30 March 2015

அரசாணை எண்.62க்கு வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி இயக்குநரிடம் கோரிக்கை

அரசாணை எண்.62ல் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும்ஆசிரியர்களுக்கு ஈடு செய்யும் விடுமுறை வழங்க தமிழகஅரசால் ஆணையிடப்பட்டதுஆனால்
விடுமுறை வழங்குவது சார்பாக சில ஒன்றியங்களில்முரண்பாடு எழுந்துள்ளதால்தமிழக அரசு அரசாணைவழங்கியும் அதை அனுபவிக்க இயலாத சூழ்நிலைக்குஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதையடுத்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மாநிலபொருளாளர் திரு.தே.அலெக்சாண்டர் மற்றும் மாநில தலைமைநிலைய செயலாளர் திரு..சாந்தகுமார் ஆகியோர் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களை சந்தித்து மனு அளிக்க சென்றனர்.ஆனால் இயக்குனர் தேர்வு பணியில் இருப்பதால்அவரின் தனிசெயலாளரிடம் இதுகுறித்து வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்ககோரிக்கை மனு அளிக்கப்பட்டதுஇதுகுறித்து உடனடியாகஇயக்குனரிடம் கலந்து பேசி நெறிமுறைகள் வழங்குவதாகஉறுதியளித்துள்ளார்.

No comments:

Post a Comment