16 February 2016

16-02-2016 news

Posted: 15 Feb 2016 07:06 AM PST
Posted: 15 Feb 2016 07:04 AM PST
பள்ளி செல்லும் குழந்தைகளில் 10 சதவீதம் பேரிடம் கற்றலில் குறைபாடு காணப்படுகிறது என சென்னை டிஸ்லெக்சியா(கற்றலில் குறைபாடு) சங்கத் தலைவர் டி.சந்திரசேகர் கூறினார்.சென்னை டிஸ்லெக்சியா சங்கம், ரோட்டரி சங்கம் சென்னை- தெற்கு சார்பில் கற்றலில் குறைபாடுடைய குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி
ஆயிரம் விளக்கு ஆசான் மெமோரியல் சீனியர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

சென்னை டிஸ்லெக்சியா சங்கத்தலைவர் டி.சந்திரசேகர் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து பேசியதாவது: பள்ளி செல்லும் குழந்தைகளில் 10 சதவீதம் பேரிடம் கற்றலில் குறைபாடு காணப்படுகிறது. இந்தக் குறைபாட்டை அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள்தான் கண்டறிய வேண்டும். மற்ற குழந்தைகள் போன்று சாதாரணமாகப் படிக்க வைக்க, கூடுதலாக சிறுமுயற்சி மேற்கொள்ள வேண்டும். தற்போது இந்தக் குறைபாடு குறித்து பொதுமக்களிடம் நிறைய விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் உட்பட உலக பிரபலங்கள் பலரும் இந்தக் குறைபாடு உடையவர்கள்தான். இவர்கள் கலை மற்றும் வடிவமைப்பில் ஆர்வமுடையவர்களாக இருக்கின்றனர்.

மற்ற குழந்தைகளுடன் சாதாரண போட்டிகளில் இவர்கள் பங்கேற்க முடிவதில்லை. எனவே இம்மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் சென்னை டிஸ்லெக்சியா சங்கம் ஒருவார நிகழ்ச்சியை நடத்துகிறது.ஓவியம், கோலம், நெருப்பில்லா சமையல், பயனற்ற பொருட்களில் இருந்து கைவினைப் பொருள் தயாரித்தல், இசைமற்றும் நாடகப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படுகிறது.


அத்துடன்வரும் கல்வியாண்டு முதல் இம்மாணவர்களுக்கு தமிழ் வழிக்கல்விப் பயிற்சிகளை வழங்கும் வகையில் முதற்கட்டமாக, சில பள்ளிகளில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றார். அதைத்தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் 3 பிரிவாக நடைபெற்ற ஓவியப் போட்டியில் சுமார் 100 மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கம் சென்னை-தெற்கு உறுப்பினர் மக்தூம் முகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Posted: 15 Feb 2016 07:03 AM PST
தமிழக சட்டசபை நாளை (செவ்வாய்க்கிழமை) கூடுகிறது.தற்போதைய அ.தி.மு.க. அரசின் கடைசி கூட்டத்தொடர் இதுவாகும்.தமிழக சட்டசபைக்கு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போது முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இயலாது. எனவே அரசு செலவுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவும், ஏற்கனவே அறிவித்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.நாளை பகல் 11 மணிக்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்
இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வார். தேர்தலை எதிர்கொள்ள வேண்டியதிருப்பதால் சில முக்கிய அறிவிப்புகளை இடைக்கால பட்ஜெட்டில் அ.தி.மு.க. அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த கூட்டத்தொடர் எத்தனை நாட்களுக்கு நடைபெறும் என்று நாளை காலை சபாநாயகர் தலைமையில் நடக்கும் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். அனேகமாக இந்த வாரம் முழுவதும் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சட்டசபை கூட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ள உள்ளனர். தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து விட்டதால் அனைத்து தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களும் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளது.சட்டசபை கூட்டத்தில் மதுவிலக்கு, அரசு ஊழியர் போராட்டம் உள்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப தி.மு.க.வும், தே.மு.தி.க.வும் திட்டமிட்டுள்ளன. மது விலக்கை அறிவிக்க இரு கட்சிகளும் இந்த கூட்டத்தொடரில் வலியுறுத்தக்கூடும்.அரசு ஊழியர்களை சமரசம் செய்யும் வகையில் பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனவே அரசு ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டம் நீடிக்குமா என்பது நாளை தாக்கலாகும் இடைக்கால பட்ஜெட்டை பொருத்தே அமையும்.எனவே நாளை தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடர் அனைத்துத் தரப்பினரிடமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Posted: 15 Feb 2016 06:52 AM PST
Posted: 14 Feb 2016 07:40 AM PST
வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வட்டி அளிக்கவே, சேமிப்பு கணக்கில் இருக்கும் தொகை, 'டேர்ம் டிபாசிட்' எனப்படும், பருவ கால வைப்புத் தொகையாக மாற்றப்படுகிறது; இதன் மூலம் வாடிக்கையாளர்களே பயன் அடைகின்றனர்' என, எஸ்.பி.ஐ., என்றழைக்கப்படும், பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தை, வாடிக்கையாளர் அனுமதி இல்லாமல் பருவ கால வைப்புத் தொகையாக மாற்றியதாக, புதுக்கோட்டை எஸ்.பி.ஐ., வங்கி கிளை மீது வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டினர்.இதுகுறித்து, எஸ்.பி.ஐ.,யின் சென்னை மண்டல அலுவலக மூத்த அதிகாரி கூறியதாவது:சேமிப்பு கணக்கு துவங்கும் போதே, 'சேமிப்பு கணக்கில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணம் இருந்தால், அதை பருவ கால வைப்புத் தொகையாக மாற்றிக் கொள்ளலாம்' என்ற உறுதி, வாடிக்கையாளர்களிடம் பெறப்படுகிறது. இந்த உறுதி, மல்டி ஆப்ஷன் டிபாசிட் - எம்.ஓ.டி., - பல்வகை வைப்புத் தொகை திட்டம் என அழைக்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ், 'சேமிப்பு கணக்கில் குறைந்த பட்சம் எவ்வளவு தொகை இருக்கலாம்; அதற்கு மேல் பணம் இருக்கும் போது, அதை பருவ கால வைப்புத் தொகையாக மாற்றலாம்' என, உறுதியளிக்க வேண்டும். பருவ கால வைப்புத் தொகையாக எத்தனை நாட்களுக்கு இருக்கலாம் என்ற விருப்பத்தையும் வாடிக்கையாளர் தெரிவிக்கலாம்; வைப்புத் தொகையாக இருக்கும் காலத்திற்கேற்ப வட்டி விகிதம் மாறுபடும்.சேமிப்பு கணக்கில் இருந்து பருவ கால வைப்புத் தொகையாகமாறும் பணத்தை, வைப்புத் தொகை காலம் முடிந்து தான் எடுக்க வேண்டுமென்ற அவசியமில்லை.

இடைப்பட்ட நாட்களிலும் எடுத்துக் கொள்ளலாம்; அதற்கேற்ப வட்டி அளிக்கப்படும்.சேமிப்பு கணக்கில் பணம் இருக்கும் போது, அதற்கு, 4 சதவீத வட்டி கிடைக்கும். பருவ கால வைப்புத் தொகையாக மாறும் போது, குறைந்தபட்சம், 7 சதவீதத்திலிருந்து, வைப்புத் தொகை காலத்துக்கேற்ப வட்டி கிடைக்கும்.புதுக்கோட்டையில் நடந்தது என்ன?புதுக்கோட்டை, எஸ்.பி.ஐ., கிளையில், அரசு ஊழியர்கள், காவல் துறை அலுவலர்களுக்கு, கார்ப்பரேட் ஊழியர் திட்டம் அடிப்படையில் சேமிப்பு கணக்கு துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், வங்கி கணக்கில், 25 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் பணம் இருந்தால் அது பருவ கால வைப்புத் தொகையாக மாறும்.இதற்கான எம்.ஓ.டி., உறுதி, வாடிக்கையாளரிடம் பெறப்பட்டுள்ளது. இந்த வைப்புத் தொகை மாற்றம் குறித்ததகவல், எஸ்.எம்.எஸ்., மூலம் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

மாத ஊதியம் பெறுபவர்களுக்கு,அவர்களின் சேமிப்பு கணக்கு தொகைக்கு கூடுதல் வட்டி அளிக்கும் நோக்கில் இந்த வைப்புத் தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.இப்படி வங்கி கூறினாலும், பெரும்பாலான வாடிக்கையாளர்களிடம் எப்போது உறுதி பெறப்பட்டது என்பது தெரியவில்லை; எஸ்.எம்.எஸ்., சும் அனுப்பப்படவில்லை என்று தெரிகிறது.

No comments:

Post a Comment