15 January 2016

Posted: 14 Jan 2016 06:44 PM PST
Posted: 14 Jan 2016 06:42 PM PST
பொங்கல் அன்று சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் உடன் தொட்டு கொள்ள குழம்பு வைப்போம் . 7,9,11 என்று ஒற்றை படை எண்ணிகையில், நாட்டு காய்கள் கொண்டு செய்யப்படும் இந்த குழம்பை, கொஞ்சம் கெட்டியாக வைக்கவேண்டும்.
படத்தில் சர்க்கரை பொங்கல் , வெண் பொங்கல் , கூட்டு குழம்பு
தேவை:
பரங்கி காய் (பரங்கி பிஞ்சு இருந்தால் சுவையாக இருக்கும் , இல்லை என்றால் பழம் ), 1 கிற்று
மொச்சை(உறித்தது)- 2 கைபிடி

கத்திரி காய் - 2
அவரை - 15
சர்க்கரை வள்ளி கிழங்கு-1
வாழை காய் - 1
உருளை- 1
சின்ன வெங்காயம் - 1 கைபிடி 
தக்காளி - 2
கொத்தமல்லி இலை - 1 கைபிடி 
புளி - 1 எலுமிச்சை அளவு
மிளகாய் தூள் - 1 Tbsp அல்லது காரத்துக்கு ஏற்ப
மல்லி தூள்- 1 அல்லது 11/2 Tbsp
மஞ்சள் தூள்- 1 tsp
கல் உப்பு - சுவைக்கு ஏற்ப
நல்ல எண்ணெய் - 2 or 3 Tbsp
தாளிக்க :
கடுகு - 1/2 tsp
உளுந்து - 1 tsp
வெந்தயம் - 1/2 tsp
சீரகம் - 1 tsp
மிளகு - 1/2 tsp
கறிவேப்பிலை - 1 கைபிடி
செய்முறை :
பரங்கி காய், சர்க்கரை வள்ளி கிழங்கு, வாழை காய்களை பட்டை சீவி சிறிய துண்டுகளாக வெட்டவும். மற்ற காய்களையும் இதே போல் சிறிய துண்டுகளாக வெட்டவும்.
வெங்காயத்தை தோல் உறித்து இரண்டாக வெட்டவும்.
தக்காளியை நீட்ட வாகில் வெட்டவும்.
புளியை கரைத்து வைக்கவும் .
சட்டியில் எண்ணையை காயவைத்து , தாளிக்க கொடுத்த பொருள்களை சேர்க்கவும் .எல்லாம் பொரிந்து, லேசாக சிவந்த பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் லேசாக சிவக்க வேண்டும் .பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும் .தக்காளி வதங்கிய பின் காய்களை சேர்த்து வதக்கவும் . காய்கள் நன்றாக வதங்க வேண்டும். எண்ணெய் போதவில்லை என்றால் இன்னும் கொஞ்சம் உற்றி கொள்ளவும். இப்போது புளி தண்ணீர், மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், கல் உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும் . காய்கறிகள் வெந்து குழம்பு நன்றாக சுண்டிய பின் கொத்தமில்லி இலை போட்டு இறக்கவும்.
குறிப்பு :
காய்கள் நன்றாக வதங்கினால் தான் குழம்பு சுவையாக இருக்கும் .
குழம்பு என்று சொன்னாலும், இது சாந்து போல் தான் இருக்க வேண்டும் , அதனால் தண்ணீர் சேர்க்கும் போது அளவாக சேர்க்கவும்.
Posted: 14 Jan 2016 06:31 PM PST
Posted: 14 Jan 2016 06:27 PM PST
மிழர் திருநாளாம் பொங்கல் திருநாள். இந்த நன்னாளிலே சுப ஓரைகளில் சூரிய பகவானுக்கு பூஜை செய்தால், அஷ்ட லஷ்மிகளும் நம் வீட்டில் வாசம் செய்யும், நம்மை காக்கும். மன்மத வருடம், தை மாதம் முதல் நாள் 15.1.2016 வெள்ளி அன்று பொங்கல் பானை வைத்து பொங்கல் பொங்கவும், சூரியனுக்கு படையல் பூஜை செய்திடவும் உகந்த நல்ல நேரம் காலை 9 மணி முதல் 10.30 மணி வரை பொங்கல் வைத்து வழிபடலாம். 
       சூரிய பகவானுக்கு உகந்த நண்பகல் 12.00 – 01.00 PM சூரிய ஓரையில் பூஜை செய்தால், தன-தான்யம் பெருகும். காலை 9.30 மணிமுதல் 10.30 மணிவரை சுக்கிர ஓரையில் பொங்கல் வைத்தால் தனம், தானியம் பெருகும். அதேபோல, மதியம் 01.00 – 02.00 மணி அளவில் சுக்கிர ஓரையும், மதியம் 02.00 – 03.00 மணிவரை புதன் ஓரையும் சிறந்ததே. சந்திர ஓரையில் பொங்கல், வடை, பாயசம், 21 வகையான காய்கறிகளை கொண்டு சமைத்து, சூரியபகவானுக்கு படைத்து வணங்க வேண்டும்.
அப்போது 21 வகையான சமைக்காத பச்சை காய்கறிகளையும் வைத்து, அத்துடன் மஞ்சள் கொத்து, இஞ்சிகொத்து, கரும்பும் வைத்து, சூரியபகவானுக்கு கற்பூர ஆரத்தி காட்டி வணங்க வேண்டும். இதனால் சூரியபகவானின் ஆசி பரிபூரணமாக கிட்டும்.
பொங்கல் பண்டிகையின் வரலாறு!
பொங்கல் என்பது தென்னிந்திய மக்களின் பழமை வாய்ந்த பண்டிகையாகும்; குறிப்பாக தமிழர்களின் பண்டிகையாகும். இந்த பண்டிகையின் வரலாற்றைப் பார்க்க வேண்டுமானால் நாம் சங்க காலமான கி.மு. 200 - கி.மு. 300 நோக்கி செல்ல வேண்டும். பொங்கல் என்பது சமஸ்கிருத புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதை போல் திராவிட அறுவடை பண்டிகையாக அறியப்பட்டாலும் கூட, வரலாற்று அறிஞர்கள் இந்த பண்டிகையை சங்க காலத்தின் போது கொண்டாடப்பட்ட தை நீராடல் என நம்புகின்றனர். சங்க காலத்தின் போது நடந்த கொண்டாட்டங்கள் தான் இன்றைய பொங்கல் கொண்டாட்டமாக மாறியுள்ளது. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தை நீராடலின் போது சங்க கால பெண்கள் 'பாவை நோன்பு' என்ற விரதத்தை கடைப்பிடித்து வந்தனர்.
பல்லவர்களின் ஆட்சி காலத்தில் (கி.பி. 400-கி.பி.800) இது மிகவும் முக்கியமான பண்டிகையாக விளங்கியது. தமிழ் மாதமான மார்கழியின் போது இது கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையின் போது நாட்டில் மழையும் வளமும் செழிக்க வேண்டி இளம் பெண்கள் வேண்டுவார்கள். இந்த மாதம் முழுவதும் பால் மற்றும் பால் பொருட்களை தவிர்ப்பார்கள். தங்கள் முடிக்கு எண்ணெயிட்டு கொள்ள மாட்டார்கள். மேலும் பேசும் போது கடுமையான சொல்லை பயன்படுத்த மாட்டார்கள். பெண்கள் அனைவரும் விடியற்காலையில் குளித்து விடுவார்கள். ஈர மண்ணில் செய்யப்பட்ட கட்யாயணி என்ற பெண் தெய்வத்தின் சிலையை அவர்கள் வணங்கி வந்தார்கள். தை மாதத்தின் முதல் நாள் தங்கள் நோன்பை முடித்துக் கொள்வார்கள்.

நெற்பயிர்கள் செழிப்பதற்காக அளவுக்கு அதிகமான மழையை கொண்டு வருவதற்காகவே இந்த நோன்பு. பழமை வாய்ந்த இந்த மரபுகளும், சடங்குகளும் தான் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டது. தை நீராடல் பண்டிகை பற்றியும், பாவை நோன்பின் போது கடைப்பிடிக்கப்படும் சடங்குகள் பற்றியும், ஆண்டாளின் திருப்பாவை மற்றும் மாணிக்கவாசகரின் திருவெம்பாவை ஆகியவற்றில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. குலோத்துங்கா என்ற சோழ அரசன் கோவில்களுக்கு நிலையத்தை பரிசாக அளிப்பார். குறிப்பாக பொங்கல் பண்டிகையின் போது என திருவள்ளூர் வீரராகவா கோவிலில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொங்கல் விதிமுறைகள்
பொங்கலிடுவதிலும் சில விதிமுறைகள், வரைமுறைகள் இருக்கின்றன. பொங்கல் பண்டிகையின் போது பெண்கள் சூரியன் உதிப்பதற்கு 5 நாழிகைக்கு முன்பு எழுந்து நீராடிவிட்டு, வீட்டு முற்றத்தில் நீர் தெளித்து கோலமிட வேண்டும். வீட்டின் முற்றத்தில் ஒரு பகுதியை பசு சாணத்தால் மெழுகி, வெள்ளையடித்து, காவி பூச வேண்டும். அரக்கு நிறம் துர்க்கா தேவிக்குரியது. துன்பங்கள் விலகி மங்கல வாழ்வும், இன்பமும் நிலைக்க காவி பூசப்படுகிறது. அந்த பகுதியை மாவிலை, வாழை, கரும்பு மற்றும் மலர்களால் அலங்கரித்து, பிள்ளையாரை பிடித்து வைக்க வேண்டும். பின்னர் குத்து விளக்கேற்றி, பூரண கும்பம் வைத்து வெற்றிலை, பாக்கு, தேங்காய் முதலிய மங்கல பொருட்களையும் படைக்க வேண்டும்.
விநாயகர் பூஜை 
விநாயகரை முதலில் மனதில் நினைத்து, இஷ்டதெய்வங்களை பிரார்த்தனை செய்ய வேண்டும். ஒரு புதுப்பானையை எடுத்து அதன் வாய்ப்புறத்தில் மஞ்சள் இலை, மாவிலை கட்ட வேண்டும். பானையின் மேல்புறத்தில் திருநீறை குழைத்து, 3 இடங்களில் பூசி, சந்தனம், குங்குமத்தால் திலகமிடவேண்டும்.


பொங்கலோ பொங்கல்
பானைக்குள் பசும்பாலும், நீரும் விட்டு நிரப்பி தூபதீபம் காட்டி, கற்பூரதீபத்தினால் அடுப்பில் நெருப்பை உண்டாக்கி பற்ற வைக்க வேண்டும். பின்னர் கணவரும், மனைவியும் சூரியனை வணங்கி, இஷ்டதெய்வங்களை பிரார்த்தனை செய்து பானையை பக்குவமாக, தம் கைகளால் பற்றி பிடித்து தூக்கி அடுப்பில் வைக்க வேண்டும். பானையில் பால் பொங்கி வரும் போது பொங்கலோ, பொங்கல் என்று உரத்தக் குரல் எழுப்பிக்கொண்டே பச்சரிசியை இருகைகளாலும் அள்ளி சூரியபகவானை வணங்கியபடி பானையின் வாய்விளம்பினை 3 முறை சுற்றி பானையில் இடவேண்டும்.


சூரியனுக்கு படையல் 
பொங்கிய பொங்கலை 3 தலைவாழை இலையில் இட்டு படைத்து பழங்கள், கரும்பு, முதலியவற்றை கொண்டு அர்ச்சித்து, தூபதீபம் காட்டி சூரியபகவானை வணங்கி வழிபாடு செய்ய வேண்டும். தீபாராதனை காட்டும் போது குலதெய்வத்தையும், மூதாதையர்களையும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
அனைவருக்கும் பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
Posted: 14 Jan 2016 06:22 PM PST
  ராமநாதபுரம்;பல நாடுகளில் பங்கு சந்தையில் முதலீடு செய்யப்பட்ட, அரசு ஊழியர் ஓய்வூதிய நிதியில் சரிவு ஏற்பட்டுஉள்ளது. இதனால் தமிழகத்தில் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

            மத்திய, மாநில அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் 2003 ஏப்., 1க்கு பின் பணியில் சேர்ந்த 4.20 லட்சம் ஊழியர்கள், புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். இதற்காக சம்பளத்தில் குறிப்பிட்டத் தொகை வசூலிக்கப்படுகிறது. இத்தொகையை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் மத்திய, மாநில அரசுகள் செலுத்துகின்றன. இதுவரை ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை ஆணையத்தில் செலுத்தப்பட்டு உள்ளது.

              தற்போது இந்தியா வின் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம், புதிய ஓய்வூதிய திட்டத்தில் வசூலித்த நிதியில் ரூ.15 ஆயிரம் கோடியை, பங்குச்சந்தையில் முதலீடு செய்கிறது. ஏற்கனவே பல நாடுகளில், 10 ஆண்டுகளுக்கு முன் பங்குச்சந்தையில் ஓய்வூதிய தொகை முதலீடு செய்யப்பட்டு உள்ளது. 

பங்குச்சந்தை வீழ்ச்சியால் இத்தொகையில் சரிவு ஏற்பட்டுள்ளது. எஸ்தோனியா நாட்டில் ஓய்வூதிய நிதி 1.7 சதவீதம் மைனசில் சென்று உள்ளது. செக் குடியரசு, ஜப்பானில் தலா 0.3 சதவீதம், அமெரிக்காவில் 0.5 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. அதேபோல் 20 நாடுகளில் 1 முதல் 5 சதவீதம் மட்டுமே உயர்ந்து உள்ளது.

புதிய ஓய்வூதிய திட்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ஏங்கல்ஸ் கூறியதாவது: இந்தியாவில் முதற்கட்டமாக 15 சதவீத ஓய்வூதிய நிதி, பங்குசந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. தொடர்ந்து அந்த சதவீதம் அதிகரிக்கப்படும். பல நாடுகளில் பங்குச்சந்தையில் முதலீடு செய்த ஓய்வூதிய நிதி சரிவையே கண்டு உள்ளது. நம் நாட்டில் ஓய்வூதிய நிதியை பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் முதலுக்கே மோசம் ஏற்படும், என்றார்.
Posted: 14 Jan 2016 06:20 PM PST
ஓய்வூதியம், ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை தொடர்பான விவரங்களை இணையதளத்தில் (http:218.248.44.30ecsstatus)இருந்து பதிவிறக்கலாம் செய்து கொள்ளலாம்.
இது குறித்து  கருவூலத் துறை அதிகாரிகள் வெளியிட்ட தகவல்:
 அனைத்து ஓய்வூதியர்களது ஓய்வூதியம், ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை தொடர்பான விவரங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையதளத்தில் தங்களது பிபிஓ எண், கருவூல விவரங்களை குறிப்பிட்டு பதிவிறக்கம் செய்யலாம். 


பதிவிறக்கம் செய்ய இயலாத ஓய்வூதியர்கள் சம்பந்தப்பட்ட கருவூலகங்களில் பிற்பகல் 3மணி முதல் 5 மணி வர நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம். கருவூல அலகில் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கணவன், மனைவி ஆகிய இருவருக்கும் மருத்துவக் காப்பீடுத் தொகை பிடித்தம் செய்யப்பட்டிருக்கலாம். அவ்வாறு இருந்தால் ஒரு சந்தாவை நிறுத்தம் செய்தும், செலுத்திய சந்தா தொகையை திரும்ப வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
ரூ.2.5 லட்சம் அதற்கு மேலாக ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியர்கள், தங்களது வருமான வரி கணக்குத் தாளை மாவட்ட கருவூலம், சார்நிலைக் கருவூலகங்களில் ஜனவரி மாத இறுதிக்குள் இரட்டைப் பிரதிகளில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது
Posted: 14 Jan 2016 06:19 PM PST
அரசு பணிகளில், எழுத்தர்களுக்கு பதில், நவீன தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தத் தெரிந்த, நிர்வாக உதவியாளர்களை பணியில் சேர்க்க,மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசு பணிகளில், எல்.டி.சி., எனப்படும், கீழ்நிலை எழுத்தர், யூ.டி.சி., எனப்படும், உயர்நிலை எழுத்தர் பணிகள் உள்ளன. மத்திய அரசின் செயலக பணிகளின் முதுகெலும்பாக இப்பணியாளர்கள் திகழ்கின்றனர். இவர்களுக்கு பதில், கம்ப்யூட்டர் உள்ளிட்ட நவீன சாதனங்களை பயன்படுத்தத் தெரிந்த இளைஞர்களை, நிர்வாக உதவியாளர் பணியில் சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

          அடுத்த, 25 ஆண்டுகளில், இத்திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும். டில்லியில் உள்ள, மத்திய தலைமைச் செயலகத்தில், 21 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். அரசின் புதிய திட்டத்தால், ஊழியர் எண்ணிக்கை, 8,200 ஆக குறையும்.
          நிர்வாக உதவியாளர்கள், பணியாளர் தேர்வாணையத்தால் நியமிக்கப்படுவர்; ஆறு ஆண்டு பணிக்கு பின், நிர்வாக அதிகாரிகளாக பதவி உயர்வு பெறுவர். இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்தால், மத்திய அரசு பணியாளர்கள், அனைத்து வித தொழில் திறன்களையும் கொண்டவர்களாக விளங்குவர்.
Posted: 14 Jan 2016 06:18 PM PST
  கோவை மாவட்டத்தில் உள்ள மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி' சுட்டிகள் சுனில்குமார் & கோகுல் ஆகியோர் மீண்டும் 'விஜய் தொலைக்காட்சி'யில் வரும் ஞாயிறு(17-01-16) மாலை 7:00 மணிக்கு "ஒரு வார்த்தை ஒரு லட்சம்"... நிகழ்ச்சியின் காலிறுதிச் சுற்றில் விளையாட உள்ளார்கள்...


நிகழ்ச்சியை காணுங்கள்...மாணவர்களை வாழ்த்துங்கள்...
ஜெ.திருமுருகன்
கணித பட்டதாரிஆசிரியர்,
மூலத்துறை
Posted: 14 Jan 2016 06:17 PM PST
போலி சான்றிதழ் புகார்களால், 1.5 லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை சரிபார்க்க, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்ட போலீசாருக்கு வந்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டைச் சேர்ந்த முனியப்பன், 37, வேலுார் மாவட்டத்திலுள்ள எர்ரம்பட்டி கிராம அரசு தொடக்கப்பள்ளியில், போலி சான்றிதழ் மூலம் ஆசிரியராக சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

அவரையும், போலி சான்றிதழ் சப்ளை செய்த கிருஷ்ணகிரி, திருவள்ளூர் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இதேபோல், வேலுார்மாவட்டம், கந்திலி ஒன்றியம் செவ்வாத்துார் புதுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் செந்தில்குமார், கிருபா என்ற பெயரில் போலி சான்றிதழ் கொடுத்து, ஆசிரியராக சேர்ந்துள்ளார். அவரையும் போலீசார் கைது செய்தனர். பின், இருவரும் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இவர்களை தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டம், புதுப்பேட்டையை சேர்ந்த அருள் சுந்தரம் என்பவர், வேலுார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில், ஆசிரியராக பணியாற்றினார். கடந்த 2ம் தேதி முதல்,ஆசிரியர் அருள் சுந்தரம் பணிக்கு வராததால், அவர் மீது சந்தேகம் அடைந்து அவரது சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. இதில் அவர் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, தொடக்க கல்வித்துறை விசாரணை நடத்தியதில், போலி சான்றிதழ் கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து, அதிகாரிகள் விசாரணையில் கிடைத்த தகவல்கள்: 2001ம் ஆண்டு முதல் 2004 வரை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆசிரியர் பயிற்சி முடித்து, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோருக்கு உடனடியாக ஆசிரியர் வேலை கிடைத்தது. இதனால், தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள், தர்மபுரி, கிருஷ்ணகிரியில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில், போலி இருப்பிட சான்றிதழ்கொடுத்து, போலி படிப்பு சான்றிதழ் கொடுத்து, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஆசிரியராகியுள்ளனர்.

அரசுப் பணி மற்றும் போலீஸ் பணியில் சேருவோருக்கு அவர்கள் மீது வழக்கு உள்ளதா? சான்றிதழ்கள் சரியா என விசாரித்து, அறிக்கை பெற்ற பின்பே, பணி வாய்ப்பு தரப்படும். ஆனால், ஆசிரியர் பணிக்கு பயிற்சி காலம் முடிந்த பின்பே, சான்றிதழ் பற்றி விசாரணை நடத்தப்படும். அதனால், பல இடங்களில் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் உதவியுடன் போலி சான்றிதழ்கள் விவகாரம் மறைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில், தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும், 1.5 லட்சம் ஆசிரியர்களின் சான்றிதழ்களின் உண்மை தன்மையை சோதிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாவட்ட அதிகாரிகளின் இந்த ஆய்வில், பல ஆசிரியர்கள் சிக்குவர்.
Posted: 14 Jan 2016 06:15 PM PST
ஏழாவது ஊதியக் கமிஷன் பரிந்துரையை செயல்படுத்த உயர்நிலைக் குழுவைஅமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் 47 லட்சம் பேர், ஓய்வூதியதாரர்கள் 52 லட்சம்பேரின் ஊதியத்தைமாற்றியமைப்பதற்காக அமைக்கப்பட்ட 7வது ஊதியக் கமிஷன் தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் தாக்கல் செய்தது.


இதன்படி, புதிய சம்பளம் இம்மாதம் 1ம் தேதி அமல்படுத்தப்பட வேண்டும். இதனால் இந்த நிதியாண்டில் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.1.02 லட்சம் கோடி செலவாகும். இதன் மூலம் ஏற்படும் நிதிப்பற்றாக்குறையை அரசு சமாளிக்கும் என நிதியமைச்சர் ஜெட்லி ஏற்கனவே கூறிவிட்டார். இந்நிலையில் 7வது ஊதிய கமிஷன் பரிந்துரை செயல்படுத்துவதற்கு, உயர்நிலைக் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
Posted: 14 Jan 2016 06:15 PM PST
போலி சான்றிதழ் புகார்களால், 1.5 லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை சரிபார்க்க, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்ட போலீசாருக்கு வந்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டைச் சேர்ந்த முனியப்பன், 37, வேலூர் மாவட்டத்திலுள்ள எர்ரம்பட்டி கிராம அரசு தொடக்கப்பள்ளியில், போலி சான்றிதழ் மூலம் ஆசிரியராக சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரையும், போலி சான்றிதழ் சப்ளை செய்த கிருஷ்ணகிரி, திருவள்ளூர் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், வேலூர் மாவட்டம், கந்திலி ஒன்றியம் செவ்வாத்தூர் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் செந்தில்குமார், கிருபா என்ற பெயரில் போலி சான்றிதழ் கொடுத்து, ஆசிரியராக சேர்ந்துள்ளார். அவரையும் போலீசார் கைது செய்தனர். பின், இருவரும் ’சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர்.

இவர்களை தொடர்ந்து, வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில், ஆசிரியராக பணியாற்றிய கிருஷ்ணகிரி மாவட்டம், புதுப்பேட்டையை சேர்ந்த அருள் சுந்தரம் என்பவர் கடந்த 2ம் தேதி முதல், பணிக்கு வரவில்லை. அதனால், அவர் மீது சந்தேகம் அடைந்து அவரது சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. இதில் அவர் போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்தது தெரியவந்துள்ளது.

தொடக்க கல்வித்துறை விசாரணை நடத்தியதில், போலி சான்றிதழ் கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து, அதிகாரிகள் விசாரணையில் கிடைத்த தகவல்கள்: 2001ம் ஆண்டு முதல் 2004 வரை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆசிரியர் பயிற்சி முடித்து, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோருக்கு உடனடியாக ஆசிரியர் வேலை கிடைத்தது. இதனால், தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள், தர்மபுரி, கிருஷ்ணகிரியில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில், போலி இருப்பிட சான்றிதழ் கொடுத்து, போலி படிப்பு சான்றிதழ் கொடுத்து, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஆசிரியராகியுள்ளனர்.

அரசுப் பணி மற்றும் போலீஸ் பணியில் சேருவோருக்கு அவர்கள் மீது வழக்கு உள்ளதா? சான்றிதழ்கள் சரியா என விசாரித்து, அறிக்கை பெற்ற பின்பே, பணி வாய்ப்பு தரப்படும். ஆனால், ஆசிரியர் பணிக்கு பயிற்சி காலம் முடிந்த பின்பே, சான்றிதழ் பற்றி விசாரணை நடத்தப்படும். அதனால், பல இடங்களில் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் உதவியுடன் போலி சான்றிதழ்கள் விவகாரம் மறைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும், 1.5 லட்சம் ஆசிரியர்களின் சான்றிதழ்களின் உண்மை தன்மையை சோதிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாவட்ட அதிகாரிகளின் இந்த ஆய்வில், பல ஆசிரியர்கள் சிக்குவர்.
Posted: 14 Jan 2016 06:14 PM PST
முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கடந்த வடகிழக்குப் பருவமழையின் போது ஒரு சில நாட்களில் பெய்த கன மழை காரணமாக பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இந்த வெள்ள பாதிப்பு மிக அதிகமானது என்பதால், மத்திய அரசு இதனை மிகக் கடுமையான பேரிடர் என அறிவித்துள்ளது. 
மழை வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட மக்களில் பெரும் பாலானோருக்கு நிவாரண உதவித் தொகை வழங்கப் பட்டுவிட்டது. எஞ்சியவர் களுக்கு மிக விரைவில் வெள்ள நிவாரண உதவித் தொகை வழங்கப்படும்.


இந்த பெரு மழை வெள் ளத்தால் சிறு, குறு தொழில் முனைவோர் பாதிக்கப் பட்டுள்ளனர். தமிழ்நாட்டை வெள்ளம் பாதித்த மாநில மாக அறிவித்து ஏற்கெனவே தமிழக அரசால் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இவர்கள் தங்களுடைய தொழிலை மீண்டும் தொடங்கும் வகையில், வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் ஏற்கெனவே வழங்கிய கடன்களுக்கு கடன் தவணையை ஒத்தி வைத்தல், மறு கடன் உதவி போன்ற பல சலுகைகளை வழங்கி வருகின்றன. வங்கிகளுடன் கலந் தாய்வு கூட்டங்கள் நடத்தி இந்தப் பணியை விரைந்து முடிப்பதற்கான நடவடிக் கைகளை எடுக்கும்படி நான் தலைமை செயலாளருக்கு ஏற்கெனவே உத்தரவிட்டுள் ளேன்.

வேலையற்ற பட்ட தாரிகளின் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சிறு தொழில்களுக்கு 25 சதவீத மூலதன மானியத்துடன் ஐந்து லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி ஆண்டுக்கு 5,000 இளைஞர் களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது.

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் உள்ள தகுதியான இளைஞர்கள் அனைவருக்கும் இத்திட்டத் தின்படி 25 சதவீத மூலதன மானியத்துடன் ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான கடன் வழங்கிட நான் உத்தர விட்டுள்ளேன். இத்திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட பயிற்சி பெறப்பட வேண்டும் என்ற நிபந்தனையிலிருந்தும் விலக்கு அளித்து உடனடியாக கடன் வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment