16 October 2014

தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 22 மட்டுமே விடுமுறை-விடுமுறைப்பட்டியலில் மாற்றம் இல்லை-தேவைப்படின் உள்ளூர் விடுமுறை அல்லது ஈடுசெய் விடுமுறை விடமட்டுமே வாய்ப்பு-

இன்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலர் திருமிகு செ.முத்துசாமி அவர்கள் தொடக்கக்கல்வி இயக்குனர் முனைவர் திரு இளங்கோவன் அவ்ர்களை சந்தித்து ஆசிரியர்கள் சார்ந்த கோரிக்கைகள் குறித்து பேசப்பட்டது.


முக்கியமாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 23 தேதி மானவர் 
மற்றும் ஆசிரியர் வருகை குறைவாக இருக்கும் என்பதாலும் அனேக 
ஆசிரியர்கள் R.L எடுக்க வாய்ப்பு உள்ளதால் நிர்வாக சிக்கலின்றி 
பொதுவான விடுமுறை அளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது

                  அதனை கவனமுடன் கேட்ட இயக்குனர் தங்கள் தரப்பில்
 வைக்கப்பட்ட கோரிககை நியாமானது என்றாலும் தற்போதைய
 சூழ்நிலையில் (கால அளவினை கருத்தில் கொண்டு)விடுப்பு 
அறிவிப்பது சாத்தியமில்லை எனவும் தேவைப்படுவோர் 

உதவிதொடக்கக்கல்வி அலுவலர் மூலம் உள்ளூர் விடுமுறை 
அல்லது ஈடுசெய் விடுமுறை விண்ணப்பம் அளித்துஒப்புதல் 
பெற்றுவிடுப்பு அறிவிக்கவும், கோரிக்கைகள் வரும் 
பள்ளிக்கு விடுப்பு அளிக்கதேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள
 அனைத்து மாவட்ட தொடக்கக்க்கல்வி அலுவலர்களுக்கும் தகவல் 
கூறப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார் .எனவே 21 மற்ரும்
 23 ஆகிய தேதிகள்.விடுப்புவேண்டுவோர் அவரவர் உதவி 
தொடக்கக்கல்வி அலுவலரை சந்தித்து விடுப்பு பெற
 அனுமதிபெற்றுகொள்ளுமாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment