30 March 2016

Posted: 29 Mar 2016 06:47 PM PDT
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (இ.பி.எப்.) தொடர்ந்து 36 மாதங்கள் மாத சந்தா செலுத்தாமல் அப்படியே விட்டு விட்டால், அந்த கணக்கு செயல்படாத இ.பி.எப். கணக்கு என்று அழைக்கப்படுகிறது. இப்படிப்பட்ட கணக்குகளில் ரூ.32 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக சந்தா தொகை சேர்ந்துள்ளது. இந்த செயல்படாத கணக்குகளுக்கு வட்டி தருவதை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வாரியம் 2011-ம் ஆண்டு,
ஏப்ரல் 1-ந்தேதி முதல் நிறுத்தி விட்டது.இந்த நிலையில், மறுபடியும் இத்தகைய செயல்படாத இ.பி.எப். கணக்குகளுக்கு வரும் ஏப்ரல் 1-ந்தேதி முதல்  வட்டி வழங்க வருங்கால வைப்பு நிதி வாரியம் முடிவு செய்து அறிவித்துள்ளது.டெல்லியில் இன்று நடந்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வாரிய கூட்டத்துக்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா, செயல்படாத இ.பி.எப். கணக்குகளிலும் வட்டி செலுத்த முடிவு செய்துள்ளதால், இனி செயல்படாத இ.பி.எப். கணக்கு என்ற ஒன்று இருக்காது என கூறினார்.இதன்மூலம் 9 கோடிக்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் பலன் அடைவார்கள்.
Posted: 29 Mar 2016 06:31 PM PDT
Department  test-க்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 11.04.2016 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது

விண்ணப்பிக்க தவறியவா்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்
Posted: 29 Mar 2016 06:29 PM PDT
Posted: 29 Mar 2016 06:29 PM PDT

Posted: 29 Mar 2016 06:28 PM PDT
இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. எனவே, விண்ணப்ப படிவங்கள் எங்கேயும் விற்பனை செய்யப்படாது. ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏப்ரல் 15 முதல் பதிவு செய்யலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தொடர்பான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் உயர்கல்வித்துறை செயலர் அபூர்வா தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டம் முடிவடைந்த பின்னர் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-


பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு ஏப்ரல் 14-ம் தேதி அன்று வெளியிடப்படும். இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு ஆன்லைன் விண்ணப்ப முறை நடைமுறையில் இருந்தாலும் ஆன்லைனில் விண்ணப்பிப்பது மாணவர்களின் விருப்பமாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஏப்ரல் 15-ம் தேதி முதல் பதிவுசெய்து கொள்ளலாம். இதற்கு கடைசி நாள் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாகி 7 நாட்கள் வரை விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு பதிவாளர் கணேசன் கூறினார்.

To know about GO.NO 121,POSCOS.

http://www.tn.gov.in/ta/go_view/dept/28
Posted: 29 Mar 2016 05:25 PM PDT
Department  test-க்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 11.04.2016 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது
விண்ணப்பிக்க தவறியவா்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்
Posted: 29 Mar 2016 05:25 PM PDT
Tamil Nadu Public Service Commission (TNPSC) 
Online Registration for
Departmental Examinations May 2016 
STOPPED TEMPORARILY FOR MAINTENANCE 
Service will be resumed at 10 AM on Wednesday, the 30th March 2016.
(Last date for registration is now extended till 11th April 2016)

28 March 2016

Posted: 27 Mar 2016 06:23 PM PDT
தேசிய கீதத்தில் திருத்தம் செய்ய வேண்டுமென்ற, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமியின் கோரிக்கையை, மத்திய அரசு நிராகரித்து ள்ளது. 

          இந்தியாவின் தேசிய கீதம், ரவீந்திர நாத் தாகூரால் எழுதப்பட்டது. இதில் உள்ள சில வார்த்தைகள், ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை புகழும் வகையில் அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த வார்த்தைகளுக்கு பதில், வேறு வார்த்தைகளை சேர்க்க வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, 2015, நவம்பரில், சுப்பிரமணியன் சாமி கடிதம் எழுதினார். இது தொடர்பாக, பார்லிமென்ட் விவகாரத் துறையின் கருத்தை, மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டது. சுதந்திரப் போராட்ட கால, காங்கிரஸ் கட்சியின் கூட்டம், கோல்கட்டா நகரில், 1911ல் நடந்தபோது, முதன்முதலாக, 'ஜனகனமண' எனத் துவங்கும் பாடல் பாடப்பட்டது. அச்சமயம், பிரிட்டன் மன்னராக இருந்த, ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்காக அப்பாடல் எழுதப்படவில்லை என்றும், அரசியல் நிகழ்ச்சிக்காக அந்த பாடல் பாடப்பட்டது
என்றும், பார்லிமென்ட் விவகாரத்துறை விளக்கம் அளித்தது; இது தொடர்பாக, ரவீந்திரநாத் தாகூர் அளித்திருந்த விளக்கத்தையும் சுட்டிக்காட்டியது. முன்னதாக, ராஜஸ்தான் மாநில கவர்னரும், பா.ஜ., முன்னாள் தலைவருமான கல்யாண் சிங், தேசிய கீதத்தில் இடம்பெறும், 'அதிநாயக்' என்ற வார்த்தையை மாற்றம் செய்ய வேண்டுமென, வலியுறுத்தி இருந்தார். ஆனால், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, அந்த கோரிக்கையை உடனடியாக நிராகரித்து விட்டது. இந்நிலையில், சுப்பிரமணியன் சாமியின் கோரிக்கையை, மத்திய
அரசு நிராகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இது தொடர்பாக, உள்துறை அமைச்சகத்தின் விரிவான அறிக்கை, விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Posted: 27 Mar 2016 06:21 PM PDT
There is no proposal under consideration to replace the National Pension System (NPS) with old pension scheme - Govt. replied in Lok Sabha


GOVERNMENT OF INDIA
MINISTRY OF FINANCE
LOK SABHA

UNSTARRED QUESTION NO: 1524
ANSWERED ON: 04.03.2016


Replacement of New Pension Scheme


SUKHBIR SINGH JAUNPURIA
Will the Minister of FINANCE be pleased to state:-

(a) whether the Government proposes to replace the New Pension Scheme (NPS) with old pension scheme; and

(b) if so, the details thereof and the reasons therefor?
ANSWER

The Minister of State in the Ministry of Finance 

(a) & (b) there is no proposal under consideration to replace the National Pension System (NPS) with old pension scheme in respect of Central Government employees recruited on or after 01.01.2004.
Posted: 27 Mar 2016 06:19 PM PDT
மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டிய நேரத்தில் பாடம் நடத்தாமல் ஓய்வறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே உள்ள பெமினா பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு நேற்று பள்ளிக்கல்வி இயக்குனர் பாசல் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முன்னறிவிப்பு எதுவும் இன்றி பள்ளிக்குள் நுழைந்த அவர்,
வகுப்பறைக்கு சென்றபோது மாணவர்கள் மட்டும் இருந்தனர். ஆசிரியர்களைக் காணவில்லை. அனைவரும் ஓய்வறையில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். இதனால் பள்ளியில் பணியாற்றும் 18 ஆசிரியர்களையும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.


இதுபற்றி பள்ளிக்கல்வி இயக்குனர் பாசல் கூறுகையில், “இந்த பள்ளியில் 110 குழந்தைகள் படிக்கின்றன. 18 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். மாணவர்களின் கல்வித்தரம் உயரவில்லை. 4ம் வகுப்பு மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு எளிய கணக்கைக் கூட போடத் தெரியவில்லை. 25ஐ நான்கால் வகுப்பது போன்ற அடிப்படை கணிதக் கேள்விகளைக் கூட எழுதத் தெரியவில்லை. அந்த கணக்குகளுக்கு தீர்வு காண்பது குறித்து சொல்லவும் தெரியவில்லை. 


இதனால் 18 ஆசிரியர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்னர். மாணவர்களின் கல்வித் தரம் உயர்ந்தபிறகே மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள். அது வரையில் அந்த ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது” என்றார்.
Posted: 27 Mar 2016 06:15 PM PDT