30 March 2016

Posted: 29 Mar 2016 06:47 PM PDT
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (இ.பி.எப்.) தொடர்ந்து 36 மாதங்கள் மாத சந்தா செலுத்தாமல் அப்படியே விட்டு விட்டால், அந்த கணக்கு செயல்படாத இ.பி.எப். கணக்கு என்று அழைக்கப்படுகிறது. இப்படிப்பட்ட கணக்குகளில் ரூ.32 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக சந்தா தொகை சேர்ந்துள்ளது. இந்த செயல்படாத கணக்குகளுக்கு வட்டி தருவதை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வாரியம் 2011-ம் ஆண்டு,
ஏப்ரல் 1-ந்தேதி முதல் நிறுத்தி விட்டது.இந்த நிலையில், மறுபடியும் இத்தகைய செயல்படாத இ.பி.எப். கணக்குகளுக்கு வரும் ஏப்ரல் 1-ந்தேதி முதல்  வட்டி வழங்க வருங்கால வைப்பு நிதி வாரியம் முடிவு செய்து அறிவித்துள்ளது.டெல்லியில் இன்று நடந்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வாரிய கூட்டத்துக்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா, செயல்படாத இ.பி.எப். கணக்குகளிலும் வட்டி செலுத்த முடிவு செய்துள்ளதால், இனி செயல்படாத இ.பி.எப். கணக்கு என்ற ஒன்று இருக்காது என கூறினார்.இதன்மூலம் 9 கோடிக்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் பலன் அடைவார்கள்.
Posted: 29 Mar 2016 06:31 PM PDT
Department  test-க்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 11.04.2016 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது

விண்ணப்பிக்க தவறியவா்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்
Posted: 29 Mar 2016 06:29 PM PDT
Posted: 29 Mar 2016 06:29 PM PDT

Posted: 29 Mar 2016 06:28 PM PDT
இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. எனவே, விண்ணப்ப படிவங்கள் எங்கேயும் விற்பனை செய்யப்படாது. ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏப்ரல் 15 முதல் பதிவு செய்யலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தொடர்பான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் உயர்கல்வித்துறை செயலர் அபூர்வா தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டம் முடிவடைந்த பின்னர் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-


பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு ஏப்ரல் 14-ம் தேதி அன்று வெளியிடப்படும். இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு ஆன்லைன் விண்ணப்ப முறை நடைமுறையில் இருந்தாலும் ஆன்லைனில் விண்ணப்பிப்பது மாணவர்களின் விருப்பமாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஏப்ரல் 15-ம் தேதி முதல் பதிவுசெய்து கொள்ளலாம். இதற்கு கடைசி நாள் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாகி 7 நாட்கள் வரை விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு பதிவாளர் கணேசன் கூறினார்.

No comments:

Post a Comment