30 March 2015

அரசாணை எண்.62க்கு வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி இயக்குநரிடம் கோரிக்கை

அரசாணை எண்.62ல் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும்ஆசிரியர்களுக்கு ஈடு செய்யும் விடுமுறை வழங்க தமிழகஅரசால் ஆணையிடப்பட்டதுஆனால்
விடுமுறை வழங்குவது சார்பாக சில ஒன்றியங்களில்முரண்பாடு எழுந்துள்ளதால்தமிழக அரசு அரசாணைவழங்கியும் அதை அனுபவிக்க இயலாத சூழ்நிலைக்குஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதையடுத்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மாநிலபொருளாளர் திரு.தே.அலெக்சாண்டர் மற்றும் மாநில தலைமைநிலைய செயலாளர் திரு..சாந்தகுமார் ஆகியோர் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களை சந்தித்து மனு அளிக்க சென்றனர்.ஆனால் இயக்குனர் தேர்வு பணியில் இருப்பதால்அவரின் தனிசெயலாளரிடம் இதுகுறித்து வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்ககோரிக்கை மனு அளிக்கப்பட்டதுஇதுகுறித்து உடனடியாகஇயக்குனரிடம் கலந்து பேசி நெறிமுறைகள் வழங்குவதாகஉறுதியளித்துள்ளார்.

எம். காம்.,பி.எட்.,முடித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் பெற தகுதி இல்லை - தொடக்க கல்வி இணை இயக்குனரின் RTI- ...தகவல்!

27 March 2015

தொடக்கக் கல்வி - இடை நிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் விண்ணப்பம்

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு விண்ணப்பப் படிவம்

AEEO TRANSFER APPLICATION

பள்ளி கல்வித்துறை பொது மாறுதல் விண்ணப்பம்

தொடக்கக்கல்வித்துறை மாறுதல் விண்ணப்பம்

தொடக்கக்கல்வித் துறை | மனமொத்த மாறுதல் கோரும் விண்ணப்பம் (Mutual Transfer Application Model)

அனைவருக்கும் கல்வி இயக்கம் - ஆசிரியர் பயிற்றுநர் விருப்ப மாறுதல்-விண்ணப்பம்

புதிய ஓய்வூதிய திட்டத்தில் ( CPS )உள்ளவர்களுக்கு இயலாமை ஓய்வூதியம் (Invalid Pension ​) மற்றும் பணிக்கொடை (Gratuity )வழங்கும் மத்திய அரசு -RTI -கடிதம்

நன்றி-திரு-பிரடெரிக் ஏங்கல்ஸ் -திண்டுக்கல்

தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பி.எட்., படிக்கும் நேர்வுகளில், கற்பித்தல் பயிற்சியினை அவர்கள் பணிபுரியும் பள்ளிகளிலேயே 6,7 மற்றும் 8 வகுப்புகளில் மேற்கொள்ள அரசு உத்தரவு

24 March 2015

தெரிந்து கொள்ளுங்கள் - அரசாணைகள் தொகுப்பு விபரம் கேள்வி பதில்

 ஆசிரியர் வருங்கால வைப்புநிதியில் (TPF) இருந்து எவ்வளவு வேண்டுமானாலும் தற்காலிக முன்பணமாக பெறலாமா? அரசாணை நிலை எண்.381 நிதித்துறை நாள்.30.9.2010ன்படி ஆசிரியர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் இருந்தாலும் தற்காலிக முன்பணமாக ரூபாய் 2,50,000, மட்டுமே பெற முடியும். 
----------------------- 
அரசுப்பணிகளில் மகளிர்க்கு எத்தனை சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது? அரசாணை நிலை எண்.89 பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை நாள்.17.2.89ன்படி மாநில அரசுப்பணிகளில் ஒவ்வொரு பதவியிலும் 30%மகளிர் நியமனம் செய்யப்பட வேண்டும். மீதம் உள்ள 70% பொதுவானது ஆகும். 
----------------------- 
அரசுப்பணியில் சேர்ந்த தகுதிகாண் பருவத்தினருக்கு ஈட்டிய விடுப்பு எவ்வாறு இருப்பு வைக்கப்படுகிறது? அரசாணை நிலை எண்.157, பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை நாள்.24.6.94ன்படி தகுதிகாண் பருவத்தினருக்கு ஒவ்வொரு முடிவுற்ற 2 மாதங்களுக்கும் 2 1/2 நாள் என்ற அளவில் ஈட்டிய விடுப்பு இருப்பு வைக்கப்படுகிறது.
 ------------------- 
உதவி பெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் பணியை துறவு செய்துவிட்டு அரசு பணியில் சேரும்போது அவருக்கு பழைய ஊதியம் கிடைகுமா? அரசாணை நிலை எண்.536 கல்வித்துறை நாள்.13.04.1966 ன்படி உதவி பெறும் தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் பணியை துறவு செய்து விட்டு அரசு பள்ளியில் பணியில் சேரும்போது பணியேற்கும் பதவிக்குரிய ஊதிய விகிதத்தில் ஊதியம் வழங்கப்படும்.
 -----------------------
 தகுதிகாண் பருவத்தில் உள்ள ஆசிரியர் ஒருவருக்கு பதவி உயர்வு அளிக்கலாமா? அடிப்படை விதிகள் 36(0) மற்றும் அரசாணை எண்.21, பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை நாள் 23.1.96ன் படியும் தகுதிகாண் பருவத்தினருக்கு கண்டிப்பாக பதவி உயர்வு வழங்கக்கூடாது. என்று மேற்கண்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
------------------ 
வருங்கால வைப்புநிதி மாதச்சந்தா எவ்வளவு வேண்டுமானாலும் பிடித்தம் செய்யலாமா? அரசாணை எண்.461, நிதித்துறை நாள்.22.9.2009ன்படி அடிப்படை ஊதியம், தர ஊதியம், சிறப்புஊதியம், தனிஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றை சேர்த்து 12% தொகை குறைந்த பட்ச சந்தாவாக பிடித்தம் செய்திடவேண்டும். 12%க்கு மேலாக எவ்வளவு வேண்டுமானாலும் பிடித்தம் செய்திடலாம். மேலும் சந்தா தொகையை எந்த மாதத்திலும் உயர்த்திக் கொள்ளலாம். குறைக்க வேண்டுமெனில் மார்ச்சு மாதத்தில் குறைத்துக்கொள்ளலாம் 
----------------------- 
அரசுப்பணிகளில் பணிபுரியும் அலுவலர்கள் பணிப்பதிவேட்டை பார்வையிடலாமா? அரசாணை நிலை எண்.281, பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை நாள்.28.07.1993ன்படி ஊழியர்களின் அசல் பணிப் பதிவேட்டுப் பதிவுகளை 6மாதங்களுக்கு ஒருமுறை சரிபார்க்கவும், நகல் எடுத்துக்கொள்ளவும் உரிமை உண்டு.
 ------------------------- 
முழு ஓய்வூதியம் பெற எத்தனை ஆண்டுகள் பணி செய்திருக்கவேண்டும்? அரசாணை நிலை எண்.496, நிதித்துறை நாள்.1.8.2006ன்படி முழு ஓய்வூதியம் பெற 30 ஆண்டுகள் பணி செய்திருக்கவேண்டும். இந்த அரசாணை வெளி வருவதற்கு முன்பு 33 ஆண்டுகள் பணியாற்றிருக்க வேண்டும் என இருந்தது. குறிப்பு; 1.4.2003 க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு இத் திட்டம் பொருந்தாது.
 ------------------ 
குழந்தை பிறந்த நாளிலிருந்து தான் மகப்பேறு விடுப்பு தொடங்குகிறதா?? அரசாணை நிலை எண்.237, பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை நாள் 29.6.93ன்படியும் மற்றும் அடிப்படை விதி101(a)ன்படியும் மகப்பேறுக்கு முன்னரோ. (அ) மகப்பேறுக்கு பின்னரோ விடுப்பு அளிக்கலாம். குழந்தை பிறந்த பிறகு தான் விடுப்பு அளிக்கப்படும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. குறிப்பு; அ.நி.எண்.61.பணி.நிர்.சீர் .துறை நாள்.16.6.2011ன்படி180 நாள்கள் விடுப்பு அளிக்கப்படுகிறது
. ------------------------- 
மருத்துவ விடுப்பை எத்தனை நாட்களுக்குள் மருத்துவ குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும்? அரசாணை நிலை எண்.460, பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை நாள்.21.4.1976ன்படி விடுப்பு வழங்கும் அலுவலர் தேவை ஏற்படும் போது மருத்துவ குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றால் மூன்று நாட்களுக்குள் விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும். தற்செயல் விடுப்பினை பற்றி அறிவோம் !!! 
தற்செயல் விடுப்புகள் பற்றி அறிந்து கொள்வோம். 
1)தற்செயல் விடுப்பானது 16.06.1985 முதல் நாள் காட்டி ஆண்டிற்கு 12 நாட்கள் வீதம் அனுமதிக்கப்படுகிறது .அதிக பட்சமாக தொடர்ந்து பத்து நாட்கள் வரை (விடுமுறை நாட்கள் உள்பட ) அனுபவிக்கலாம் .(563 பநீசீ. 30.05.85) 2)இருப்பினும் 11-வது மற்றும் 12-வது நாட்கள் எதிர்பாராதவிதமாக அரசு விடுமுறையாக அறிவிக்கும் நிலையில் பத்து நாட்களுக்கு அதிகமாகவும் தற்செயல் விடுப்பினை அனுபவிக்கலாம் .(309 பநீசீ 16.08.93) (SSTA நண்பர்களே நாளை விடுமுறை எடுத்தால் நாளைமறுநாள் சனிக்கிழமை வேலையில் சேரவேண்டும்.)
 கட்டுபடுத்தப்பட்ட விடுப்பை(RESTRICTED HOLIDAY) எல்லா விடுப்புகளோடும் இணைத்து அனுபவிக்கலாமா? அரசு கடித எண்.24686 பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை நாள்.4.4.1989ன்படி கட்டுபடுத்தப்பட்ட விடுப்பை (RESTRICTED HOLIDAY) தற்செயல் விடுப்பு, ஈடுசெய் விடுப்பு ஆகிய விடுப்புகளோடு மட்டுமே இணைத்து அனுபவிக்கலாம். பிற விடுப்புகளோடு இணைத்து அனுபவிக்க இயலாது.  

22 March 2015

தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள், 1989 - இடைநிலை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை / சிறப்பு நிலை குறித்து திருத்திய ஊதிய விகிதங்கள் - திருத்திய ஆணை வெளியீடு

GO.62 Finance (CMPC) Dept Dated.09.03.2015 - Tamil Nadu Revised Scales of Pay Rules, 1989 – Selection Grade / special Grade scales of pay in the revised pay scales – Revised orders Click Here... 

அரசுப் பள்ளிகளிலும் மே மாதமே பாடங்கள் நடத்த உத்தரவு: மாணவர்கள் ஆசிரியர்கள் அதிர்ச்சி

தனியார் பள்ளிக்ளைப் போல அரசுப் பள்ளிகளிலும் முன்கூட்டியே பாடங்களை நடத்த கல்வி அதிகாரிகள் வற்புறுத்துவதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் 5000 தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் மட்டும் சுமார் 30 லட்சம் மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். தனியார் பள்ளிகள் தங்களின் பள்ளிகளின் பெயர் பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காக மாணவர்களுக்கு கூடுதலாக சில பாடங்களை வைத்து அதை நடத்துகின்றனர பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களை அதிக மதிப்பெண்கள் எடுக்க வைக்க வேண்டும் என்பதற்காக 10ம் வகுப்பு பாடங்களை 9ம் வகுப்பிலும், பிளஸ் 2 வகுப்பு பாடங்களை பிளஸ் 1 வகுப்பிலும் முன்கூட்டியே நடத்துகின்றனர். இதனால் பத்தாம் வகுப்பு பாடங்களையும், பிளஸ் 2 வகுப்பு பாடங்களையும் மாணவர்கள் 2 ஆண்டுகள் படிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. குறிப்பாக அந்த வகை பாடங்களை மாணவர்கள் மனப்பாடம் செய்யும்படியும் ஆகிறது. இது மாணவர்களின் மன நிலையை பாதிப்பதாக இருக்கிறது என்று கல்வியாளர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அது குறித்து தனியார் பள்ளிகள் கண்டு கொள்வதே இல்லை. இதற்காக தனயார் பள்ளிகள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதமே பாடங்களை நடத்த தொடங்கிவிடுகின்றனர். இந்நிலையில், தற்போது அரசுப் பள்ளிகளிலும் அதே முறையை பின்பற்ற கல்வி அதிகாரிகள் களம் இறங்கியுள்ளனர். அதாவது கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் வரை காத்திராமல் மே மாதம் முதல் வாரத்தில் இருந்தே பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பாடங்களை அரசுப் பள்ளிகளில் நடத்த கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனால் இந்த ஆண்டில் மேற்கண்ட இரண்டு வகுப்பு மாணவர்களுக்கும் கோடை விடுமுறை கிடையாது. மேலும், மேற்கண்ட வகுப்புகளின் ஆசிரியர்களையும் கோடை விடுமுறையில் பள்ளிக்கு வந்து பாடம் நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் அரசுப் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் கவலை அடைந்துள்ளனர்  

இந்திய கல்வி நிறுவனங்களில் தேசிய கீதம் தொடர்பான உத்தரவுகளை கடுமையாக பின்பற்ற இயக்குனர் உத்தரவு

பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் 750-/- சேர்த்து கொள்ளவேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் ஈரோடு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களுக்கு ஆணையிட்டு அனுப்பியு ள்ள செயல் முறைகள்

சங்கப்பணி - சங்க நிர்வாகிகளுக்கு சங்கப் பணியின் பொருட்டு 15 நாள் சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதித்து இணை இயக்குனர் உத்தரவு

17 March 2015

த.அ.உ.ச 2005 - சேலம் விநாயக நிகர்நிலை பல்கலைக்கழகம், பல்கலைக்கழக மான்யக் குழுவால் அங்கீகாரம் பெற்று இருப்பின் ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதி உண்டு என மண்டல கணக்கு அலுவலர் (தணிக்கை) தெரிவித்துள்ளார்.

 RTI 2005 - DIVISIONAL ACCOUNTS OFFICER - VINAYAGA MISSION UNIVERSITY - INCENTIVE REG LETTER CLICK HERE.. 

7 CRC- நாட்களையும் ஈடுசெய்யும் தற்செயல் விடுப்பு நாட்களாக இந்த கல்வியாண்டு முடியும் மாதமான ஏப்ரல் 30ந் தேதிக்குள் ஆசிரியர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்

CLICK HERE-GO.62 SCL EDN DEPT DATED.13.03.2015 - SPECIAL CL FOR PRIMARY & MIDDLE SCHOOL TEACHERS REG ORDER

இன்று வெளியிடப்பட்ட CRC SPL CL அரசாணை 62 ன்படி இதுவரைநடைபெற்ற 7 சிஆர்சி நாட்களையும் ஈடுசெய்யும் தற்செயல் விடுப்பு
நாட்களாக இந்த கல்வியாண்டு முடியும் மாதமான ஏப்ரல் 30ந்தேதிக்குள் ஆசிரியர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

13 March 2015

அகஇ - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிற்சியாக "ஆங்கில உச்சரித்தல் திறன் வளர் பயிற்சி" என்ற தலைப்பில் இரண்டு கட்டங்களாக (16.03.15 & 17.03.15 மற்றும் 19.03.15 & 20.03.15) நடத்த மாநில திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்

. SPD - 2 DAYS PHONETIC TRAINING FOR PRIMARY TEACHERS @ BRC LEVEL REG PROC CLICK HERE.. n

தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 31.08.2014ல் உள்ளவாறு ஆசிரியர் / மாணவர்கள் பணியிட நிர்ணயம் செய்து ஆசிரியரின்றி உபரியாக உள்ள பணியிடங்களை சரண் செய்ய இயக்குனர் உத்தரவு

DEE - TRS / STUDENTS STRENGTH FIXATION AS ON 31.08.2014 IN PU/GOVT PRIMARY / MIDDLE SCHOOLS SURPLUS POSTS (WITHOUT TEACHERS) WILL BE SURRENDER TO DEE REG ORDER CLICK HERE.  

SABL TIME TABLE

8.50-9.10 CLEANING


9.10-9 .30 PRAYER

9.30-9.35 MEDITATION

9.35-12.10 SUBJECT 1


12.10-12.40 VALUE EDUCATION, YOGA ETC

12.40-1.15 LUNCH

1.15-1.45 DICTATION, TV PROGRAMMES, ACTIVITIES etc.

1.45-3.50 SUBJECT 2

3.50-4.10 COMPUTER, GAMES etc.

4.10 CLASSROOM PRAYER.
(FRIDAY 3.10-4.10 CULTURALS

20MIN PRAYER ONLY ON MONDAY OTHER DAYS 15MIN PRAYER)

04 March 2015

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் அவசர மாநிலசெயற்குழு-07.03.2015 சனி காலை-10 மணிக்கு நடைபெறும்

புதுடெல்லி யில் நடைபெற உள்ள மாநில மாநாடு குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியதன் பொருட்டு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் அவசர மாநில செயற்குழு கூட்டம் வரும் 07.03.2015 நடைபெறும். இடம்-வீ .சுப்ரமணியன் மாளிகை,                 நாமக்கல் நாள்-  07.03.2015 நேரம்- காலை சரியாக 10.00.மணிக்கு தலைமை-திரு.கு.சி.மணி அவர்கள்                        மாநிலத்தலைவர். டெல்லி மாநாடு குறித்து கலந்தாலோசனை-பொதுசெயலர் செ முத்துசாமி அவர்கள்                                                  மாவட்ட செயலர்கள் 06.03.2015 வரை   சேர்ந்துள்ள நபர்களின் பட்டியல் மற்றும் தொகையினை உடன் டிராப்டாகவோ,அல்லது ரொக்கமாகவோ கொண்டுவந்து செயற்குழுவில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.அனைத்து மாவட்டசெயலர்களும் மாநிலபொறுப்பாளர்களும் தவறாது கலந்துகொள்ள கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.                           கலந்துகொள்ளும்செயற்குழு உறுப்பினர்களுக்கு இருவழி பயணப்படிவழங்கப்படும் .                        இதனையே அழைப்பாக ஏற்று அனைவரும்தவறாது கலந்து கொள்ள வேண்டும்என பொதுசெயலர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.  

அரசு பள்ளி மாணவ , மாணவிகள் சார்ந்த விவரங்களை முகநுாலிலோ அல்லது வேறு முறையிலோ பகிரப்படுவது சட்டபடி குற்றம்

அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் பள்ளி செயல்பாடுகளை படம் பிடித்து முகநுாலில் பகிர செய்கீரிர்களா? அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் பள்ளி செயல்பாடுகளை படம் பிடித்து முகநுாலில் பகிர செய்கீரிர்களா? அப்படி எனில் ஆசிரியர் நண்பர்களே உஷார்... முகநுாலில் பள்ளிகளில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளையும், மற்ற புகைப்படங்களையும் அப்லோட் செய்வதற்கு கல்வி துறை தடை செய்ய உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் பிரிவு உபசார விழாவினை பள்ளியில் கொண்டாடியுள்ளனர். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை மார்பிங் செய்து அம்மாணவிகள் மினி பீர் குடிப்பது போன்று புகைப்படங்களை உருவாக்கி அதனை முகநுாலில் சிலர் பரவ விட்டுள்ளனர் இதனை கல்விதுறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் இந்த நிகழ்வுக்கு காரணமாணவர்களை தண்டிக்க அரசு தயாராகி வருகிறது. மேலும் அரசு பள்ளி மாணவ , மாணவிகள் சார்ந்த விவரங்களை முகநுாலிலோ அல்லது வேறு முறையிலோ பகிரப்படுவது சட்டபடி குற்றம் எனவும் மீறுவோரை பணி நீக்கம் செய்யவும் அரசு தயாராகி வருகிறது இவ்வாறு பகிரப்படும் புகைப்படங்களை வேறு முறையில் பயன்படுத்த அதிகம் வாய்ப்பு உள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது. மேற்கண்ட அந்த பள்ளி மாணவிகளின் புகைப்படத்தை நம் முகநுால் அன்பர்கள் யாராவது எங்கிருந்தாவது பார்த்து உங்களுக்குள் பகிர்ந்து கொண்டிருந்தாலோ அல்லது ஷேர் செய்து இருந்தாலோ உடனடியாக அகற்றவும். இனி கவனத்துடன் செயலாற்ற அனைத்து ஆசிரியர்களையும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.