04 August 2014

TNTET : தமிழாசிரியர் பணியிடங்கள் மறைக்கப்படுகிறதா??? இல்லை தமிழின் வளர்ச்சி மறுக்கப்படுகிறதா???

நோய்க்கு மருந்து இலக்கியம், நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன், தமிழுக்கும் அமுதென்று பெயர் தமிழ் எங்கள் உயிருக்கு நேர், செம்மொழியான தமிழ் மொழியே போன்ற வரிகள் அனைத்தும் தமிழின் சிறப்பினை உயர்த்துகின்றன..



தமிழை சுவாசிக்கிறோம், தமிழை நேசிக்கிறோம், தமிழை பூஷிக்கிறோம், தமிழையே வாசிக்கிறோம் என அர்ச்சனை பாடும் அரசும், அரசியல்வாதிகளும் தமிழை ஆலென வளர்க்கும் தமிழாசிரியர் பணியிடக்குறைவினை நினைவில் கொள்ளாதது ஏன்..??


2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தமிழ்த்துறையில் தேர்ச்சி பெற்ற தமிழ் பட்டதாரி ஆசிரியர்களின்  எண்ணிக்கையோ 9853 (RTI)...
ஆனால் தமிழாசிரியர்களுக்கு இருக்கும் பணியிடமோ 261+511=772 தான்...

இது உழுதவன் கணக்குப்பார்த்தால் உலக்கு கூட மிஞ்சாது போல் அல்லவா இருக்கிறது...

ஆசிரியர் நியமணங்களில் தமிழ்வழி இடஒதுக்கீடில் 1400 பணியிடங்கள் ஒதுக்கியுள்ளோம் என பெருமையாக பீத்திக்கொள்ளும் அரசு...
தமிழையே விருப்பபாடமாக படித்து தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி தமிழாசிரியருக்கு வெறும் 772 பணியிடம் தான் என்ற அவலநிலையெ அரசின் அவையில் எடுத்துச்சொல்லாதது ஏன்...


ஆசிரியர்தேர்வு வாரியம் இன்று வெளியிட்ட பணியிட அதிகரிப்பு பட்டியலிலாவது தமிழுக்கு சில இடங்கள் ஒதுக்கப்படும் என நினைத்த நெஞ்சங்களுக்கு இதயவலியே மிச்சம்..
அதில் தமிழ் என்ற வார்த்தை கூட இடம்பெறாதது இதயத்தில் ஆயிரம் குண்டூசிகளால் குத்துவது போல் உள்ளது...தமிழுக்கு ஓரிரு இடம் கூடவா இல்லை..???


தமிழாசிரியர் பணியிடம் மறைக்கப்படுகிறதா??? இல்லை தமிழாசிரியரின் உரிமையும், தமிழின் வளர்ச்சியும் மறுக்கப்படுகிறதா???

தமிழ் ஏற்றமிகு வாழ்வுபெறும் நிலையுண்டா??
இனிவரும் தமிழ்  தலைமுறைக்கு விடிவுண்டோ??
தமிழை தூற்றுகின்ற நிலைமாறும் விதியுண்டா??
தமிழ் தொல்புகழை மீட்டெடுக்க வழியுண்டா??


தமிழுக்காகவும், தமிழின் வளர்ச்சிக்காகவும் தனியாத தாகமுடைய தமிழ் அமைப்புகள், தமிழ் ஆர்வலர்களும் தமிழாசிரியர்க்கு ஏற்பட்ட பணியிடக்குறைவை தலைமைக்கு எடுத்துரைக்குமாறு பணிவோடு வேண்டுகிறேன்...

No comments:

Post a Comment