இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வில், பணியிடம்தேர்வு செய்த பணிநாடுநர்களுக்கு இன்று பிற்பகல் முதல்சம்பந்தப்பட்ட கலந்தாய்வு மையங்களில் நியமன ஆணைவழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறையால், கடந்த ஒன்றாம் தேதி முதல் 5-ம் தேதிவரை
இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்பணிநியமனத்திற்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது. இக்கலந்தாய்வில்பங்கேற்று உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியிடம்தேர்வு செய்த பணிநாடுநர்கள் அனைவருக்கும் இன்று பிற்பகல் முதல்சம்பந்தப்பட்ட கலந்தாய்வு மையங்களில் பணிநியமன ஆணைவழங்கப்படவுள்ளது. அனைத்து பணிநாடுநர்களும் சம்பந்தப்பட்டமையத்திற்குச் சென்று பணிநியமன ஆணையை பெற்று, உடனடியாகபள்ளிகளில் பணியேற்குமாறு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளசெய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில்பணியிடம் தேர்வு செய்த பணிநாடுநர்கள், சம்பந்தப்பட்ட மாவட்டதொடக்க கல்வி அலுவலகத்திற்கு, அனைத்து கல்விச்சான்றிதழ்களுடன் சென்று ஒதுக்கீட்டு மற்றும் நியமன ஆணைகளைபெற்றுக்கொள்ளலாம் என தொடக்க கல்வி இயக்ககம்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment