ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையயை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தொடரப்பட்ட மனுவை விசாரித்ததனிநீதிபதி, ஆசிரியர்கள் நியமனத்திற்கு இடைக்காலத்தடை விதித்தார். தனிநீதிபதியின் உத்தரவிற்கு எதிராக, சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில், தமிழக அரசு சார்பி்ல், மேல்முறையீட்டு மனு தாக்கல்
செய்யப்பட்டிருந்தது. இம்மனுவை விசாரித்த நீதிபதி, இடைக்காலத்தடை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதனால் தேர்வான ஆசிரியர்கள் பணியில் சேர்வதற்கான தடை விலகியது. மேலும் ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணை பற்றிய அறிவிப்பையும், பணியில் எப்போது சேரவேண்டும் என்ற அறிவிப்பையும் அரசு விரைந்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
No comments:
Post a Comment