25 February 2016

25-02-2016

Posted: 24 Feb 2016 05:36 PM PST
புதுடில்லி : பணம் செலுத்துவதற்காக கிரெடிட், டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தும்போது, வசூலிக்கப்பட்ட சேவைக் கட்டணங்கள், சிறப்பு வசதிக் கட்டணங்கள், உபரிக் கட்டணங்கள் ஆகிய கட்டணங்களை ரத்து செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலமாக பொருட்களை வாங்கும்போது, வழங்கப்படும் தள்ளுபடி விகிதத்தை மாற்றியமைக்கவும் மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
Posted: 24 Feb 2016 05:33 PM PST
Posted: 24 Feb 2016 05:12 PM PST
அனைவருக்கும் கல்வி’ திட்டத்தின் நர்சரி மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் 1-வது வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை ஏழை

மாணவர்கள் உள்ளிட்டவர்கள் 25 சதவீதம் பேர் கட்டணம் இன்றி சேர்க்கப்படுகிறார்கள். அவ்வாறு சேர்க்கப்படும் மாணவர்களுக்கான

கல்வி கட்டணத்தை அந்த பள்ளிகளுக்கு அரசு செலுத்துகிறது.

அந்த வகையில் 2015-2016 கல்வி ஆண்டுக்கு மலைப்பகுதிகளில் 1-வது வகுப்புக்கு ஒரு மாணவருக்கு ரூ.23 ஆயிரத்து 805 என்றும் 8-வது


வகுப்பு படிக்கும் மாணவருக்கு ரூ.31 ஆயிரத்து 49 என்றும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மலைப்பகுதி இல்லாத மற்ற பகுதிகளில் 1-வது வகுப்பு மாணவருக்கு ரூ.23 ஆயிரத்து 575 என்றும், 8-வது வகுப்புக்கு ரூ.30 ஆயிரத்து 764

என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்படி பிற வகுப்புகளுக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா வெளியிட்டார்.

அவர் அறிவித்துள்ள இந்த கட்டணம், அரசு தனியார் பள்ளிகள் நிர்ணயித்த கட்டணம் ஆகிய இரண்டில் எது குறைவாக உள்ளதோ அந்த

கட்டணம், பள்ளிக்கு கொடுக்கப்படும்
Posted: 24 Feb 2016 05:10 PM PST
Posted: 24 Feb 2016 05:00 PM PST
Posted: 24 Feb 2016 04:57 PM PST
பிளஸ் 2 தேர்வு மார்ச், 4ல் துவங்குகிறது. மாணவர்கள் எப்போது தேர்வு எழுதலாம் என்பதற்கான விதிமுறைகளை, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்த 
சுற்றறிக்கை, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. 
அதன் விவரம்:
* பிளஸ் 2 தேர்வு காலை, 9:45 மணிக்கு துவங்கி, பகல், 1:15 மணிக்கு முடியும்
* முதல் மணி, 9:45 மணிக்கு அடிக்கும்; கண்காணிப்பாளர்கள், 'ஹால் டிக்கெட்'டை சரிபார்த்து, தேர்வர்களை அறைக்குள் அனுப்ப வேண்டும்
* பின், 9:50 மணிக்கு, தேர்வு விதிமுறைகள் குறித்து, அறை கண்காணிப்பாளர் விளக்குவார்


* இரண்டாவது மணி, 9:55 மணிக்கு அடிக்கப்பட்டதும், சீலிட்ட வினாத்தாள் உறை மாணவர்களிடம் காட்டப்படும். இரண்டு மாணவர்களிடம் கையெழுத்து பெற்ற பின், வினாத்தாள் கட்டு பிரிக்கப்படும்
* மூன்றாவது மணி, 10:00 மணிக்கு ஒலித்ததும், வினாத்தாள் தரப்படும் 
* நான்காவது மணி, 10:10 மணிக்கு ஒலித்ததும், முதன்மை விடைத்தாள்கள் வழங்கப்படும். மாணவர்கள் முகப்பு சீட்டில் உள்ள தங்கள் புகைப்படம், பெயர், விவரங்களை சரிபார்த்து கையெழுத்திட வேண்டும் 
* ஐந்தாவது மணி, 10:15 மணிக்கு அடித்ததும், தேர்வர்கள் தேர்வு எழுத துவங்கலாம் 
* முதலாவது மணி, ஒரு முறை; இரண்டாவது மணி, இரண்டு முறை என்ற வரிசையில், ஐந்தாவது மணி, ஐந்து முறை அடிக்கப்படும் 
* ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும், ஒரு முறை மணி அடிக்கப்பட்டு, மாணவர்கள் எச்சரிக்கை செய்யப்படுவர் 
* இறுதியாக, 1:10 மணிக்கு எச்சரிக்கை மணி ஒலிக்கும்; 1:15 மணிக்கு தேர்வு முடியும்.இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Posted: 24 Feb 2016 05:10 PM PST


Posted: 24 Feb 2016 04:53 PM PST
சமூக நலத்துறை 22.02.2016 தேதியிட்ட புதிய அரசாணை எண்.27-ஐ சமூக நலத்துறை அரசு முதன்மை செயலாளர் திரு.பி. சிவசங்கரன் வெளியிட்டுள்ளார் அதில் கூறப்பட்டுள்ளதாவது: 

தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.1000/- வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ள ஊனத்தின் அளவு 60 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இதன் மூலம் 40 சதவிகிதத்திற்கு மேல் ஊனம் இருந்தாலே இனிமேல் உதவித்தொகை வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமானம் இல்லாதவராகவும், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவராகவும், குடும்ப சொத்து மதிப்பு ரூ.50,000-க்கு குறைவாக இருக்க வேண்டும், குடும்பத்தில் 20 வயதுக்கு மேற்பட்ட ஆண் வாரிசு இருக்க கூடாது என்பது உள்ளடக்கிய ஆதரவற்றோராக இருக்க வேண்டும் என்ற விதி மாற்றுத்திறனாளிகளுக்கு தளர்த்தி, பணி இல்லாத மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் புதிய அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் பெயர் மாற்றம்
சமூக பாதுகாப்பு திட்டத்தில் செயல்படுத்தப்படும் ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை திட்டம் என்பதை மாற்றி, மாற்றுத்தினாளிகளுக்கான உதவித்தொகை திட்டம் என்று இனிமேல் அழைக்கப்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Posted: 24 Feb 2016 04:55 PM PST


Finance DepartmentYear : 2016 G.O No. 59 Dt: February 22, 2016 Download Icon(220KB)

PENSION – Contributory Pension Scheme – Settlement of accumulation under Contributory Pension Scheme in respect of CPS subscribers retired/resigned, died and terminated from service - Orders - Issued.

No comments:

Post a Comment