26 February 2016

26-02-2016

Posted: 25 Feb 2016 05:27 PM PST
மார்ச் 3இல் உள்ளூர் விடுமுறை.
அய்யா வைகுண்டர் அவதார தின விழாவை முன்னிட்டு  கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மார்ச் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், அனைத்து கல்விநிறுவனங்களுக்கும் (அரசுப் பொதுத்தேர்வுகளுக்கு இடையூறு இல்லாமல்) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக்கருவூலங்கள் மட்டும் அவசரப் பணிகள் கருதி தேவையான பணியாளர்களுடன் இயங்கும்.இந்த விடுமுறைக்கு ஈடாக மார்ச் 12 ஆம் தேதி (சனிக்கிழமை) மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Posted: 25 Feb 2016 05:26 PM PST
வினாயகா மிசன் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் இளம்முனைவர் பட்டம் தமிழ்நாடு கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு தகுதியானதுதான் என்பதை அதன் பாடத்திட்டங்களை பெற்று அரசுக்கு TNPSC பரிந்துரை செய்யும்.அதன் அடிப்படையில்தான் அரசாணை வெளியாகும்.அதை வைத்துதான் வேலை வாய்ப்பு,ஊக்க ஊதியம் சாத்தியமாகும்
Posted: 25 Feb 2016 05:25 PM PST
Posted: 25 Feb 2016 05:13 PM PST
பல ஆண்டுகளாகியும் உண்மை தன்மை சான்று கிடைக்காததால் பதவி உயர்வுக்கான சீனியாரிட்டி பட்டியலில் இடம்பெறுவதில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு மூலம் முதுநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

இந்த ஆண்டு முதுநிலை ஆசிரியர் பதவிக்கு 2016 ஜன.,1 ன் படி பாடவாரியாகசீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதில் தகுதிகாண் பருவம் முடித்த ஆசிரியர்கள் மட்டுமே இடம்பெற முடியும். பணியில் சேர்ந்த 2 ஆண்டுகளில் தகுதிகாண் பருவம் முடிக்க வேண்டும்.இதற்கு ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்களின் உண்மை தன்மை சான்று அவசியம். இந்த சான்றை பட்டப்படிப்புக்கு பல்கலைகளும், பள்ளி படிப்புக்கு அரசு தேர்வுத்துறையும் வழங்குகின்றன. விண்ணப்பித்த சில மாதங்களிலேயே பல்கலைகள் உண்மைத் தன்மை சான்றை வழங்கி விடுகின்றன. ஊழியர்கள் பற்றாக்குறை, அதிகாரிகள் மெத்தனம் போன்ற காரணங்களால் அரசு தேர்வுத்துறை பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 க்கான உண்மைத்தன்மை சான்றை உடனடியாக வழங்குவதில்லை. சான்று கிடைக்காததால் பலர் தகுதிகாண் பருவம் முடிக்க முடியாமல் உள்ளனர்.

இதனால் இந்த ஆண்டு பதவி உயர்வுக்கான சீனியாரிட்டி பட்டியலில் தங்களது பெயரை சேர்க்க முடியாமல் பட்டதாரி ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறியதாவது: உண்மைத் தன்மை சான்று பெற தலைமைஆசிரியர்கள், மாவட்டக் கல்வி அலுவலகம் மூலமாக தான் அரசு தேர்வுத்துறைக்கு அனுப்பி வைத்தோம். என்ன காரணமோபல ஆண்டுகளாகியும் சான்று கிடைக்கவில்லை. இதனால்பதவி உயர்வு பட்டியலில் சேர முடியாமல் தவிக்கிறோம், என்றனர்.
Posted: 25 Feb 2016 05:01 PM PST
பயணிகள் கட்டணம், சரக்கு ரயில் கட்டணம் உயர்வு இல்லாத ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் சுரேஷ் பாபு தாக்கல் செய்தார். அதேபோல், புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பும் இதில் இடம்பெறவில்லை.பிரதமர் மோடி தலைமையில் பாஜக அரசு பொறுப்பேற்ற பின், 2-வது ஆண்டாக ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று (வியாழக்கிழமை) பகல் 12 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்தார்.ரயில்வே பட்ஜெட் உரையில் அவர் வெளியிட்டஅறிவிப்புகளின்முக்கிய அம்சங்கள்:

* பயணிகள் மற்றும் சரக்கு ரயில் கட்டணம் உயர்வு இல்லை; புதிய ரயில்கள் அறிவிப்பும் இல்லை.



*பத்திரிகையாளர்கள் இணையதளம் மூலம் ரயில் பயணச்சீட்டு முன்பதிவின்போது சலுகைகள் பெறலாம்.


*முழுமையான ரயில்வே பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.


*ரயில் பந்து பத்திரிகை மாநில மொழிகளிலும் அச்சடிக்கப்படும்.


* அடுத்து வரும் ரயில் நிலையம் குறித்த விவரம் பயணிகளுக்குஜிபிஎஸ் தொழில்நுட்ப உதவியுடன் டிஜிட்டல் போர்டு மூலம் தெரிவிக்கும் சேவை விரைவில் தொடங்கப்படும்.


* டிக்கெட் முன்பதிவின்போது காப்பீட்டுக்கான வாய்ப்பு வழங்கப்படும்.


* சரக்குகளை இருப்புவைக்க ரயில்வே சார்பில் இரண்டு பிரத்யேக கிடங்குகள் உருவாக்கப்படும்.


* தேர்வு செய்யப்பட்ட சில ரயில் நிலையங்களில் சோதனை அடிப்படையில் பார் கோடு வசதி கொண்ட ரயில் டிக்கெட்டுகள்வழங்கப்படும்.


* ஆஜ்மீர், அமிர்தசரஸ், கயா, மதுரா, நான்டெட், புரி, திருப்பதி, வாரணாசி, நாகப்பட்டினம் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு அழகுபடுத்தப்படும்.


* இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் ரயில் தானியங்கி மையம் அமைக்கப்படும்.


சில சலுகைகள்:
*வெளிநாட்டு கிரெடிட், டெபிட் கார்டு மூலமும் இ-டிக்கெட் சேவையைப் பெறலாம்.

*இ-கேட்டரிங் சேவை அனைத்து ரயில் நிலையங்களுக்கும் நீட்டிக்கப்படுகிறது.

*பயணிகள் விருப்பத்திற்கு ஏற்ப உள்ளூர் உணவுகள் வழங்கப்படும்.


* குழந்தைகளுக்கு ஏற்ற உணவு ரயில்வே கேட்டரிங்கில் வழங்கப்படும். அதேபோல், பச்சிளம் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களும் வழங்கப்படும்.


*ரயில் நிலையங்களில் பால், மருந்துப் பொருட்களை விற்பனைசெய்யும் அங்காடிகள் அமைக்கப்படும்.


* மூத்த குடிமக்கள் வசதிக்காக கொங்கன் ரயில்வேயில் சாரதி சேவா என்ற திட்டம் தொடங்கப்படுகிறது. விரைவில் இது அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் நீட்டிக்கப்படும்.


* முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டை ரத்து செய்ய 139 ஹெல்ப்லைன் சேவை அறிமுகம்.


*வர்த்தக மையங்களை இணைக்கும் பாதைகளில் இரவு நேரத்தில் மட்டும் டபுள் டக்கர் ரயில்கள் இயக்கப்படும்.டிக்கெட் முன்பதிவு செய்யாதவர்கள் வசதிக்காக:

1. பயணிகள் நெரிசல் அதிகமிருக்கும் மார்க்கங்களில் முற்றிலும் முன்பதிவு அற்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும்.


2. டிக்கெட் முன்பதிவு செய்யாத பயணிகள் வசதிக்காக நீண்டதூரம் செல்லும் அந்தோதயா ரயில்கள் இயக்கப்படும்.


*மணிப்பூர், மிசோரம் மாநிலங்களில் அகல ரயில் பாதை அமைக்கப்படும்.


* இந்த ஆண்டு 100 ரயில் நிலையங்களிலும்; அடுத்த ஆண்டில்400 ரயில் நிலையங்களிலும் வைபை சேவை வழங்கப்படும்.


* 2016-17-ல் 2000 கி.மீ. ரயில் பாதை மின்மயமாக்கப்படும்.


*மாநிலங்களுடன் இணைந்து ரயில்வே செயல்திட்டங்களை நிறைவேற்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. 17 மாநிலங்கள் இத்தகைய ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளன.


* அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும்.


* ரயில்களில் பெண் பயணிகள், மூத்த குடிமக்களுக்கான இருக்கை ஒதுக்கீடு அதிகரிப்பு. மூத்த குடிமக்களுக்கு 50% இருக்கை ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.


*இ-டிக்கெட்டிங் சேவை மூலம் நிமிடத்துக்கு 7200 பயணச்சீட்டுகள் விநியோகிக்கப்படுகிறது.


* ரூ.40,000 கோடி செலவில் இரண்டு புதிய ரயில் பெட்டி தயாரிப்பு மையங்களை உருவாக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.


*ரயில்வே துறையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.1.5 லட்சம்கோடி முதலீடு செய்ய எல்.ஐ.சி. முன்வந்துள்ளது.


* ரயில்வே வாரியத்தில் பணியிடங்கள் நிரப்புவதில் வெளிப்படத்தன்மையை உறுதி செய்ய ஆன்லைன் மூலம் காலிப் பணிகளை நிரப்புவதை பின்பற்றுகிறோம்.


*நாட்டின் பிற பகுதிகளுடன் வட கிழக்கு மாநிலங்களை இணைப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும்.


* டெல்லி - சென்னை இடையே புதிய சரக்கு ரயில் பாதை அமைக்கப்படும். இதே போல் காரக்பூர் - மும்பை - விஜயவாடா இடையேயும் புதிய சரக்கு ரயில் பாதை அமைக்கப்படும்.


*அடுத்த ஆண்டில் புதிதாக 2,800 கி.மீ தூரம் கொண்ட புதியரயில்வே இருப்புப் பாதைகள் திறக்கப்படும்.


*2016 -17-ல் ரயில்வே துறையில் ரூ.1.21 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்.


* 2016- 17 நிதியாண்டில் ரூ.1,84,820 கோடி வருவாய் ஈட்ட ரயில்வே திட்டம். இது கடந்த ஆண்டைவிட 10.1% அதிகமாகும்.


* ரயில்வே துறையின் வெற்றிப்பயணத்துக்கு அதன் ஊழியர்கள் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.


*இந்த பட்ஜெட்டில் ரயில்வே துறையில் அதிக வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.


*ரயில்வே பட்ஜெட் பிரதமர் மோடியின் கனவை நனவாக்குவதாக இருக்கும். ரயில்வே துறையை நாட்டின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியின் முதுகெலும்பாக்குவேன் என பிரதமர்கூறியிருந்தார். அதற்கேற்ப பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.


11.32 am:மக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாக இந்த பட்ஜெட் அமையும் என நம்புகிறேன்: சுரேஷ் பிரபு


11.30 am:நாட்டு மக்களின் தேவைகள், எதிர்ப்பார்ப்புகளை கருத்தில் கொண்டு ரயில்வே பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது: ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு


11.20 am:இன்று தாக்கலாகும் ரயில் பட்ஜெட் தேச நலனை பேணுவதாக இருக்கும்: வெங்கய்ய நாயுடு


11.10 am:ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, இணை அமைச்சர்மனோஜ் சின்ஹா ரயில் பவனுக்கு வந்தடைந்தனர்
Posted: 25 Feb 2016 05:00 PM PST
பி.எட். படிப்புக்காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டதில் எந்த மாற்றமும் இல்லை என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் எஸ்.தங்கசாமி விளக்கம் அளித்தார்.கடந்த கல்வி ஆண்டு வரையில் பிஎட், எம்எட் படிப்புக் காலம் ஓராண்டாகத்தான் இருந்து வந்தது. இந்த நிலையில், தேசிய ஆசிரியர் கல்விக்குழுவின் (என்சிடிஇ) 2014 விதிமுறைகளின்படி 2015-16-ம் கல்வி ஆண்டிலிருந்து பிஎட், எம்எட் படிப்பு காலம் ஓராண்டிலிருந்து 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டன.


தமிழக அரசும் என்சிடிஇ விதிமுறைகளை அமல்படுத்தும் வகையில் பிஎட், எம்எட் படிப்புக் காலத்தை 2 ஆண்டுகளாக உயர்த்தி உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் கல்வியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு படித்து வருகின்றனர்.இதற்கிடையே, உள்கட்டமைப்பு வசதி, ஆசிரியர் நியமனம், படிப்புக்காலம் உள்ளிட்டவை தொடர்பாக என்சிடிஇ கொண்டு வந்த 2014-ம் ஆண்டு விதிமுறை களை எதிர்த்து தமிழ்நாடு சுயநிதி கல்வியியல் கல்லூரிகள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு அது நிலுவையில் இருந்து வருகிறது.


என்சிடிஇ உத்தரவாதம்
தற்போது, இந்த வழக்கில், நிபுணர் குழு விசாரித்து இறுதி முடிவு எடுக்கும் வரை 2014-ம் ஆண்டு விதிமுறைகளை பின்பற்றுமாறு கல்வியியல் கல்லூரிகளை வற்புறுத்த மாட்டோம் என்று உயர் நீதிமன்றத்தில் என்சிடிஇ உத்தரவாதம் அளித்துள்ளது. எனவே, பிஎட் படிப்புக்காலம் முன்பு இருந்து வந்ததைப் போன்று ஓராண்டாக இருக்குமா அல்லது புதிய விதிமுறைகளின்படியே 2 ஆண்டுகளாக இருக்குமா என்ற சந்தேகம் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் எழுந்தது..

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.தங்கசாமி, பதிவாளர் எஸ்.கலைச்செல்வன் ஆகியோர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் நியமனம், உள்கட்டமைப்பு வசதிகள், பாடத்திட்டம் உள்ளிட்டவை தொடர்பாக 2014-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய விதிமுறைகளை பின்பற்றுமாறு கல்லூரிகளை வற்புறுத்த மாட்டோம் என்று என்சிடிஇ உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளதாக தெரிய வருகிறது. தமிழக அரசு பிறப்பித்த உத்தரவின்படி 2015-16-ம் கல்வி ஆண்டு முதல் பிஎட் படிப்புக்காலம் ஓராண்டிலிருந்து 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது. எனவே, பிஎட் படிப்புக்காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டதில் எந்தவித மாற்றமும் இல்லை. படிப்புக்காலம் 2 ஆண்டுகளாகத்தான் இருக் கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Posted: 25 Feb 2016 04:58 PM PST
Posted: 25 Feb 2016 04:46 PM PST
சேலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள் தனியார் பள்ளிகளில் பகுதி நேரமாகப் பணிபுரிவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.) அ.ஞானகௌரி எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:


சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு, நகரவை, நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்களில் சிலர் அரசுப் பணியில் இருக்கும் நிலையில் தனியார் பள்ளிகளிலும் பகுதி நேரம் பணிபுரிவதாகப் புகார் எழுந்துள்ளது.அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். தனியார் பள்ளிகளில் வகுப்பெடுக்கச் செல்லக் கூடாது என அனைவருக்கும் கட்டாயக் கல்விச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசுப் பணியாளராக பணிபுரிந்து அரசு ஊதியம் பெற்று வரும்நிலையில் தனியார் பள்ளிகளில் பகுதிநேரமாக பணிபுரிவது அரசுப் பணியாளர் நடத்தை விதிகளை மீறிய செயலாகும்.

எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் எவரேனும் தனியார் பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியராகப் பணிபுரிவதாகக் கண்டறியப்பட்டால்அப்பணியாளர் மீது துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மேலும், பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு இச்செயல்முறைகள் நகலினை சுற்றுக்கு விடப்பட்டு கையொப்பம் பெற்று பள்ளியின் கோப்பில் வைக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்..
Posted: 25 Feb 2016 05:45 PM PST




No comments:

Post a Comment