- தகவல் சேகரிப்பு ஜன., 18ல் துவக்கம்
- 7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த கூடாது : தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் போர்க் கொடி
- கிறிஸ்துமஸ் கொண்டாடும் உங்களுக்கும் , உங்கள் குடும்பத்தார்க்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
- 10ம் வகுப்பு, பிளஸ் 2 செய்முறை தேர்வு
- மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணி: 80 பேருக்கு பதவி உயர்வு
- வங்கி தேர்வு மையங்கள் அமைப்பதில் தென் மாவட்டங்கள் புறக்கணிப்பு: மன உளைச்சலில் தேர்வர்கள்
- அரசு உதவி பெறும் பள்ளிகளில் 23.08.2010 க்கு பிறகு நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு வளரூதியம் விடுப்பு -இருக்கா ?RTI -NEWS
- மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளருக்கு ஊர்திப்படி அனுமதிக்கும் அதிகாரம் மாவட்ட அளவிலான சார்பு அலுவலருக்கு ஒப்படைத்தல் சார்பான அரசாணை 316-நாள் : 22. 12. 2015
- SLAS - Periodic Test Study Materials, Questions & Answers (Thanks to www.Padasalai.net)
Posted: 25 Dec 2015 12:22 AM PST
சென்னை:தேசிய மக்கள் தொகை பதிவேட்டில், 'ஆதார்' எண்ணை இணைக்க, வீடு வீடாக தகவல் சேகரிக்கும் பணி, தமிழகத்தில் ஜன., 18 முதல் பிப்., 5 வரை நடைபெற உள்ளது.
தேசிய அடையாள அட்டை விதியின் படி, தேசிய மக்கள் தொகை பதிவேட்டில், அனைவரின் ஆதார் எண்கள் இணைக்கப்படுகின்றன. இதற்காக நாடு முழுவதும், வீடு வீடாக தகவல் சேகரிக்கும் பணி நடைபெற உள்ளது.இப்பணியை, ஜன.,18 முதல், பிப்., 5 வரை,வீடு வீடாக மேற்கொள்ள, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
|
Posted: 25 Dec 2015 12:19 AM PST
டெல்லி: ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்தக் கூடாது என்ற தமிழக அரசின் கோரிக்கையால், ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான ஏழாவது ஊதியக் குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் ஏற்கனவே தாக்கல் செய்துவிட்டது. இதனை ஏற்று ஊதியக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்காக சிறப்பு பிரிவு ஒன்றையும் மத்திய நிதி அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது.
ஏழாவது ஊதியக் குழு அறிக்கையின் படி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு சுமார் 25 சதவீதம் அளவிற்கு வருவாய் உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களை தொடர்ந்து பல மாநில அரசுகளும் அதன் அடிப்படையில் தங்களது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கும் நிலை உள்ளது.
வரும் 1-ம் தேதி முதல் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழகம், மேற்கு வங்கம், பஞ்சாப், உத்திரப்பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்கள் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்தாமல், தள்ளிவைக்குமாறு மத்திய அரசிடம் அறிவுறுத்தியுள்ளன. இது தொடர்பாக பிரதமர் அலுவலகம், கேபினட் செயலகம் உள்ளிட்டவைகளுக்கு மேற்கண்ட 5 மரிநலங்களும் கடிதம் அனுப்பியுள்ளன. மாநிலங்களின் நிதி நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் தங்களது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு உடனடியாக அளிக்க முடியாது என அந்த மாநிலங்கள் தெரிவித்துள்ளன. எனவே கூடுமானவரை ஏழாவது ஊதிய கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவதை தவிர்க்குமாறு இந்த மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இதனால் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அரசு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Source:தினகரன் online News
|
Posted: 24 Dec 2015 05:04 PM PST
|
Posted: 24 Dec 2015 04:43 PM PST
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களுக்கு, பிப்ரவரி இரண்டாம் வாரத்தில், செய்முறைத் தேர்வு நடத்த, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளை செய்யும்படி, பள்ளிகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில், 'வழக்கமாக, பிப்ரவரி முதல் வாரத்தில், செய்முறைத் தேர்வு நடத்தப்படும். இந்த ஆண்டு, மழை விடுமுறை மற்றும் அரையாண்டு தேர்வு தாமதத்தால், பிப்ரவரி, இரண்டாம் வாரத்தில் நடத்தப்பட உள்ளது' என்றனர்.
|
Posted: 24 Dec 2015 04:42 PM PST
அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக 80 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 80 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதையடுத்து காலிப்பணியிடங்களில் நியமிக்கப்பட உள்ள முதுநிலை ஆசிரியர்கள், மொழி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்களின் பட்டியலை, பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அந்த பட்டியலில் உள்ளோர் பதவி உயர்வில் விருப்பமில்லை என்றால், 3 ஆண்டுகளுக்கோ அல்லது நிரந்தரமாகவோ விருப்பம்
இல்லாததற்கான கடிதத்தை, பள்ளிக் கல்வி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும்.'மேல்நிலை தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வேண்டாம்' என தெரிவித்து, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற முதுநிலை ஆசிரியர்களை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பணியேற்க அனுமதிக்க கூடாது.
மேலும் தலைமைஆசிரியராக பொறுப்பேற்கும் முன், அவர்களின் கல்வித்தகுதி, வரையறுக்கப்பட்ட துறைத்தேர்வுகளின் தேர்ச்சி போன்ற விபரங்களை சரிபார்த்து கொள்ள வேண்டும் என, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
|
Posted: 24 Dec 2015 04:33 PM PST
தமிழகத்தில் வங்கி தேர்வு பணியாளர் மையம் (ஐ.பி.பி.எஸ்.,) நடத்தும் மெயின் தேர்வுக்கான மையங்கள் அனைத்தும் வட மாவட்டங்களில் அமைக்கப்பட்டதால் தென் மாவட்டங்களை சேர்ந்த தேர்வர்கள் மன உளைச்சலில் உள்ளனர்.தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இணைந்து ஐ.பி.பி.எஸ். (இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்சன்) என்ற கூட்டமைப்பை உருவாக்கி ஆண்டுதோறும் போட்டி தேர்வு நடத்தி, அனைத்து வங்கிகளுக்கும் தேவைப்படும் கிளர்க்குகளை தேர்வு செய்கின்றன.
ஏதேனும் ஒரு பாடத்தில் இந்தாண்டிலிருந்து முதல்நிலை, மெயின் மற்றும் நேர்காணல் என மூன்று கட்டங்களாக தேர்வு நடத்தப்படுகிறது.
இதன்படி ஜன., 2ம் வாரத்தில் முதல்நிலை தேர்வு நடந்தது. மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேல் பங்கேற்றனர். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஜன., 2 மற்றும் 3ம் தேதிகளில் நடக்கும் மெயின் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதில் 40 ஆயிரம் பேர் தென் மாவட்டத்தினர்.
மதுரை, நெல்லை, துாத்துக்குடி உட்பட தென் மாவட்டங்களில் தேர்வு எழுதுவதற்கு மையங்கள் ஒதுக்கப்படும். முதல்நிலை தேர்வுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் மையங்கள் அமைக்கப்பட்டன. ஜனவரியில் நடக்கும் மெயின் தேர்வுக்கு தென் மாவட்டங்களில் மையங்கள் அமைக்கப்படவில்லை.
கோவை, நாமக்கல், காஞ்சிபுரம், சென்னையில் மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தென் மாவட்ட தேர்வர்கள், பல நுாறு கிலோ மீட்டர் துாரம் சென்று மெயின் தேர்வை எழுத வேண்டியுள்ளது.
தேர்வர்கள் சிலர் கூறியதாவது: மெயின் தேர்வுக்கான மையங்கள் வட மாவட்டங்களில் உள்ளன. வெளி மாவட்டம் என்பதால் தேர்வர்கள் முதல் நாளே சென்று தங்க வேண்டிய நிலையுள்ளது. மெயின் தேர்வுக்கு மதுரை, நெல்லை மாவட்டங்களிலாவது மையங்கள் ஏற்படுத்த வேண்டும், என்றனர்.
|
Posted: 24 Dec 2015 04:28 PM PST
![]() |
Posted: 24 Dec 2015 05:00 PM PST
|
Posted: 24 Dec 2015 05:00 PM PST
6th Standard - SLAS Test Model Questions
For English Subject:
7th Standard - SLAS Test Model Questions
For English Subject:
8th Standard - SLAS Test Model Questions
For English Subject:
Previous Year Questions
3rd Standard SLAS Previous Year Questions (2014-15)
Previous Year Questions
5th Standard SLAS Previous Year Questions (2014-15)
Previous Year Questions
8th Standard SLAS Previous Year Questions (2014-15)
|
No comments:
Post a Comment