Posted: 24 Jan 2016 07:33 AM PST
திண்டுக்கல் மாவட்டம் தென்னம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியையாக CPS இல் பணியாற்றி ஓய்வு பெற்று 3 ஆண்டுகளாகியும் எவ்விதமான ஓய்வூதியமும் வழங்கப்படவில்லை.
எனவே., ஓய்வூதியம் வழங்கும்படி கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் 22.01.2016 ல் ஓய்வூதிய தொகையினை வழங்க நீதிபதி ஹரிபரந்தாமன் உத்தரவு.
திண்டுக்கல் எங்கெல்ஸ்

|
Posted: 24 Jan 2016 07:32 AM PST
சென்னை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் திரு.ஜோஸ்வா ஜான்சன் அவர்களை மரியாதை நிமித்தமாக, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் தலைமை நிலைய செயலாளர் திரு.க.சாந்தகுமார், சென்னை மாவட்ட செயலாளர் மற்றும் பொறுப்பாளர்கள் சந்திந்து புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் 2016ம் ஆண்டுக்கான நாட்காட்டி, டைரி ஆகியவை வழங்கினர்.

|
Posted: 24 Jan 2016 07:28 AM PST
பெங்களூரூ: கர்நாடக மாநிலத்தில் ஆண்டுதோறும் நடக்கும் பொது நுழைவுத்தேர்வு, மருத்துவம், இன்ஜினியரிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த திட்டமிட்டுள்ளது .
இது குறித்து கர்நாடக மாநில தேர்வு துறை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வரும் 2017 -18 நடப்புஆண்டுக்கான பொ நுழைவுத்தேர்வு ஆன்லைனில் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில் ஏற்படும் தொழில்நுட்ப விஷயங்களில் எவ்வித குளறுபடியும் இல்லாமல் வெற்றிகரமாக முடிக்க முனைந்துள்ளோம் .அதேர நேரத்தில் வரும் 2017 - 18 ல் வழக்கமான முறையில் தேர்வும் ஆன்லைனில் தேர்வு எழுத தயாரானவர்களுக்கும் இரண்டு முறையில் தேர்வு நடத்தப்படும்.
2018- 19 ல் முழு அளவில் ஆன்லைன் நுழைவுத்தேர்வு நடைமுறைக்கு வந்து விடும் .ஆன்லைன் தேர்தவில் கிராமப்புற மாணவ, மாணவிகளும் பங்கேற்கும் வகையில் எளிய முறைகள் பின்பற்றப்படும் .இவ்வாறு அவர் தெரிவித்தார் .
ஆன்லைன் தேர்வு நடப்பதால் தேர்வுத்தாளை மாற்றுவது, திருத்துவது, உள்ளிட்ட முறைகேடுகள் குறைக்க வாய்ப்பு ஏற்படும் .

|
Posted: 23 Jan 2016 05:48 PM PST
இ.பி.எப்.ஓ., எனப்படும், வருங்கால வைப்பு நிதி அமைப்பு, நடப்பு, 2015 - 16ம் நிதியாண்டில், பி.எப்., முதலீடுகளுக்கு, 9 சதவீத வட்டி வழங்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இ.பி.எப்.ஓ., அறக்கட்டளை நிர்வாகியும், பாரதிய தொழிலாளர் சங்க செயலருமான பானுசுரே, டில்லியில், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: இ.பி.எப்.ஓ.,வின் நிதித் தணிக்கை மற்றும் முதலீட்டுக்குழு கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில், நடப்பு நிதியாண்டில்,
பி.எப்., முதலீடுகளுக்கு, 8.95 சதவீதம் வட்டி வழங்கலாம் என, பரிந்துரைத்தது. இம்மாத முடிவில், தணிக்கைக் குழு, மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளது. அப்போது, சமீபத்திய நிலவரப்படி, வருவாய் மதிப்பீடு செய்யப்படும்.
அப்போது, பி.எப்., மீதான வட்டி, 9 சதவீதமாக அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது. குழு பரிந்துரைக்கும் வட்டி வீதம், பி.எப்.ஓ.,வின் மத்திய அறக்கட்டளை நிர்வாகிகள் குழுவால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அதன்பின், நிதியமைச்சகம் அறிவிப்பு வெளியிடும். இவ்வாறு அவர் கூறினார்.

|
Posted: 23 Jan 2016 05:50 PM PST
|
Posted: 23 Jan 2016 05:43 PM PST
தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு 28.01.16 அன்று தஞ்சாவூர் மாவட்டத்தின் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

|
Posted: 23 Jan 2016 05:41 PM PST
பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகள் விவரத்தை சேகரித்து அனுப்புமாறு, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நடப்பு, 2015- - 16ம் கல்வியாண்டில் அரசு பள்ளி கள், அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சி பள்ளிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியர் விவரத்தை சேகரித்து அனுப்ப, தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரி கூறுகையில், 'பிப்., அல்லது மார்ச் மாதத்தில், சட்டசபை பட்ஜெட் கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளதால், சத்துணவு திட்டத்தில் மானியம் மற்றும் சத்துணவு சமையல் பொருட்களுக்கான நிதி ஒதுக்கீடு, ஊழியர் எண்ணிக்கை அடிப்படையில் இவ்விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. 'மாவட்டம் தோறும் பள்ளிகள் வாரியாக,
சத்துணவு சாப்பிடும் குழந்தைகளின் எண்ணிக்கை விவரம் சேகரித்து அனுப்பும் பணி நடந்து வருகிறது' என்றார்.

|
Posted: 23 Jan 2016 05:40 PM PST
செல்லிடப்பேசி குறுஞ்செய்தி மூலமாக வாக்காளர் எண்ணைப் பதிவு செய்தால், வாக்குச் சாவடி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அவ்வப்போது அனுப்பப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார். இதுகுறித்து, சனிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:-
இந்தியத் தேர்தல் ஆணையம் தனது நிறுவன நாளான ஜனவரி 25-ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கொண்டாட உள்ளது. இந்த ஆண்டின் மையநோக்கு, "ஆர்வமான பங்களிப்புடன் தேர்தல் நடைமுறைகளில் பங்கேற்றல்' என்பதாகும்.
எங்கெங்கு விழாக்கள்? மாநில அளவிலான விழா ஆளுநர் மாளிகையில் திங்கள்கிழமை காலை 11.00 மணியளவில் நடைபெறும். இதில், ஆளுநர் கே.ரோசய்யா பங்கேற்று, வாக்காளர் தின உறுதிமொழியை ஏற்கவைத்து, சிறப்புரையாற்றுவார். மேலும், புதிதாகப் பதிவு செய்தவர்களுக்கு புகைப்பட அடையாள அட்டையையும் அவர் வழங்குவார்.
மாநில தேர்தல் ஆணையர் பி. சீத்தாராமன், தலைமைச் செயலாளர் கு. ஞானதேசிகன் உள்ளிட்டோர் கலந்து கொள்வர். இதேபோல், மாவட்ட அளவிலும், 65,616 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள 29,291 வாக்குச் சாவடி அமைவிடங்களிலும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விழாக்களில் ஸஉறுதிமொழியினை வாக்காளர்களை ஏற்கச் செய்வதோடு, அடையாள அட்டையை வழங்குவதும், புதிய வாக்காளர்களாகப் பதிவு செய்வதும் வேண்டும். அப்போது, வாக்களிப்பது எப்படி குறித்த கையேடும் வழங்கப்படவுள்ளன.
மேலும், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் வாக்காளர் உறுதிமொழி ஏற்கப்படும்.
இதேபோல், குடியரசுதினத்தன்று நடைபெறவிருக்கும் கிராம சபைக்கூட்டங்களில் வாக்காளர் உறுதிமொழி ஏற்கப்படும். சென்னையில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாப் பேரணியில் ஆர்வமான பங்களிப்புடன் தேர்தல் நடைமுறைகளில் பங்கேற்றல் என்னும் மையநோக்கின் அடிப்படை குறித்த அலங்கார ஊர்தியும் இடம்பெறும்.
செல்லிடப்பேசி குறுஞ்செய்தி: அனைத்து வாக்காளர்களும் தங்களின் செல்லிடப்பேசி எண்ணிலிருந்து 1950 என்ற எண்ணிற்கு வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் குறுஞ்செய்தி அனுப்பலாம். இதன் மூலம், வாக்குச்சாவடி விபரம், வாக்காளர் விபரம் குறித்த தகவல்கள் வாக்காளரின் செல்லிடப்பேசி எண்ணுக்கு அவ்வப்போது அனுப்பப்படும் என்று ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

|
Posted: 23 Jan 2016 05:38 PM PST
தேசிய அளவில், ஐ.ஐ.டி., போன்ற கல்வி நிறுவனங்களில் சேர, அடுத்த ஆண்டு முதல், புதிதாக தேசிய திறன் தகுதி தேர்வு அமலாக உள்ளது.தமிழகத்தில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அண்ணா பல்கலைக்குட்பட்ட இன்ஜி., கல்லுாரிகள் மற்றும் சில நிகர்நிலை பல்கலைகளில் சேர, நுழைவுத்தேர்வு எழுத வேண்டியதில்லை. ஆனால், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான. ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., - ஐ.எம்.எஸ்., - ஐ.ஐ.ஐ.டி.,- என்.ஐ.டி., போன்றவற்றில் சேர, ஜே.இ.இ., எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவு தேர்வு எழுத வேண்டும்.
இதில், என்.ஐ.டி.,- ஐ.ஐ.ஐ.டி., போன்றவற்றில் சேர, முதற்கட்ட ஜே.இ.இ., முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றாலே போதும். ஆனால், மற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, இரண்டாம் கட்ட ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த முறையை. 2017 - 18ம் கல்வி ஆண்டு முதல் மாற்ற, மத்திய மனிதவள அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, உயர்கல்வி நிறுவனங்களில் சேர, அனைத்து மாணவர்களும் முதற்கட்ட ஜே.இ.இ., மெயின் தேர்வுக்கு பதில், என்.ஏ.டி., எனப்படும் தேசிய திறன் தேர்வை எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்ற பின், இரண்டாம் கட்ட தேர்விலும் தேர்ச்சி பெற்ற பிறகே மாணவர் சேர்க்கை நடத்தப்படும். முதற்கட்ட தேர்வில் வெற்றி பெற்றால், மாநில உயர்கல்வி நிறுவனங்களில் மட்டும் சேர்ந்து கொள்ளலாம்.
இந்த முடிவு குறித்த அறிக்கை, மத்திய மனிதவள அமைச்சகத்தின் மூலம், பார்லிமென்ட் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும், 2017 - 18ல் அமலுக்கு வரும் என, தகவல்கள் வெளியாகியுள்ளன

|
Posted: 23 Jan 2016 05:37 PM PST
'அரசு பள்ளி ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல, இயக்குனரின் அனுமதியை பெற வேண்டும்' என, தொடக்கக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் பாஸ்போர்ட் பெறவும், புதுப்பிக்கவும் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு விண்ணப்பங்களை அனுப்பும் முன், தகவல் படிவத்தை நிரப்பி, உயர் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இப்படிவத்தை ஆய்வு செய்யும் அலுவலர்கள், அதில், ஆட்சேபனைக்குரிய ஆசிரியர்களின் விண்ணப்பம் இருப்பின், அதை எடுத்துக்கொள்ள வேண்டாம் என, மண்டல பாஸ்போர்ட் அலுவலருக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்.மேலும் தொடக்கக் கல்வித்துறையில் உள்ள ஆசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள் உள்ளிட்டோர் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி கோரும் பட்சத்தில், அவை இயக்குனருக்கு அனுப்பி, அனுமதி பெற்ற பின்பே, விடுமுறைக்கு அனுமதிக்க வேண்டும். போலிச்சான்றிதழ் கொடுத்து பல ஆசிரியர்களும் தலைமறைவாகி வரும் சூழலில், வெளிநாடு செல்ல இயக்குனரின் அனுமதி அவசியம் வேண்டும் என, அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை ஆசிரியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-

|
Posted: 23 Jan 2016 05:37 PM PST
பகுதிநேர பணியிடத்தை குறைக்கும் நடவடிக்கையில், கல்வித்துறை இறங்கியுள்ளதால், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஓவியம், இசை, தையல், தொழிற்கல்வி, கம்ப்யூட்டர் பயிற்சி கற்றுத்தர, 16 ஆயிரத்து, 549 பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள், 2012ல் நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், 100 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளில் இருந்து, பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களை திரும்ப பெறும் பணியை கல்வித்துறை துவக்கியுள்ளது.
தமிழ்நாடு கலை ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர் ராஜ்குமார் கூறுகையில், ''கிராமப்புற தொடக்கப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறையும் நிலையில், 100 மாணவர்களுக்கு குறைவாக உள்ள அரசு பள்ளியில் இருந்து, ஆசிரியரை திரும்பப் பெற துவங்கியுள்ளனர். இதனால், பகுதி நேர ஆசிரியர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது,'' என்றார்.
|
No comments:
Post a Comment