை கிரிமினல்களை போல் பார்க்கும் மனப்போக்கை தேர்வுத் துறை மாற்ற வேண்டும்.
|
24 February 2016
24-02-2016
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment