Posted: 12 Feb 2016 06:08 AM PST
பிரதமர் நரேந்திர மோடிக்கு டாக்டர் பட்டம் வழங்க உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசி நகரில் உள்ள பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தின் நூறாவது ஆண்டு பட்டமளிப்பு விழா வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இசைவு தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, பட்டமளிப்பு விழா மேடையில் மாணவர்களிடையே சிறப்புரை ஆற்றுகிறார்.
இந்த விழாவின்போது, பிரதமர் மோடிக்கு டாக்டர் பட்டம் அளிக்க முடிவு செய்துள்ளதாகவும், இதுதொடர்பாக அவரது ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சித்துறையில் புதுமை திட்டங்களை அறிமுகப்படுத்தி, சீர்திருத்தத்தை ஏற்படுத்தியமைக்காகவும், பொதுச்சேவை மற்றும் ஆட்சித்துறையில் பிரதமர் மோடி ஆற்றிய அளப்பரிய பணிகளுக்காக அவருக்கு கவுரவ சட்ட டாக்டர் பட்டம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
|
Posted: 12 Feb 2016 06:07 AM PST
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டத்தை திரும்ப பெற வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகச் சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் இன்னும் இரண்டு மாதங்களில் நடக்கவிருக்கிறது. தமிழகத்தில் அனைத்துத் தரப்பினரும் இந்த அரசுக்கு எதிராகப் போர்க் கொடி உயர்த்தியிருக்கிறார்கள்.
குறிப்பாக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், சத்துணவு -அங்கன்வாடிப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம், மறியல், வேலை நிறுத்தம் என்றுதொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.போராடுபவர்களின் நெருக்கடியான நிலைகள் குறித்து நானும்,தமிழகத்திலே உள்ள மற்ற எதிர்க் கட்சிகளும் எடுத்துக் காட்டியும் அவர்களை முதல்வர் அழைத்துப் பேசவில்லை.அதிமுக அரசின் வரலாற்றை அறிந்திருக்கும் அரசு அலுவலர்களும், ஆசிரியர்களும், சத்துணவு அங்கன்வாடி அலுவலர்களும், வணிகவரித் துறை அலுவலர்களும், வருவாய்த் துறை அலுவலர்களும் தொடர்ந்து போராட்டம் நடத்துவதன் மூலம் இப்போது எந்தப் பயனும் நேர்ந்து விடப் போவதில்லை.
எனவே போராட்டத்தில் ஈடுபட்டிருப்போர் அனைவரும் அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டு, பணிக்குத் திரும்பி மக்கள் நலனுக்கான பணியைத் தொடர்ந்து ஆற்றுவதுதான், அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும் நல்லது.காலம் கனியும், காரியம் கை கூடும், காத்திருப்பீர் என கூறியுள்ளார் கருணாநிதி.
|
Posted: 12 Feb 2016 06:06 AM PST
எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர் கள் அனைவரையும் அரசு பொதுத்தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்ற றிக்கையில் கூறியிருப்பதாவது:
எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு அரசு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் பயிலும் ஒரு சில மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் அளித்து மாணவர்களை பள்ளியைவிட்டு வெளியில் அனுப்பும் நிகழ்வுகள் ஒருசில மாவட்டங்களில் நடைபெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.அனைத்து மாணவர்களும் அரசு பொதுத் தேர்வில் தேர்ச் சிப் பெற தேவையான நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டி யது ஒவ்வொரு பள்ளித் தலை மையாசிரியரின் கடமையாகும். பொதுத் தேர்வு நெருங்கும் நேரத் தில் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுக்கும் தலை மையாசிரியர்கள் மீது கடுமை யான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட் டத்தில் இது போன்று நிகழ்வுகள் ஏதும் நடைபெறாத வண்ணம் கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு அந்த சுற்றறிக் கையில் கூறப்பட்டுள்ளது.
|
Posted: 11 Feb 2016 06:58 PM PST
தனியார் பள்ளிகளின் அடுத்த, மூன்று ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணத்தை, அரசு வெளியிட்டு உள்ளது. இதில், கடந்த ஆண்டை விட, 40 சதவீதம் அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயிக்க, நீதிபதி சிங்காரவேலர் தலைமையில், கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கமிட்டியினரால், பள்ளிகளின் உள்கட்டமைப்பு அடிப்படையில், கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே
இதன்படி, அடுத்த, மூன்று ஆண்டுகளுக்கான பட்டியலில், கடந்த ஆண்டை விட, 20 - 40 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களை விட, சென்னையின் பள்ளிகளில் கட்டணம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
|
Posted: 11 Feb 2016 06:55 PM PST
தனித்தேர்வர்களுக்கு 8ம்வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரலில் நடக்கவுள்ளது. இதை எழுத விரும்புவோர் பிப்.18 முதல் 29 வரை www.tndge.in என்ற இணையளத்தில் பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.பனிரெண்
தேர்வு கட்டணம் ரூ.125 மற்றும் 'ஆன்லைன்' விண்ணப்பத்தினை பதிவு செய்யும் கட்டணம் ரூ.50 ஐ சேவை மையங்களிலேயே நேரடியாக செலுத்தலாம். விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல் அல்லது பதிவுத்தாள் நகல் அல்லது பிறப்புச்சான்றிதழ் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றினை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும், என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். |
Posted: 11 Feb 2016 05:16 PM PST
தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும் பி.எப்., பணத்தை ஆன்லைனில் திரும்ப பெறும் வசதியை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது
.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எ.ப்.ஓ.,), ஆரக்கிள் ஓ.எஸ்., மூலம் ஒருங்கிணைந்த டேட்டா சென்டர்களை செகந்திராபாத், கர்கூன், துவாரகா ஆகிய இடங்களில் அமைக்கவுள்ளது. இந்த டேட்டா சென்டர்களுடன் நாடு முழுவதிலுமுள்ள 123 இ.பி.எப்.ஓ., அலுவலகங்களும் இணைக்கப்படும். இப்பணி ஜூன் மாதத்தில் நிறைவாகும். இதனையடுத்து ஆகஸ்டு மாதம் முதல், பி.எப்., பணத்தை ஆன்லைனில் திரும்ப பெறும் புதிய வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
இப்புதிய வசதியில், சந்தாதாரர்களின் பி.எப். கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கு எண், ஆதார் எண், பான் கார்டு எண் மற்றும் யூ.ஏ.என். நம்பரை குறிப்பிட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பின் பி.எப்., பணம் நேரடியாக வங்கிக்கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்யப்படும். இப்புதிய வசதியால் சந்தாதாரர்கள் சில மணிநேரங்களிலேயே பி.எப்., பணத்தை திரும்ப பெற முடியும்.
|
Posted: 11 Feb 2016 05:13 PM PST
புதுடில்லி,: சியாச்சின் பனிச் சரிவில் சிக்கி, ஆறு நாட்களுக்கு பிறகு, நேற்று முன்தினம் உயிருடன் மீட்கப்பட்ட, ராணுவ வீரர், கர்நாடகாவைச் சேர்ந்த, ஹனுமந்தப்பா உடல் நிலை, நேற்று மோசமடைந்ததை அடுத்து அவர் இறந்தார்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், இந்தியா - பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில், கடல் மட்டத்திலிருந்து,
20 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள, உலகின் மிக உயரமான போர்க்களம் சியாச்சினில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள், கடந்த 3ம் தேதி, பனிச்சரிவில் சிக்கிக் கொண்டனர். அவர்களில், தமிழகத்தை சேர்ந்த, நான்கு பேர் உட்பட, பத்து பேர் சரிந்து விழுந்த பனிப்பாறைகளுக்குள் சிக்கிக் கொண்டனர். ஒன்பது பேர் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம், வீரர் ஹனுமந்தப்பா உயிருடன் மீட்கப்பட்டார்.டில்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனினும், அவரின் உடல் நிலை நேற்று மோசமடைந்ததாக, மருத்துவமனையின் செய்திக்குறிப்பு தெரிவித்தது.
மருத்துவமனையின் வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:பனி, குளிரினால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் இல்லாத போதும், ஆறு நாட்கள், தண்ணீர் கூட இல்லாமல் இருந்ததால், ஹனுமந்தப்பாவின் உடல் சக்தியை இழந்து விட்டது. இதனால் அவருடைய நுரையீரல் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளது; ரத்த ஓட்டமும் சரியாக இல்லை.மூளையில் ஆக்சிஜன் குறைந்துள்ளது. நுரையீரலின் இரண்டு பகுதிகளிலும், நிமோனியா காணப்படுகிறது. அவர் உயிருடன் மீள, அனைவரும் பிரார்த்திப்போம். இவ்வாறு டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்
மிகவும் மோசமான நிலையில் உள்ள அவரை காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாகவும், டாக்டர்கள் கூறியிருந்தனர். ஹனுமந்தப்பா பூரண குணமடைய வேண்டும் என, நாடு முழுவதும் நேற்று ஏராளமானோர் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அமீர் கான் ஆகியோரும்,மும்பையில், அலுவலகங்களுக்கு உணவு டப்பாக்களை வழங்கும், 'டப்பாவாலா'க்கள், சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தை நடத்தினர்.
ஆனால், அவ்வளவும் பலனளிக்காமல் அவர் வீரமரணம் அடைந்தார். நாடு முழுவதும் கடும் சோகம் கவ்விக்கொண்டது.
|
Posted: 11 Feb 2016 05:07 PM PST
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே, எஸ்.வி.எஸ்., இயற்கை மருத்துவக் கல்லுாரியில், மூன்று மாணவியர் மர்மமான முறையில், கிணற்றில் பிணமாகக் கிடந்தனர். கல்லுாரி மீது அடுக்கடுக்காக புகார்கள் வந்ததால், மாவட்ட நிர்வாகம், கல்லுாரியை இழுத்து மூடியது.
பாதிக்கப்பட்ட மாணவர்கள், அரசு யோகா - இயற்கை மருத்துவக் கல்லுாரியில் சேர்க்கப்படுவர் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதன்படி, மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு கலந்தாய்வு, சென்னை, அரும்பாக்கம், அண்ணா சித்த மருத்துவக் கல்லுாரி வளாகத்தில், நேற்று நடந்தது. முதலாம் ஆண்டு முதல், பயிற்சி டாக்டர் வரையிலான, 136 மாணவ, மாணவியர் அழைக்கப்பட்டிருந்தனர்; 112 பேர் பங்கேற்றனர்; ஒருவர் கல்லுாரியில் படிக்க விரும்பவில்லை. மீதமுள்ள, 111 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டன.
மாணவியை தாக்க முயற்சிகலந்தாய்வுக்கு வந்த பயிற்சி மாணவி கோட்டீஸ்வரி என்பவரை சுற்றி வளைத்த பெற்றோர், கல்லுாரியில் பணம் வசூலித்தது இவர் தான்; எப்படி இங்கு வந்தார் எனக் கூறி, அவரை தாக்க முயன்றனர்; அவர்களை போலீசார் தடுத்தனர்.
கோட்டீஸ்வரி கூறுகையில், &'படிப்பை முடித்து பயிற்சியில் இருந்த என்னை, அலுவலகப் பணிக்கு பயன்படுத்தி, பெற்றோரிடம் பணம் வசூலிக்க வைத்தனர். என் சான்றிதழ் வேண்டும் என்பதால், அவர்கள் சொன்னதை செய்தேன். நானும் உங்களைப்போல் பாதிக்கப்பட்ட மாணவி தான், எனக் கூறி அழுதார்.
எப்போது வந்தாலும் சேர்க்கை
நேற்றைய கலந்தாய்வில், 2008 முதல், 2015 வரையிலான, அரசு, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகள் தரப்பட்டன. 24 பேர் கலந்தாய்வுக்கு வரவில்லை. அவர்கள், ஒரு வாரத்திற்குள் எப்போது வந்தாலும் கலந்தாய்வில் சேரலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2015 - 16க்கான, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் குறித்த விவரம் இல்லாததால், கலந்தாய்வில் அனுமதிக்கப்படவில்லை. இதனால், மாணவர் மற்றும் பெற்றோர், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகம் மூலம் தகவல் சேகரித்து, மீண்டும் சேர்க்கை நடத்தப்படும் என, அதிகாரிகள் சமாளித்தனர்.
கள்ளக்குறிச்சி கல்லுாரியில் நிகழ்ந்த கொடுமை கொஞ்சம், நஞ்சமல்ல. கல்லுாரி மூடப்பட்டு, நிர்கதியாக நின்ற எங்களுக்கு, அரசின் கனிவுப் பார்வையால், மருத்துவக் கல்வி மீண்டும் நனவாகி உள்ளது; முதல்வருக்கு நன்றி. இதற்கு, சக மாணவியர் மூன்று பேரின் உயிரை விலை கொடுத்தது கவலையாக உள்ளது.- மூன்றாம் ஆண்டில் சேர்க்கை பெற்ற மாணவி கலையரசிஅரசு கல்லுாரியில் சேர்ந்ததால் சிக்கல் இல்லை.
ஆனால், கள்ளக்குறிச்சி கல்லுாரியில் சேர, ஆறு லட்சம் ரூபாய் கட்டி உள்ளோம். அதற்கு, மாதம், 30 ஆயிரம் ரூபாய் வட்டிகட்டுகிறோம். நாங்கள் கட்டிய பணத்தை திரும்ப கிடைக்கச் செய்தால் நிம்மதி அடைவோம்.- இரண்டாம் ஆண்டில் ஒதுக்கீடு பெற்ற வாணிஸ்ரீ
|
Posted: 11 Feb 2016 05:05 PM PST
மாணவர்கள் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதைத் தொடர்ந்து, வருகிற 2016-17 கல்வியாண்டில் 70 துறைகளைக் கைவிட 30 பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பித்திருப்பது தெரியவந்துள்ளது.
இதுபோல, மாணவர் சேர்க்கை இடங்களைக் குறைக்க 20-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளன.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆள் குறைப்பு, ஊதியக் குறைப்பு நடவடிக்கைகள் காரணமாக, கடந்த 5 ஆண்டுகளாக எம்.சி.ஏ., பி.டெக். தகவல் தொழில்நுட்பம், பி.இ, கணினி அறிவியல், இசிஇ போன்ற கணினிப் படிப்புகள் மீது மாணவர்களின் ஆர்வம் வெகுவாகக் குறைந்து வருகிறது.
மெக்கானிக்கல் பிரிவு மீது ஆர்வம்: அதேவேளையில், இயந்திரவியல், கட்டுமானப் பொறியியல் படிப்புகள் மீது மாணவர்களுக்கு ஆர்வம் அதிகரித்திருக்கிறது.
2013-இல் இயந்திரவியல் பிரிவை 28,010 பேரும், மின்னணுவியல் தொடர்பியல் (இசிஇ) பிரிவை 22,449 பேரும், கட்டுமானப் பொறியியல் பிரிவை 15,655 பேரும், கணினி அறிவியல் பிரிவை 13,423 பேரும் தேர்வு செய்தனர். 2014-இல் இயந்திரவியல் பிரிவை 26,770 பேரும், மின்னணுவியல் தொடர்பியல் பிரிவை 19,012 பேரும், கட்டுமானப் பொறியியல் பிரிவை 17,010 பேரும், கணினி அறிவியல் பிரிவை 13,987 பேரும் தேர்வு செய்தனர்.
2015-இல் இயந்திரவியல் பிரிவை 26,942 பேரும், மின்னணுவியல் தொடர்பியல் பிரிவை 18,707 பேரும், கட்டுமான பொறியியல் பிரிவை 15,089 பேரும், கணினி அறிவியல் பிரிவை 15,056 பேரும் தேர்வு செய்தனர்.
குறைந்து வரும் ஒட்டுமொத்த மாணவர்கள் சேர்க்கை: கணினி அறிவியல் படிப்புகள் மீது ஆர்வம் குறைந்து வருவது போல, பொறியியல் கல்லூரிகளில் ஒட்டுமொத்த மாணவர்கள் சேர்க்கையும் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. கடந்த 2013-இல் அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய ஒற்றைச்சாளர கலந்தாய்வில் 2,07,141 இடங்கள் இடம் பெற்றிருந்தன. இவற்றில் 1,27,838 இடங்கள் நிரம்பின. 79,303 இடங்கள் காலியாக இருந்தன.
இதுபோல, 2014-இல் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 576 ஆக உயர்ந்தது. அப்போது இடம் பெற்றிருந்த 2,11,589 அரசு ஒதுக்கீட்டு பி.இ. இடங்களில் 1,09,079 இடங்கள் மட்டுமே நிரம்பின. 1,02,510 இடங்களில் சேர்க்கை நடைபெறவில்லை. 2015-இல் கல்லூரிகளின் எண்ணிக்கை 574 ஆகக் குறைந்தது. மாணவர்கள் சேர்க்கை இல்லாததால், 2 கல்லூரிகள் இழுத்து மூடப்பட்டன. அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 2,02,422-ஆக இருந்தது. இவற்றில் 1,07,969 இடங்கள் மட்டுமே நிரம்பின. 94,453 இடங்கள் காலியாக இருந்தன.
மேலும், அண்ணா பல்கலைக்கழக புள்ளிவிவரங்களின்படி, 2015-16 பொறியியல் சேர்க்கை முடிவில், 33 கல்லூரிகளில் 60 சதவீத அரசு ஒதுக்கீட்டு பி.இ. இடங்கள் நிரம்பவில்லை. இந்தக் கல்லூரிகளில் முக்கியத் துறைகளில் 50-க்கும் மேற்பட்ட இடங்கள் சேர்க்கையின்றி காலியாக இருந்தன.
இந்த நிலை வருகிற 2016-17 கல்வியாண்டிலும் தொடரும் என பொறியியல் கல்லூரிகள் அஞ்சுவதால், பல பொறியியல் கல்லூரிகள் ஏராளமான துறைகளைக் கைவிட முடிவு செய்துள்ளன.
அதன்படி, வருகிற 2016-17 கல்வியாண்டில் தமிழகம் முழுவதிலுமிருந்து 30 கல்லூரிகள் 70 துறைகளைக் கைவிட விண்ணப்பித்துள்ளன. இதில் குறிப்பாக, பி.இ. தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல், மின்னணுவியல் தொடர்பியல், ஏரோனாட்டிகல் போன்ற துறைகள் அடங்கும். மேலும், 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் பல்வேறு துறைகளில் மாணவர்கள் சேர்க்கை இடங்களைப் பாதியாகக் குறைக்க அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளன என அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக, கடந்த ஆண்டுகளைப் போலவே பொறியியல் கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் பேராசிரியர்களில் நூற்றுக்கணக்கானோர் வேலையை இழக்கும் நிலை உருவாகி இருப்பதாகவும், பல கல்லூரிகள் ஏற்கெனவே இந்த ஆள் குறைப்பு நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டதாகவும் தனியார் பொறியியல் கல்லூரிப் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
4 பேராசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி!
பொறியியல் படிப்புகள் மீதான மாணவர்களின் ஆர்வம் குறைந்து வருவதைத் தொடர்ந்து, ஆள் குறைப்பு நடவடிக்கைகளை கல்லூரிகள் தீவிரப்படுத்தியுள்ளன.
இதுகுறித்து தனியார் பொறியியல் கல்லூரிப் பேராசிரியர்கள் சிலர் கூறியதாவது:
கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாகவே பொறியியல் படிப்புகள் மீதான ஆர்வம் குறைந்து, மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது.
இதனால், மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தவும், வருவாய்ப் பாதிப்பை ஈடுகட்டவும் பல்வேறு நடவடிக்கைகளை தனியார் பொறியியல் கல்லூரிகள் மேற்கொண்டு வருகின்றன.
பல கல்லூரிகள் அங்கு பணிபுரியும் பேராசிரியர்கள் தலா 2 மாணவர்களை ஒவ்வோர் ஆண்டும் சேர்த்தாக வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கின்றன. குறிப்பாக ஈரோடு, கோவை, திருப்பூர் பகுதிகளில் இந்த நிலை தொடர்கிறது. அவ்வாறு மாணவர்களைச் சேர்க்காத பேராசிரியர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணியில் இருந்து நீக்கப்படுகின்றனர்.
இப்போது சென்னையில் உள்ள பிரபல கல்லூரிகள், மாணவர்கள் சேர்க்கை குறைந்ததால் ஆள் குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. இதில் புதிய உத்தியை அந்தக் கல்லூரிகள் பின்பற்றுகின்றன. அதாவது, பணிபுரியும் அனைத்துப் பேராசிரியர்களுக்கும் தேர்வு நடத்தி, அதில் தேர்வு பெறுபவர்களை மட்டும் பணியில் வைத்துக் கொண்டு தேர்ச்சி பெறாதவர்களை நீக்கும் நடவடிக்கையை எடுத்து வருகின்றன.
சென்னை கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பிரபல கல்லூரியில் கடந்த வாரம் நடத்தபபட்ட இந்தத் தேர்வை 40 பேராசிரியர்கள் எழுதினர். அவர்களில் 4 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். கல்லூரிகளின் இந்த நடவடிக்கை காரணமாக நூற்றுக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, தனியார் பொறியியல் கல்லூரிகளின் இந்த நடவடிக்கைகளில் பல்கலைக்கழகம் தலையிட முடியாது என்றனர்.
|
Posted: 11 Feb 2016 04:51 PM PST
வெள்ளைக்காரன் நமக்கு பெப்சியையும், கோக்க கோலாவையும் காட்டிவிட்டு , அவன் இளநீர் குடிக்கிறான் !! இதுக்கு பெயர் தான் பண்டமாற்றம் !
வெளிநாட்டில் ஒரு இளநீரின் விலை £3.20 = 315 ரூபா
இப்பொழுதாவது அதன் அருமையை புரிந்து கொள்ளுங்கள் !!
|
Posted: 11 Feb 2016 04:50 PM PST
மூத்த அமைச்சர்கள் இடம்பெற்ற ஐவர் அணி பேச்சு நடத்தியும் சிக்கல் தீராததால், கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர் சங்கத்தினர், நேற்று காலவரையற்ற, 'ஸ்டிரைக்'கை துவக்கினர். மூன்று லட்சம் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் பங்கேற்றுள்ளதால், அரசுப் பணிகள் ஸ்தம்பித்தன.புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும்; காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உட்பட, பல கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும் மற்றும் பல துறை சார்ந்த சங்கங்களும் போராடி வந்தன.
அப்போது, ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளை அரசு செயல்படுத்தாததாலும், ஆட்சிக்காலம் முடிய உள்ளதாலும், தற்போது போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன. இதற்கு தீர்வு காண, மூத்த அமைச்சர்கள் இடம் பெற்ற, ஐவர் அணி பேச்சு நடத்தியது. ஆனால், அதற்கு உரிய பலன் கிடைக்கவில்லை.'அரசாணைகள் தர நீங்கள் முயற்சியுங்கள்; நாங்கள் போராட்டத்தை துவக்குகிறோம்'எனக்கூறி, அரசு ஊழியர் சங்கம் சார்பில், நேற்று திட்டமிட்டபடி, காலவரையற்ற ஸ்டிரைக் துவங்கியது.இந்த சங்கத்தில், வருவாய் துறை, வணிக வரித்துறை, ஊரக வளர்ச்சி என, 68 சங்கங்கள் உள்ளன. வணிக வரித்துறையில், ஒரு வாரத்திற்கும் மேலாக, ஸ்டிரைக் நீடிப்பதால், ஏற்கனவே பணிகள் முடங்கி, வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று, அரசின் மற்ற துறைகளிலும் பணிகள் முடங்கின. இதனால், மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இந்தபோராட்டத்தில், சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களும் பங்கேற்றனர். இதனால், மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில், சத்துணவு வழங்கும் பணியிலும் பாதிப்பு ஏற்பட்டது. ஓய்வு பெற்றஊழியர்கள் மற்றும் வெளி ஆட்கள் மூலம், பல இடங்களில் சத்துணவு வழங்கும் பணி நடந்தது. அரசு ஊழியர்கள், மூன்று லட்சம் பேர் வரை பங்கேற்றதால், அரசுப் பணிகள் முற்றிலும் முடங்கின.
'அரசாணை கிடைத்தால் ஸ்டிரைக்கை முடிப்போம்' :
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலர் தமிழ்செல்வி கூறியதாவது: மூத்த அமைச்சர்கள் பேச்சு நடத்திய போது, 'கோரிக்கையை முதல்வரிடம் கொண்டுசெல்கிறோம்' என்றனர்; அமைதியாக, சுமூகமாக பேசினர். ஆனால், உறுதியான முடிவு கிடைக்கவில்லை. எனவே, திட்டமிட்டபடி காலவரையற்ற ஸ்டிரைக் துவக்கி உள்ளோம்.புதிய ஓய்வூதிய திட்டப்படி, ஓய்வு பெற்ற, இறந்த, 6,000பேருக்கு இதுவரை, பணப்பயன் கிடைக்கவில்லை. கோரிக்கைகளை ஏற்று, அரசாணைகள் ஓரிரு நாளில் கிடைக்கும் என,நம்புகிறோம். அரசாணைகள் கிடைத்தால், ஸ்டிரைக்கை கைவிட தயார்; அரசுப் பணிகளை முடக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல.இவ்வாறு அவர் கூறினார். இந்த போராட்டத்தில், அரசு அலுவலர் ஒன்றியம், ஆசிரியர் சங்க கூட்டமைப்பான, 'ஜாக்டோ' உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்கவில்லை. காலவரையற்ற ஸ்டிரைக் நீடித்தால், பணிகள் முடங்கி, அரசுக்கு பெரும் சிக்கலாக அமையும்.
'நசுக்கப்படுகிறோம்':
தமிழகத்தில், 68 சங்கங்களை உள்ளடக்கிய, அரசு ஊழியர் சங்கம் ஸ்டிரைக் நடத்தி வருகிறது. ஆனால், பதிவுத்துறைபணியாளர் சங்கங்கள் இதில் பங்கேற்கவில்லை.
பதிவுத்துறை அனைத்து பணியாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: பதிவுத்துறையில், 50 ஆயிரம் பேர் உள்ளனர். பதிவுத்துறை சங்கங்கள் ஆரம்பத்தில், போராட்டங்களில் தீவிரம் காட்டி வந்தது.கோரிக்கை மனு கொடுக்கச் சென்றாலும், போராட்ட, 'நோட்டீஸ்' தரச்சென்றாலும், துறைத் தலைமை யாரையும் சந்திப்பது இல்லை. சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் குறி வைத்து பழி வாங்கப்படுகின்றனர். எனவே, கோரிக்கை குறித்து குரல் எழுப்பக்கூட முடியாமல் நசுக்கப்பட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
|
Posted: 11 Feb 2016 04:47 PM PST
|
Posted: 11 Feb 2016 04:44 PM PST
![]() |
Posted: 11 Feb 2016 04:41 PM PST
ஒரு கம்பெனியின் அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. ஆகையால் ரயில் நிலையத்துக்கு உடனே செல்ல வேண்டி டாக்ஸி ஒன்றை பிடித்து உடனே ரயில்வே ஸ்டேஷன் போகுமாறு டிரைவரிடம் சொன்னார்.
இவர்கள் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, இவர்களுக்கு முன்னாள் சென்ற கார் ஒன்று திரும்புவதற்கான சிக்னல் எதுவும் கொடுக்காமல் திடீரென்று திரும்பிவிட ஒரு கணம் நிலை தடுமாறிய டாக்ஸி டிரைவர் உடனே பிரேக்கை அப்ளை செய்து சரியாக முன் சென்ற காரை இடிப்பதற்கு ஒரு இன்ச் முன்னதாக நிறுத்தினார்.
அந்த காரிலிருந்து எட்டிப் பார்த்த அதன் ஓட்டுனர் இவர்களை கன்னா பின்னாவென்று நா கூசும் வார்த்தைகளை பயன்படுத்தி திட்ட ஆரம்பிக்கிறான்.இந்த டாக்சி டிரைவரோ பதிலுக்கு எதுவும் சொல்லாமல் ஜஸ்ட் ஒரு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு டாட்டா காட்டுவது போல கைகளை காட்டுகிறார்.
அவர் அப்படி செய்தது ஏதோ நண்பரை பார்த்து செய்வது போல இருந்ததே தவிர தவறாக வண்டி ஒட்டிய ஒரு டிரைவரிடம் செய்வது போல இல்லை.“ஏன் அவனை சும்மா விட்டீங்க? நாலு வாங்கு வாங்கியிருக்கலாம் இல்ல… அவன் மேல தப்பு வெச்சிகிட்டு நம்ம மேல எகிர்றான்..?” என்று அதிகாரி டாக்சி டிரைவரிடம் கேட்கிறார்.அதற்கு டாக்சி டிரைவர் சொன்னது தான் ‘குப்பை வண்டி விதி’ எனப்படுவது.
ஆங்கிலத்தில் ‘The Law of the Garbage Truck’ என்பார்கள்.“இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ‘குப்பை வண்டி’ என்று பெயர் ஸார். பல மனிதர்கள் இப்படித்தான் குப்பை வண்டிகள் போல இருக்கிறார்கள். மனம் நிறைய குப்பைகளையும் அழுக்குகளையும், வைத்திருப்பார்கள். விரக்தி, ஏமாற்றம், கோபம் அவர்களிடம் நிறைந்திருக்குக்ம்.
அது போன்ற குப்பைகள் சேரச் சேர அதை இறக்கி வைக்க அவர்களுக்கு ஓரிடம் தேவை. சில நேரங்களில் அதை நம்மிடம் அவர்கள் இறக்கி வைப்பார்கள். அதை நாம் பர்சனலாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஜஸ்ட் அவர்களை பார்த்து ஒரு புன்னகை சிந்தி, கைகளை ஆட்டிவிட்டு நாம் போய்கொண்டே இருக்க வேண்டும்.
அவர்கள் நம் மீது கொட்டும் குப்பைகளை நாம் சுமந்து கொண்டு போய் நம் பணிபுரியும் இடத்திலோ அல்லது வீட்டிலோ தெருவில் மற்றவர்களிடமோ நாம் கொட்டக்கூடாது சார். நம்ம பேர் தான் நாறிப்போகும்…!!” என்று சொல்ல, அதிகாரி அதில் உள்ள நுணக்கத்தை அறிந்து வியந்துவிட்டார்.
இதில் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால் வாழ்க்கையில் வெற்றி பெற்ற சாதனையாளர்கள் எவரும் இந்த குப்பைவண்டிகள் தங்கள் அன்றைய நாளை ஆக்கிரமித்துக்கொள்ள அனுமதிக்கவே மாட்டார்கள் என்பது தான்.
அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ, வெளியிலோ காரணமின்றி உங்கள் மீது யாரேனும் எரிந்து விழுந்தாலோ, அல்லது வன்சொற்கள் வீசினாலோ பதிலுக்கு நீங்களும் வார்த்தை யுத்தத்தில் இறங்காது ஜஸ்ட் ஒரு புன்னைகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுங்கள்.நம்மை சரியாக நடத்துகிறவர்களை நேசிப்போம். அப்படி நடத்தாதவர்களுக்காக பிரார்த்திப்போம். இது ஒன்றே நாம் செய்யவேண்டியது.
வாழ்க்கை என்பது 10% நாம் எப்படி உருவாக்குகிறோம் என்பதை பொறுத்தது.
90% நாம் எப்படிஎடுத்துக்கொள்கிறோம் என்பதையே பொருத்தது.
|
Posted: 11 Feb 2016 04:37 PM PST
ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். யாரும் ஆன்லைனில் மருந்துகளை வாங்க வேண்டாம் என்று தமிழக மருந்து கட்டுப்பாடு துறை இயக்குநர் அப்துல்காதர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் மற்ற பொருட்களைப் போலவே மருந்துகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு மருந்து வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கக்கோரி கடந்த ஆண்டு அக்டோபர் 13,14 ஆகிய தேதி களில் நாடு முழுவதும் உள்ள 8 லட் சம் மருந்து கடைகளை அடைத்து 40 லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட் டனர்.
ஆன்லைனில் வேண்டாம்
ஆன்லைன் மருந்து விற்ப னைக்கு தடை விதிக்கக்கோரி மத் திய அரசை மருந்து வணிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற னர். இந்நிலையில் மத்திய மருந்து கட்டுப்பாட்டு மையம், ஆன்லைனில் மருந்து விற்பனை செய்வதற்கு அனுமதி இல்லை. ஆன்லைனில் யாராவது மருந்து விற்றால் அவர்கள் மீது நட வடிக்கை எடுக்கலாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது.
தமிழக மருந்து கட்டுப்பாடு துறையும் தீவிரமாக செயல்பட்டு ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்த சிலர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்கள் யாரும் ஆன்லைனில் மருந்துகளை வாங்க வேண்டாம் என்று தமிழக மருந்து கட்டுப்பாடு துறை தெரிவித்துள்ளது.
கடும் நடவடிக்கை
இது தொடர்பாக தமிழக மருந்து கட்டுப்பாடு துறை இயக்குநர் அப்துல்காதர் கூறியதாவது:
ஆன்லைனில் விற்கப்படும் மருந்துகளின் தரத்தை கண்டுபிடிப் பது கடினம். இதனால் மக்கள் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப் புள்ளது. ஆன்லைனில் மருந்து விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மத்திய மருந்து கட்டுப்பாடு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி நட வடிக்கை எடுத்து வருகிறோம். பொதுமக்கள் யாரும் ஆன்லைனில் மருந்துகளை வாங்க வேண்டாம். டாக்டர் பரிந்துரைச் சீட்டை காண்பித்து மருந்து கடைகளில் மருந்துகளை வாங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆன்லைனில் 19 நிறுவனங்கள்
இதுபற்றி தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன் கூறியதாவது:
நாடு முழுவதும் 19 நிறுவனங்கள் ஆன்லைனில் மருந்துகளை விற்று வருகின்றன. ஆன்லைனில் மருந்து கள் விற்பனைக்கு இதுவரை யாருக்கும் உரிமம் வழங்கவில்லை. ஆனால் சட்டத்தை மீறி மருந்து களை விற்பனை செய்து வருகின் றனர். இதனால் போலி மற்றும் தரமில்லாத மருந்துகள் புழக்கத்தில் வருவதற்கு வாய்ப்புள்ளது.
மருந்து என்பது மற்ற பொருட்களைப் போல் இல்லை, உயிர் காக்கும் பொருளான மருந்துகளை மிகவும் கவனமாக கையாள வேண்டும். மக்கள் டாக்டரின் பரிந்துரைச் சீட்டுடன் வந்து மருந்து கடைகளில் மருந்துகளை வாங்கி உட்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
|
Posted: 11 Feb 2016 04:36 PM PST
எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் மொழித்தேர்வுக்கு பதிலாக சிறுபான்மையின மாணவர்கள் அவர்களின் தாய்மொழியில் தேர்வு எழுத அரசு தேர்வுகள் துறை முடிவு செய்துள்ளது.எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுதமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு வருகிற மார்ச் மாதம் 15-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 13-ந் தேதி முடிவடைகிறது. இந்த தேர்வை 11 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். கடந்த 2006-ம் ஆண்டு
முதல் சிறுபான்மையின மாணவர்கள் உள்பட அனைத்து தரப்பு மாணவர்களும் தமிழ் பாடத்தை முதல் மொழிப்பாடமாக எடுத்து படிக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதன்படி 2006-ம் ஆண்டு 1-வது படித்தவர்கள் இந்த ஆண்டு 10-வது வகுப்பு படிக்கவேண்டும். எனவே அந்த மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தமிழை முதல் பாடமாக எடுத்து படிக்கவேண்டும் என்றும், அப்படித்தான் தேர்வு எழுதவேண்டும் என்றும் அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டது. கோர்ட்டு உத்தரவுஇந்த நிலையில், சிறுபான்மையின மாணவர்கள் தமிழ் பாடத்தை முதல் பாடமாக எடுத்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுவதை எதிர்த்து, சிறுபான்மை மொழி பள்ளிகளைச் சேர்ந்த சில மாணவர்களும், பள்ளிக்கூட நிர்வாகிகளும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.மனுவை விசாரித்த நீதிபதிகள், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் தேர்வு எழுதாமல் தெலுங்கு உள்ளிட்ட சிறுபான்மை மொழிகளில் அந்த மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று இடைக்கால உத்தரவிட்டனர்.இதற்கிடையில், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நெருங்குவதால், அரசு தேர்வுத்துறை அதிகாரி ஒருவரிடம் இதுகுறித்து கேட்டபோது, அவர் கூறியதாவது:-சிறுபான்மையின மொழியில் தேர்வு எழுதலாம்தமிழ்நாடு முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 15-ந் தேதி தொடங்குகிறது. தமிழ் பாடத்தை முதல் பாடமாக எடுத்து படிக்காத சிறுபான்மையின மாணவர்கள் அவர்கள் படித்த சிறுபான்மை இன மொழியிலேயே (தாய் மொழி) இந்த ஆண்டு தேர்வு எழுதலாம்.இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார். |
12 February 2016
12-2-20160news
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment