13 August 2015

sted: 12 Aug 2015 05:55 PM PDT

் -படித்து விட்டு பகிரவும் நண்பர்களே!!!!!!!
பள்ளி மாணவர்களுக்கு வேட்டி சட்டை .... சீருடை !
'' மதுரையில் .. டி.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் மேல்நிலைப் பள்ளி i சீருடை.... வேட்டி சட்டை தான் !
இந்தியா சுதந்திரம் பெறுவதற்குச் சரியாக நான்கு நாட்களுக்கு முன் தொடங்கப்பட்ட பள்ளி இது.
அந்தப் பள்ளியின் மாணவர்கள். சாலையில் அணி அணியாக நடந்து வந்தால், ஏதோ அரசியல் கட்சி ஊர்வலமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
அவர்கள் உடுத்தி இருப்பது சாரதி வேட்டியோ, பாலியெஸ்டர் வேட்டியோ கிடையாது.
கதர் வேட்டிதான்.
வேட்டிகளைத் துவைக்க கதர் சோப் தயாரிக்கும் முறையையும் பள்ளியிலேயே கற்றுக் கொடுக்கிறார்கள்.
பள்ளியில் ஆசிரியைகளை 'அக்கா’ என்றும்,
ஆசிரியர்களை 'ஐயா’ - என்றும் உறவு சொல்லி அழைக்கிறார்கள் மாணவ- மாணவிகள்.
தலைமை ஆசிரியருக்கும் விதிவிலக்கு கிடையாது.
வகுப்பு மாணவர்கள் வேட்டி அணிவதைப்போல, மாணவிகள் பாவாடை தாவணி அணிகிறார்கள்.
சிறு குழந்தைகளும்கூட வாரத்தில் மூன்று நாட்கள் கதர் ஆடை மட்டுமே அணிகிறார்கள்.
திங்கள் கிழமை தோறும் நடக்கும் கொடி வணக்கத்தின்போது, பல்வேறு தேச பக்திப் பாடல்களை மாணவர்கள் பாடுவார்கள்.
புதன்தோறும் நடைபெறும் சர்வ சமயப் பிரார்த்தனைக் கூட்டத்தில் பைபிள், பகவத் கீதை, குர்ஆன், திருக்குறளையும் சேர்த்து வாசிப்பார்கள்.
ஒழுக்கத்துக்குப் பேர் போன பள்ளி இது.
காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளின்போது மாணவர்களை கண்காணிக்கவே தேவை இல்லை.
காப்பி அடிக்காமல் சுய ஒழுங்கைக் கடைப்பிடிப்பார்கள்.
பொதுத் தேர்வில் பங்கு ஏற்கும் மாணவர்கள் தங்களது பெற்றோரைப் பள்ளிக்கே அழைத்து வந்து ...
பாத பூஜை செய்யும் வழக்கமும் இங்கே உண்டு.
மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் அக்டோபர் 8-இல் வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு பல்வேறு கட்டங்களாக
போராட்டம் நடத்தி வருகிறது. இந்த நிலையில், அடுத்தகட்டப் போராட்டம் குறித்து விவாதிப்பதற்காக சென்னையில் இந்தக் குழுவின் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பாக அதன் பொறுப்பு பொதுச்செயலர் க.செல்வராஜ் அவர்கள் கலந்து கொண்டார்

 அடுத்தகட்டமாக, வரும் அக்டோபர் 8-ஆம் தேதி அன்று  தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் ஒருநாள் அடையாளபொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி  பொறுப்பு பொதுச்செயலர் க.செல்வராஜ் அவர்கள் தெரிவித்தார். 



இது தொடர்பாக அந்த இயக்ககம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தனித் தேர்வு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 6 வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையத்துக்குச் சென்று ஆகஸ்ட் 17 முதல் 26 வரை இணைய வழி மூலமாக இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
நேரடித் தனித் தேர்வர்கள், பிற பாடத்திட்ட தனித் தேர்வர்களுக்கு சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ் அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வு உண்டு. எனவே, அறிவியல் பாடத்தில் செய்முறைப் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே இப்போது எழுத்துத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
அரசுத் தேர்வு சேவை மையங்களின் விவரங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலகளிலும், அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களிலும் அறிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு பொது மாறுதல் கலந்தாய்வு ஆக., 12 முதல் செப்., 16 வரை நடக்கின்றன. இதற்காக ஆக.,7 வரை ஆசிரியர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. கலந்தாய்வில் பங்கேற்க சம்பந்தப்பட்ட ஆசிரியர் அந்த பள்ளியில் குறைந்தபட்சம் மூன்று கல்வியாண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு 1.6.2012 தகுதி நாளாக அறிவிக்கப்பட்டது.
இதற்கு ஆசிரியர்களிடம் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து குறைந்தபட்சம் ஒருகல்வியாண்டு போதும் என நிபந்தனை தளர்த்தப்பட்டது. இதன்படி 1.6.2014 தகுதி நாளாக அறிவுறுத்தப் பட்டது.ஆனால் கடந்தாண்டில் பங்கேற்றோர் இந்தாண்டு பங்கேற்க முடியாத நிலையுள்ளது
.
2013-14ம் கல்வியாண்டு தாமதமாக ஜூன் 17ல் கலந்தாய்வு நடந்தது குறிப்பிடத்தக்கது. 2012-13 கல்வியாண்டு தாமதமாக கலந்தாய்வு நடந்தது. அதற்காக 2014ல் நடந்த கலந்தாய்வில் ஜூன் முதல் தேதி குறிப்பிடாமல் 'சிறப்பு தகுதி நாள்' அறிவிக்கப்பட்டது. இந்தாண்டிற்கு அதுமாதிரி அறிவிப்பு இல்லை. இதனால் கடந்தாண்டு கலந்தாய்வில் பங்கேற்றவர் இந்தாண்டு பங்கேற்க முடியாது. பதவி உயர்வு பெறுவதில் பிரச்னை இல்லை. மூன்று கல்வியாண்டு என்ற நிபந்தனை ஓராண்டாக குறைக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் இரண்டு ஆண்டுகள் பங்கேற்க முடியாது.

செப்டம்பர் 28 - மொழிப்பாடம் தாள்-1,
செப்டம்பர் 29 - மொழிப்பாடம் தாள்-2,
செப்டம்பர் 30 - ஆங்கிலம் தாள்-1,
அக்டோபர் 1 -  ஆங்கிலம் தாள்-2,
அக்டோபர் 3 -  இயற்பியல், பொருளியல்,
அக்டோபர் 5 -  கணிதம், விலங்கியல், நுண் உயிரியல், ஊட்டச் சத்து- உணவுக்                கட்டுப்பாடு,

அக்டோபர் 6 -  வணிகவியல், மனை அறிவியல், புவியியல்,
அக்டோபர் 7 -  வேதியியல், கணக்குப் பதிவியல்,
அக்டோபர் 8 -  உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம்,
 அக்டோபர் 9 -  தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கணினி அறிவியல்,                  உயிரி வேதியியல், அட்வான்ஸ்டு தமிழ்,
அக்டோபர் 10 - அனைத்து தொழில் பிரிவு தியரி, அரசியல் அறிவியல்,                        செவிலியர் பாடம் (பொது), புள்ளியியல்.

இந்த கல்வியாண்டு (2015-16) பி.எட். சேர்க்கை எப்போது நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், கல்வியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.பி.எட். படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக அதிகரிக்கபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு மீதான விசாரணை நவம்பருக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதால்
, கலந்தாய்வு மேலும் தள்ளிப்போகும் அபாயம் எழுந்துள்ளதாகவும் ஆசிரியர் கல்வியியல் கல்லூரி பேராசிரியர்கள் தெரிவித்தனர்.


பி.எட். மாணவர் சேர்க்கை ஜூலை மாதம் தொடங்கப்பட்டு வகுப்புகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கப்பட வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்சிடிஇ) அறிவுறுத்தியுள்ளபோதும், தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் கலந்தாய்வு நடத்தப்பட்டு, செப்டம்பரில் வகுப்புகள் தொடங்குவது வழக்கமாக இருந்து வந்தது.


இந்த நிலையில், என்.சி.டி.இ.-யின் புதிய வழிகாட்டுதலின்படி (2014 வழிகாட்டுதல்) பி.எட். படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது.
தமிழகத்தில் இதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. புதிய வழிகாட்டுதலை நடைமுறைப்படுத்த கால அவகாசமும் கோரப்பட்டது.ஆனால், என்.சி.டி.இ. இதற்கு திட்டவட்டமாக மறுத்துவிட்டது. அதே நேரம் தமிழகம் தவிர பிற மாநிலங்களில் புதிய வழிகாட்டுதல் அமலுக்கு கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில், பி.எட். இரண்டு ஆண்டுகளாக உயர்த்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரி நிர்வாகிகள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இப்போது நிலுவையில் உள்ளது.

இதனிடையே தமிழக அரசு அரசாணை ஒன்றை பிறப்பித்தது. அதில் வரும் 2015-16 கல்வியாண்டு முதல் இரண்டு ஆண்டு பி.எட். படிப்புக்கான பாடத் திட்டத்தை அமல்படுத்த அனுமதி அளித்தது. மேலும் ஜூலை முதல் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் பிறப்பிக்கப்படும் உத்தரவையும் பின்பற்ற வேண்டும் எனவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம்,2015-16 கல்வியாண்டுக்கான பி.எட். கலந்தாய்வு நடத்த திட்டப் பணிகள் அனைத்தையும் முடித்து நடத்த தயாராக உள்ளது.இந்த நிலையில், சுயநிதி கல்லூரி நிர்வாகிகள் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை நவம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

இதன் காரணமாக பி.எட். சேர்க்கை மேலும் தள்ளிப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து ஆசிரியர் கல்வியியல் கல்லூரி நிர்வாகிகள் கூறியதாவது: படிப்புக் காலம் முதன் முறையாக 2 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறபோது, அதற்கான பாடத் திட்டம் சேர்க்கை நடைபெறுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரே அனைத்து கல்லூரிகளுக்கும் குறிப்பாக தன்னாட்சி கல்லூரிகளுக்கு அளிக்கப்படவேண்டும் என்பதோடு, உரிய அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.ஆனால், இதுபோன்ற எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. நீதிமன்றத்திலும் வழக்கு விசாரணை நவம்பருக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

அதே நேரம், ஓரிரு நாள்களில் கலந்தாய்வுக்கான அறிவிப்பை வெளியிட்டு, வருகிற வெள்ளிக்கிழமை (ஆக.14) முதல் விண்ணப்ப விநியோகத்தை தொடங்குமாறு வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், உயர் கல்வித் துறையை அறிவுறுத்தியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபோன்ற காரணங்களால், 2015-16 கல்வியாண்டில் தமிழகத்தில் பி.எட். படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு. எனவே, நிகழாண்டில் பி.எட். ஓராண்டாகவே இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது 
 என்றனர்.

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 3 ஆயிரம் ஆசிரியர்கள் கூடுதலாக பணியாற்றிவருவதாக தகவல் தெரிவிக்கின்றது.அரசு பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது. மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பள்ளிக் கல்வித்துறை தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.


பல இடங்களில் தமிழ் வழி கல்வி மட்டுமின்றி ஆங்கில வழி கல்வி பாடத் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. ஆனாலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைகிறது.
மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால் தொடக்க கல்வி துறையில் ஆசிரியர் நியமனமும்கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. பல்வேறு கட்டங்களாக இந்த மாதம் இறுதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வு நடத்துவதற்கு முன்னதாக காலிப்பணியிடங்கள் கணக்கெடுக்கப்பட்டன.அதில் கடந்த ஆண்டை விட மிக குறைந்த அளவில் தான் ஆசிரியர் காலி பணியிடங்கள் இருப்பதும் தெரிய வந்தது.இதற்கிடையில் ஆசிரியர் – மாணவர் விகிதாச்சார முறையில் கணக்கெடுக்கும் பணியும் கடந்த 1–ந்தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.

1–8.2015–ன்படி ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்கள் எத்தனை பேர் வகுப்பு வாரியாக, பாட வாரியாக பணியாற்றுகிறார்கள், மாணவர்கள் எண்ணிக்கை எவ்வளவு உள்ளது என்பதை தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அதிகாரிகளிடமும், முதன்மை கல்வி அதிகாரிகளிடமும் வழங்கி வருகின்றனர்.இதுவரையில் 3 ஆயிரம் ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதாச்சாரத்தை விட கூடுதலாக இருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு மாவட்டம் வாரியாகஉபரி ஆசிரியர்கள் பட்டியல் கணக்கெடுக்கப்படுகிறது.பல பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள்தான் மாணவர்கள் விகிதாச்சாரத்தை விட கூடுதலாக உள்ளனர். இதனால் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் அளிப்பது பள்ளிகல்வித்துறைக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.

முதலில் உபரி ஆசிரியர்களை மாவட்டத்திற்குள் பணி நிரவல் செய்யவும் அதற்கும் மேலாக இந்த எண்ணிக்கை இருந்தால் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு மாற்றம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.ஆகையால் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நிரவல், முடிந்த பிறகு தான் இட மாறுதல் கலந்தாய்வு நடைபெற வாய்ப்பு உள்ளது. அதுவும் மிகப்பெரிய அளவில் இட மாறுதல் கலந்தாய்வு இருக்காது என்றே கூறப்படுகிறது




பணிமாறுதல் கவுன்சலிங்குக்கு, விண்ணப்பித்தவர்களுக்கு, இரண்டு நாள் வரை ஆன்டூட்டி சலுகை வழங்கப்படுகிறது. பல ஆசிரியர்கள் கவுன்சலிங்கில் கலந்து கொள்ளாமல், இச்சலுகையை, "ஓ.பி.,' அடிக்க பயன்படுத்துவதால், தலைமை ஆசிரியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

தமிழகத்தில், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளும், ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. இவற்றில் பணிபுரியும் ஆசிரியர்களுக்காக, ஆண்டுதோறும் பொது இடமாறுதல்
கவுன்சலிங் நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில், அனைத்து மாவட்டங்களிலும், ஆக., 12ம் தேதி துவங்குகிறது.இதற்கான விண்ணப்பங்கள், கடந்த ஆக., 7ம் தேதி வரை ஆசிரியர்களிடம்இருந்து பெறப்பட்டது.

தொடக்கக்கல்வித்துறையில், ஒன்றியம், மாவட்டம் மற்றும் மாவட்டத்துக்கு வெளியே என, மூன்று பிரிவாக நடக்கும் கவுன்சலிங்கில், இரண்டில் கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பித்த கவுன்சலிங் நடக்கும் தினங்களில், பள்ளிகளில், "ஆன் ட்யூட்டி' அனுமதிக்க விதிமுறை உள்ளது. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, கவுன்சலிங் தினத்தில், உண்மையிலேயே மாறுதல் பெற விரும்பாத ஆசிரியர்களும், "ஆன் ட்யூட்டி' சலுகைக்காக விண்ணப்பித்துள்ளனர். இதனால், பள்ளிகளில் அன்றைய தினம், ஆசிரியர்கள் இல்லாமல், தலைமை ஆசிரியர்கள் தவிக்கும் நிலை உருவாகிறது.

இதுகுறித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: கவுன்சலிங்கில் கலந்து கொண்டு, மாறுதல் பெறும் ஆசிரியர்களுக்காக,"ஆன் ட்யூட்டி' சலுகையும், வேறு இடத்தில் சேர்வதற்கான கால அவகாசமாக, 5 நாள் சலுகையும் வழங்கப்படுகிறது. இதை பெற வேண்டும் என்பதற்காகவே, பல ஆசிரியர்கள் கவுன்சலிங்கில் விண்ணப்பிக்கின்றனர். கவுன்சலிங்குக்கு விண்ணப்பித்தவர்கள், வேறு இடங்களுக்கு மாறுதல் பெற வேண்டிய கட்டாயம் இல்லை என்பதால், கவுன்சலிங் முடிந்ததும் மீண்டும் பழைய பள்ளிக்கே வந்துவிடுகின்றனர். கடந்த, ஏழு ஆண்டுகளாக,ஒரு ஆசிரியர் ஆண்டுதோறும் கவுன்சலிங்குக்கு விண்ணப்பித்து, இரு நாள் ஆன்ட்யூட்டியில் பள்ளிக்கு வருவதில்லை.

அதே சமயம், மாறுதலும் பெறவில்லை. இதே போல், ஏராளமான ஆசிரியர்கள், ஓ.பி., அடிக்கின்றனர். உதாரணமாக, 400 பேர் விண்ணப்பித்திருந்தால், 100க்கும் குறைவாகவே பணிமாறுதல் பெறுகின்றனர்.இதனால், அன்றைய தினம் பள்ளிகளில் கல்விப்பணிகள் பாதிக்கப்படுகின்றன. பணிமாறுதல் பெறாத ஆசிரியர்களின் ஆன் ட்யூட்டி சலுகையை விடுமுறையாக கழிக்கும் வகையில், நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, தேவையில்லாமல், ஓ.பி., அடிப்பதை தடுக்க முடியும். கல்விப்பணிகளும் பாதிக்காமல் இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
Po 

No comments:

Post a Comment