14 February 2016

14-02-2016 news

Posted: 13 Feb 2016 09:39 PM PST
சென்னை: ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பு தொடர்பாக, 'ஜாக்டோ' அமைப்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜியோ' மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ' இணைந்து, 15 ஆண்டுகளாக,
பல போராட்டங்களை நடத்தி உள்ளன. இந்த அமைப்புகள், 12 ஆண்டுகளுக்கு முன் நடத்திய வேலைநிறுத்த போராட்டம், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது; 'டெசோ, டெஸ்மா' சட்டங்களும் கொண்டு வரப்பட்டன.இதையடுத்து, 12 ஆண்டுகளுக்கு பின், இந்த இரு அமைப்புகளும் ஒற்றுமையாக, 2015 பிப்ரவரி முதல், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், பேரணி, மறியல், உண்ணாவிரதம், வேலைநிறுத்தம் என, ஐந்து வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றன; ஆனாலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
சில தினங்களுக்கு முன், இரு அமைப்புகளையும் தனித்தனியே அழைத்து, அமைச்சர்கள் குழு பேச்சு நடத்தியது. பேச்சு தோல்வி அடைந்ததால், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அதே நேரத்தில், 'ஜாக்டோ' அமைப்பினரிடம் பேச்சு நடத்திய அமைச்சர்கள் குழுவினர், 'பிப்., 16க்கு பின், கோரிக்கைகளை நிறைவேற்றப்படும்' என, உறுதியளித்தனர்; அவர்கள் அதை ஏற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், 'ஜாக்டோ' அமைப்பில் இடம்பெற்றுள்ள, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, அரசு ஊழியர் சங்கத்துடன் இணைந்து, நாளை முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம், பிப்., 17 முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளது.'ஜாக்டோ' அமைப்பில் உள்ள சங்கங்கள், தனித்தனியே வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரசு, பிப்ரவரி, 16க்குள் எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால், 17 முதல், அரசு ஊழியர் சங்கங்களுடன் இணைந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்.
கே.டி.ஓ.சுரேஷ்
மாநில தலைவர் - முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்
வேலைநிறுத்தம் தொடர்பாக, கூட்டுக் குழுவில் எந்த முடிவும் எடுக்கவில்லை. அமைச்சர்கள் அளித்த வாக்குறுதியை ஏற்று, பிப்., 16 வரை, காத்திருக்க முடிவு செய்துள்ளோம்.
இளங்கோவன்
'ஜாக்டோ' கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர்
Posted: 13 Feb 2016 07:32 AM PST
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு அட்டவணை 15ம் தேதி வெளியாகிறது. 22ம் தேதி செய்முறை தேர்வுகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று முன்தினம் பள்ளிகள் மூலம் விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவியருக்கு தேர்வு பதிவு எண்கள்
ஒதுக்கிய பட்டியலும் பள்ளிகளுக்கு வந்து சேர்ந்துள்ளன. வரும் 22ம் தேதி முதல் 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு செய்முறை தேர்வுகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
அறிவியல் பாடத்தில் இயற்பியல் வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் இருந்து கேட்கப்படும் சோதனைகள் தொடர்பான அட்டவணைகள் 15ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் வர உள்ளன. இதை அடிப்படையாக வைத்து 22ம் தேதி செய்முறை தேர்வுகள் தமிழகம் முழுவதும் தொடங்கி மார்ச் 5ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Posted: 13 Feb 2016 07:30 AM PST
சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் கடந்த 4 நாட்களாக தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி கூட்டமைப்பில் இடம்பெற்ற சங்கங்கள் ஒன்று சேர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டத்தை நடத்தின.இந்த நிலையில் இந்த கூட்டமைப்பு இரண்டாக உடைந்தது. அதில் இடம் பெற்ற பழனிசாமி, டெய்சி ஒரு அணியாகவும், மு.வரதராஜன், ராஜேந்திரன், ஆறுமுகம், மீனாட்சி, முருகேஸ்வரி ஆகியோர்
ஒரு அணியாகவும் பிரிந்தனர்.வரதராஜன் தலைமையிலான சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கத்தினர் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் இருந்து விலகி கொண்டனர். போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்து இருப்பதாக அறிவித்துள்ளனர்.இதுகுறித்து மு.வரதராஜன் கூறியதாவது:–சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கைகளை நிறை வேற்றக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டோம். நேற்று நடந்த மறியல் போராட்டத்தில் பழனிசாமி மக்கள் நலக்கூட்டணிக்கு ஆதரவாக சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களை திசை திருப்பி கொண்டு சென்றார். அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அதனால் கூட்டமைப்பில் இருந்து விலகி போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கிறோம்.சட்டசபை கூட்டத் தொடரில் முதல்– அமைச்சர் எங்கள் கோரிக்கை குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று நம்புகிறோம். சாதகமான அறிவிப்பு இல்லை என்றால் அடுத்தக்கட்டமாக கூடி முடிவு செய்வோம் என்றார்.
Posted: 13 Feb 2016 07:28 AM PST
Posted: 13 Feb 2016 07:27 AM PST

Posted: 13 Feb 2016 07:27 AM PST
டேக்-ஹோம் சம்பளம் இனி உயர வாய்ப்பு: பி.எஃப். முறையை மாற்ற மத்திய அரசு யோசனைஊழியர்கள் வருங்கால வைப்பு நிதிக்காக மாத வருவாயிலிருந்து ஊழியர்கள் பங்களிப்பாக பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்புநிதி
12% ரத்து செய்யப்பட வாய்ப்பு.

வருங்கால வைப்புநிதிக்காக சம்பளத்திலிருந்து ஊழியர்கள் பங்களிப்பாக 12% பிடிக்கப்படுவதற்கு சம்பள மட்டத்தில் உச்சவரம்பு நிர்ணயம் செய்ய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உதாரணத்திற்கு மாதாந்திர சம்பளம் ரூ.15,000 பெறுபவர்களின் கட்டாயப் பி.எஃப். பிடித்தத்திற்கு ஒரு முடிவு வரும் என்று வரும் பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி அமைத்த செயலாளர்கள் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரி ஒருவர் தெரிவிக்கும்போது, “ஒரு குறிப்பிட்ட அளவு சம்பளம் வரை வருங்கால வைப்பு நிதிக்காக ஊழியர்கள் பங்களிப்பாக பிடிக்கப்படும் தொகையை முழுதும் ரத்து செய்யலாம் என்று நாங்கள் பரிந்துரை செய்துள்ளோம். இதனால் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சம்பளம் அதிகமாகும். எல்லா விதமான சம்பளதாரர்களுக்கும் பி.எஃப் ஒரே அளவில் பிடிக்கப்படுவதால் குறைந்த சம்பளம் வாங்குபவர்கள் அதிக தொகையை பி.எஃப். பிடித்தத்திற்கு கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது” என்றார்.
தற்போது ரூ.15,000 மாத வருமான உடையவர்களின் பி.எஃப். பிடித்தத்தில் ஊழியர்கள் பங்களிப்பு, பணியாற்றும் நிறுவனத்தின் பங்களிப்பு என்று 24% பிடிக்கப்படுகிறது.

இதனால் ரூ.15,000 மாதச்சம்பளம் பெறுபவர்களின் ஊழியர் பங்களிப்பான 12% பி.எஃப்-க்கு முழு விலக்கு அளித்துவிட்டால் அவர்கள் கூடுதலாக மாதம் ரூ.1800 வரை குடும்பத்துக்கு எடுத்துச் செல்ல வழிவகை செய்யப்படும். இதனை வரி விலக்கு ஒப்பானது என்று இந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Posted: 13 Feb 2016 07:26 AM PST
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு அட்டவணை 15ம்தேதி வெளியாகிறது. 22ம் தேதி செய்முறை தேர்வுகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று முன்தினம் பள்ளிகள் மூலம் விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவியருக்கு தேர்வு பதிவு எண்கள் ஒதுக்கிய பட்டியலும் பள்ளிகளுக்கு வந்து சேர்ந்துள்ளன
.
வரும் 22ம் தேதி முதல் 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு செய்முறை தேர்வுகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.அறிவியல் பாடத்தில் இயற்பியல் வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் இருந்து கேட்கப்படும் சோதனைகள் தொடர்பான அட்டவணைகள் 15ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் வர உள்ளன. இதை அடிப்படையாக வைத்து 22ம் தேதி செய்முறை தேர்வுகள் தமிழகம் முழுவதும் தொடங்கிமார்ச் 5ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Posted: 13 Feb 2016 07:25 AM PST
2015-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தொடக்கக் கல்விப் பட்டயத் தேர்வு எழுதிய பயிற்சி மாணவர்கள், தனித் தேர்வர்கள் விடைத்தாளின் மறுகூட்டல், நகல் கோரி செவ்வாய்கிழமை (பிப்ரவரி 16) முதல் 20 வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தரா தேவி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:-
விடைத்தாளின் நகல் பெறப்பட்ட பின்னர், அதைத் தொடர்ந்து, விருப்பமுள்ள தேர்வர்கள், மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்யவும் www.tndge.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், குறிப்பிட்டுள்ள கட்டணத் தொகையும் மேற்குறிப்பிட்ட நாள்களில் தாங்கள் பயின்ற மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனங்களில் நேரடியாகச் செலுத்தி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
Posted: 13 Feb 2016 07:25 AM PST
கும்பகோணத்தில் மகாமகம் பெருவிழாவையொட்டி10நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் பிப்ரவரி 24ஆம்தேதிவரைவிடுமுறை அளித்துமாவட்ட நிர்வாகம்உத்தரவிட்டுள்ளது.
கும்பகோணத்தில் மீண்டும் பிப்ரவரி25ஆம்தேதிபள்ளிகளில் திறக்கப்படும் என்று மாவட்டஆட்சியர்அறிவித்துள்ளார். மாகமகம் பெருவிழாபாதுகாப்புக்காக வரும்போலீசார், பள்ளிகளில்தங்குவதால்விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Posted: 13 Feb 2016 07:24 AM PST
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10–ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று தமிழகம் முழுவதும் மறியலில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.தொடர்ந்து நடைபெறும் அரசு ஊழியர் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆதரவு அளித்துள்ளது.
அந்த சங்கத்தைச் சேர்ந்த மாநில தலைவர் மோசஸ் 15–ந்தேதி (திங்கட்கிழமை) முதல் ஆசிரியர்களும் போராட்டத்தில் குதிப்பதாக அறிவித்துள்ளார்.இன்றும் (சனி) நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) அரசு விடுமுறை என்பதால் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் ஒவ்வொரு மாவட்ட தலை நகரங்களிலும் எழுச்சி கூட்டம் நடத்துகின்றனர். 15–ந்தேதி முதல் மீண்டும் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.மறியல் போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிகளவில் பங்கேற்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் மாநில நிர்வாகிகள் சென்று அரசு ஊழியர்களை சந்தித்து போராட்டத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.இதுகுறித்து அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் இரா.தமிழ்செல்வி கூறியதாவது:–தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் 3 லட்சம் பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எங்களின் போராட்டத்திற்கு ஆசிரியர் கூட்டணி ஆதரவு தெரிவித்து உள்ளது. திங்கட்கிழமை முதல் அரசு ஊழியர்களுடன் ஆசிரியர்களும் மறியலில் ஈடுபடுவார்கள்.இன்றும் நாளையும் மாவட்ட தலைநகரங்களில் எழுச்சி கூட்டம் நடக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் நடக்கும் கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன். காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியம் பங்கேற்கிறார்.எங்கள் போராட்டத்திற்கு தலைமை செயலக ஊழியர் சங்கம் தார்மீக ஆதரவு அளித்துள்ளது. திங்கட்கிழமை முதல் போராட்டம் தீவிரமாகும்.அமைச்சர்கள் 9–ந்தேதி எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி 11–ந்தேதி அறிவிப்பதாக கூறினார்கள். ஆனால் இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை.எங்களது 20 கோரிக்கைகளில் 4 மட்டும் முதல்– அமைச்சர் தலையிட்டு அரசாணை வெளியிடுவது தொடர்பானதாகும். மற்ற கோரிக்கைகள் துறை அதிகாரிகளின் மெத்தன போக்கு மற்றும் குறைபாடுகளை களைவது சம்பந்தமாகும். எனவே 4 முக்கிய கோரிக்கைகளை மட்டும் முதல்–அமைச்சர் ஏற்று அரசாணை வெளியிட வேண்டும். எனவே கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்களது போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment