Posted: 08 Sep 2015 07:52 PM PDT
|
Posted: 08 Sep 2015 07:51 PM PDT
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ சார்பில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் 20-ஆம் தேதி நடைபெறுகிறது. சிபிஎஸ்இ பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை கற்பிக்க இந்தத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
இந்தத் தேர்வுக்கான புகைப்படம், கையெழுத்துடன் கூடிய அனுமதிச் சீட்டு www.ctet.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அனுமதிச் சீட்டில் ஏதேனும் தவறுகள் இருந்தால், வரும் 11-ஆம் தேதிக்குள் அதை தேர்வுப் பிரிவில் தெரிவித்து, குறைகளைச் சரி செய்து கொள்ளலாம். அந்தத் தேதிக்குப் பிறகு விவரங்களைத் திருத்துவதற்கு அனுமதி வழங்கப்படாது என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
|
Posted: 08 Sep 2015 07:50 PM PDT
தமிழகத்திலும் பி.எட், எம்.எட். ஆசிரியர் கல்விப் படிப்புகளின் படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகள் என்பதை தமிழக அரசு இறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.
இதில் பி.எட். படிப்புக்கு இந்தக் கல்வியாண்டு (2015-16) மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 28-ஆம் தேதி தொடங்கி 6 நாள்கள் நடத்தப்பட உள்ளது.
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் (என்.சி.டி.இ.) புதிய (2014) வழிகாட்டுதல்படி, பி.எட், எம்.எட். படிப்புகளின் படிப்புக் காலம் இந்தக் கல்வியாண்டு (2015-16) முதல் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது.
இதை, பிற மாநிலங்கள் அனைத்தும் ஏற்று நடைமுறைப்படுத்திய நிலையில், தமிழகம் மட்டும் எதிர்ப்புத் தெரிவித்தது. தமிழகத்திலுள்ள சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரி நிர்வாகிகள் சங்கம் இந்தப் புதிய வழிகாட்டுதலை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தில் நிகழாண்டில் பி.எட். படிப்புக் காலம் ஓராண்டா, இரண்டு ஆண்டுகளா என்ற குழப்பம் நீடித்து வந்தது. மேலும், இந்தப் படிப்பில் நிகழாண்டு மாணவர் சேர்க்கையும் தாமதமாகி வந்தது.
இதனிடையே, மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை, சென்னை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் கடந்த மாதம் வெளியிட்டது.
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோதும், மாணவர் சேர்க்கைக்கான ஆயத்தப் பணிகளை அந்த நிறுவனம் மேற்கொண்டது. இந்த நிலையில், பி.எட், எம்.எட். படிப்புக் காலம் நிகழாண்டில் தமிழகத்திலும் இரண்டு ஆண்டுகள்தான் என்பதை தமிழக அரசு இறுதி செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
இதுகுறித்து விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவன முதல்வரும், பி.எட். மாணவர் சேர்க்கை செயலருமான ஆர்.பாரதி கூறியது:
என்.சி.டி.இ. வழிகாட்டுதலின் படி, தமிழகத்திலும் நிகழாண்டு முதல் பி.எட். படிப்புக் காலத்தை இரண்டு ஆண்டுகளாக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்து, உத்தரவிட்டுள்ளது. எனவே, நிகழாண்டில் பி.எட், எம்.எட். படிப்புகளில் சேரும் மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் படித்தாக வேண்டும்.
மேலும், பி.எட். படிப்புக்கான கலந்தாய்வு வரும் 28-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. முதல் நாளில் காலையில் மாற்றுத் திறனாளிகளுக்கும், மதியம் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கும் கலந்தாய்வு நடத்தப்படும்.
செப்டம்பர் 29-ஆம் தேதி கணிதப் பாடப் பிரிவினருக்கும், 30-ஆம் தேதி இயற்பியல், வேதியியல் பிரிவினருக்கும் கலந்தாய்வு நடத்தப்படும்.
அக்டோபர் 1-ஆம் தேதி தாவரவியல், விலங்கியல் பிரிவினருக்கும், 3-ஆம் தேதி தமிழ், ஆங்கிலப் பாடப் பிரிவினருக்கும், 5-ஆம் தேதி காலையில் வரலாறு, புவியியல் வணிகவியல் பிரிவினருக்கும், மதியத்தில் பொருளாதாரம், மனை அறிவியல் பிரிவினருக்கும் கலந்தாய்வு நடத்தப்படும்.
இதுதொடர்பான அறிவிப்பு கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்படும் என்றார்.
|
Posted: 08 Sep 2015 07:49 PM PDT
சட்டப் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில் வழங்கப்படும் 3 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டது.
இளநிலை சட்டப் படிப்புக்கான (எல்.எல்.பி.) மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இணைப்புக் கல்லூரிகளில் வழங்கப்படும் மூன்றாண்டு சட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வருகிற 10-ஆம் தேதி தொடங்கி 13-ஆம் தேதி வரை சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
|
Posted: 08 Sep 2015 07:49 PM PDT
பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 22 ஆயிரம் குறைந்துள்ளது. அனைவருக்கும் கல்வித் திட்டம் சார்பில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளைக் கணக்கெடுத்து, அவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, கடந்த 2010-11-ஆம் ஆண்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் 56,113 பேர் கண்டறியப்பட்டனர். 2015-16-ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட பள்ளி செல்லாக் குழந்தைகளின் எண்ணிக்கை 33,686-ஆகக் குறைந்துள்ளது.
வீடுவாரியாகக் கணக்கெடுப்பு, விழிப்புணர்வு முகாம், தரமானகல்வி போன்றவற்றின் மூலம் 100 சதவீத குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக, பள்ளி செல்லாக் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மென்பொருள் மூலம்... பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் அவரவர் வயதுக்கும், கற்றல் அடைவுத் திறனுக்கும் ஏற்ப மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்படுவர்.
அவ்வாறு மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்படும் குழந்தைகள் அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள பிரத்யேக மென்பொருள் மூலம் கண்காணிக்கப்படுகின்றனர்.
புகைப்படத்துடன்கூடிய மாணவர் விவரம், மாணவரின் பெற்றோர் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளனரா, மாணவர் பள்ளிக்கு எத்தனை நாள்கள் வரவில்லை உள்ளிட்ட விவரங்கள் இந்த மென்பொருள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.
அந்த மாணவர் 8-ஆம் வகுப்புத் தேர்ச்சிப் பெறுவது வரை அவரது கற்றல் விவரங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 2014-15-ஆம் கல்வியாண்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளில் 42,245 பேர் சிறப்புப் பயிற்சி மையம், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டப் பள்ளிகள், நேரடிச் சேர்க்கை ஆகிய வழிகளில் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.
இந்தக் குழந்தைகளின் கல்விக்காக ரூ.22 கோடி செலவிடப்பட்டுள்ளது
|
Posted: 08 Sep 2015 07:48 PM PDT
தில்லியில் புதன்கிழமை நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம், 48 லட்சம் அரசு ஊழியர்களும்,
55 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பயன்பெறுவார்கள் என்று தெரிகிறது.
""மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை தற்போதுள்ள 113 சதவீதத்தில் இருந்து 119 சதவீதமாக உயர்த்துவது குறித்து மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பரிசீலிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது'' என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த அகவிலைப்படி உயர்வு, கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு அமலாக உள்ளது.
|
Posted: 08 Sep 2015 07:21 PM PDT
|
Posted: 08 Sep 2015 10:10 AM PDT
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைகளையே இனி ஆசிரியர்களும், ஊழியர்களும் பயன்படுத்த வேண்டும் என்று புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. இது ஆசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
|
Posted: 08 Sep 2015 10:02 AM PDT
![]() |
Posted: 08 Sep 2015 09:53 AM PDT
கல்வியின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு கொண்ட தலைமுறை இது!
சமீபத்தில் சென்னை மயிலாப்பூரில் உள்ளடங்கிய ஒரு பள்ளி வழியாக எதற்கோ செல்ல வேண்டியிருந்தது. அந்த இடம் பரிச்சயமான சூழலாக மனத்தில் மின்னலடித்தது. விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிப் படிப்பை முடித்த எனக்கு இவ்வளாகம் எப்படிப் புழங்கிய பகுதியாக முடியும் என்ற எண்ணம் ஓடியது. என் மகள் எழுதிய ஒரு தேர்வுக்காக உடன் சென்ற நான், அங்கிருந்த மர நிழலில் முழு நாளும் காத்துக் கிடந்தது நினைவுக்கு வந்தது. நான் படித்த பள்ளிக்கூடத்துக்கே
என்னைச் சேர்க்கவோ, வகுப்பாசிரியரைச் சந்திக்கவோகூட என் அப்பா வந்ததில்லை. அரசு ஊழியரான அவர், துறைத் தேர்வு ஒன்றை எழுத வந்தபோதுதான் என் பள்ளி வளாகத்தை முதன் முதலில் பார்த்தார். அதுதான் வாழ்வில் ஒரே முறை. என் தலைமுறையிலோ நிலைமை தலைகீழ்.
மேல்நிலைக் கல்வி படித்தபோது தனிப் பயிற்சிக்காக மந்தைவெளியில் பறக்கும் ரயில் நிலையத்தின் அருகில் ஒரு நிறுவனத்தில் மகளைச் சேர்த்திருந்தேன். தானி ஏற்பாடு செய்யும்வரை தொடர்வண்டியில் போய் வந்தாள். விடியற்காலையிலும் மதிய வெயிலிலும் முன்னிர விலும் உடன் சென்றதும், நிலையம், நிறுவன வளாகங்களில் காத்திருந்ததும் எதற்கு எனத் தெரியவில்லை. நம் பொறுப்பைக் காட்டவும் படி என்று சொல்லாமல் அதை உணர்த்தவுமாக இருக்கலாம். இன்று நகர அப்பாக்கள் பலரும் இப்படித்தான் இயங்குகிறார்கள்.
தவச்சாலைகளான கல்விக்கூடங்கள்
தனிவிருப்பமாக மகள் படித்த இந்தி வகுப்பு வசித்த தெருவிலேயே அமைந்துவிட்டது. அதனால், தேர்வு மையத்துக்கும், சான்றிதழ் வழங்கு நிகழ்வுக்கும் மட்டும் செல்ல வேண்டியிருந்தது. சென்னையின் ராயப் பேட்டை, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, தியாகராய நகரின் பல பள்ளிகள் காலை முதல் மாலைவரை தவச்சாலைகளாயின. மகளின் அயல் மொழி ஆர்வத்தில் திகைந்த ஜப்பான் மொழி பயின்ற இரு இடங்களும் பேருந்தில் செல்ல வேண்டிய தூரத்தில் அமைந்தன. குறைந்த தூரமேயானாலும் நெரிசல் நேரத்திலும், ஊர்வல காலத்திலும் சென்று திரும்பப் பல மணிநேரம் ஆகிவிடும். இவ்வகுப்புகள் மதியம் மற்றும் இரவுப் பொழுதில் நடைபெறுவன. எனக்கு அருகமைந்த உணவகங்களின் சிறப்புணவு பழக்கமானது, நூலகங்களின் ஊழியர்கள் ‘பரிச்சயமானார்கள்'.
பள்ளிக் கல்வி முடித்ததும் அடுத்தது என்ன என்பதில் இன்றைய சராசரித் தமிழருக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. முதலில் மருத்துவம். அடுத்து பல் மருத்துவம். அதற்கடுத்தது கால்நடை மருத்துவமும் விவசாயமும். நான்காவது பொறியியல். ஐந்தாமிடம் வணிகவியலுக்கு, ஆறாமிடம் அறவியல் பாடங்களுக்கு. இவை ஏதும் கிடைக்காதவர்களின் இறுதிப் புகலிடம்தான் கலைகள். முதல் மூன்று பிரிவுகளைத் தொட முடியாதவர்கள் நான்காவதை விட்டுக் கீழே இறங்குவதில்லை. அப்படி இறங்குவதை அவமானமாகக் கருதும் நிலைக்கு வந்துவிட்டது இன்றைய காலம்.
+2க்குப் பிறகு அடுத்து என்ன செய்யலாம் என்பது பற்றிப் பலர் அதற்கென இயங்கும் நிறுவனங்களை அணுகி ஆலோசனை கேட்பார்கள். அப்படி ஒரு அமைப்பை அணுகினேன். தேர்வு முடிவுகள் வெளிவர மூன்று வாரம் இருக்கும்போதே, அதன் தலைவரைப் போய்ப் பார்த்தேன். ‘என்ன இவ்வளவு தாமதமாக வருகிறீர்கள்’ என்றார் அவர். ‘ஐயா, இன்னும் முடிவுகள் வெளிவரவில்லையே’ என்றேன் மெதுவாக. தேர்வு எழுதுவதற்கு முன்பே வர வேண்டும் என்றார். +2க்குப் பிறகான படிப்புகளுக்கு அகில இந்திய அளவிலான தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய பல கடைசித் தேதிகளை அப்போது நான் கடந்துவிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டினார். அதிர்ந்துபோனேன்.
எங்களுக்கு அந்த நேரத்தில் தேர்வு வாய்ப்புகள் 10 இருந்தன. மகள் எல்லாவற்றையும் எழுதினாள். காலையில் கொட்டிவாக்கம் பள்ளியில் ஒரு மணிக்குத் தேர்வொன்று முடியும். அதே நாளில் மதியம் இரண்டு மணிக்கு டி.டி.கே. சாலையில் உள்ள பள்ளி ஒன்றில் இன்னொரு தேர்வு தொடங்கும். ஒரு மணி நேரத்தில் கொட்டிவாக்கத்திலிருந்து ராஜா அண்ணாமலைபுரம் வர வேண்டும். வாடகை உந்தியில் பள்ளி வாசலில் காத்திருந்து, தேர்வு எழுதிவிட்டு வெளிவரும் மகளை உள்ளே திணித்துக்கொண்டு வர முயன்றால், வாசலி லேயே நெரிசலில் வண்டி சிக்கிவிடும். எப்படியோ தப்பித்து 10 நிமிட தாமதத்தில் தேர்வறையை அடைந் தோம். வழியில் வாகன போஜனம். இப்படிப் பல நெருக்கடிகளைச் சந்தித்துப் பல தேர்வுகளை எழுதி முடித்தோம். இத்தேர்வுகள் எனக்கும் என் மகளுக்கும் பொது அறிவை வளர்த்தன. தவிர, வேறு பயன் விளையவில்லை.
மகள் வாங்கிய மதிப்பெண்ணுக்கு அரசு ஒதுக்கீட்டில் சுயநிதிக் கல்லூரியில் பல் மருத்துவம் கிடைத்தது. ஆனால் மகள் அதை விரும்பவில்லை. மொழியும் இலக்கியமும் இயல்பாகவே என் மகளுக்குப் பிடித்தவை. ஆங்கில இலக்கியத்தைத் தேர்ந்தாள். சென்னையின் சிறந்த கல்லூரியில் சேர்ந்தாள். அவள் தேர்வு எனக்கு வருத்தத்தைத் தரவில்லை.
கரையும் சேமிப்பு
இளங்கலை முடித்த பின் முதுகலைக்கான விண்ணப்பங்கள் அனுப்புவதை மகளே பார்த்துக்கொண் டாள். அதற்கான தேர்வுகளில் ஒன்று புதுச்சேரியில், மற்றொன்று டெல்லியில், மற்றவை சென்னையில். இந்தத் தேர்வுகளுக்கு மகளை அழைத்துப் போய் வருவது எங்களுக்கு ஒரு சுற்றுலா போலவே ஆகிவிட்டது. புதுச்சேரியில் எழுதிய தேர்வின் பயனால் இப்போது மகள் ஷில்லாங்கில் படிக்கிறாள். ஆகாய மார்க்கத்தில் சேமிப்பு கரைகிறது.
கல்வியின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு நகரவாசிகளுக்காவது வரத் தொடங்கியிருக்கிறது. எனினும் நாம் அடைய வேண்டிய தூரம் கண்ணுக்கு அப்பால் நீண்டிருக்கிறது. மயிலம் கிராமத்தில் படித்துக் கொண்டிருந்த நான், ஆறாம் வகுப்பை அருகமை நகரமான திண்டிவனத்தில் படிக்க விரும்பினேன். அப்பா மறுத்துவிட்டார். எங்கு படித்தாலும் படிக்கிறவர்கள் படிப்பார்கள்; படிக்காதவர்கள் எங்கு சென்றாலும் ஜொலிக்க மாட்டார்கள் என்று சொன்னார். நடுத்தர வர்க்கம், தன் பொருளாதார இயலாமையை மறைத்துக் கொள்ள இத்தகைய அறப் போர்வைகளைப் போர்த்திக் கொண்டு சுருண்டுவிடும்.
பொருளாதாரத்துடன் இணைந்த மத்திய அரசின் திட்டம் ஒன்றுதான் என்னை நகரத்துக்குக் கூட்டிவந்தது. கிராமத்தில் படிக்கும் சிறார்களில் சிறந்தவர்களை நகரத்தில் உள்ள தேர்ந்த பள்ளியில் சேர்க்கும் திட்டம் அது. ஒரு ஊராட்சி ஒன்றியத்தில் இயங்கும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பில் முதலிரு இடங்களைப் பெற்ற மாணவர்களுக்குப் போட்டித் தேர்வொன்றை வைத்து, அதில் இருவரைத் தேர்ந்தெடுத்து, நகரப் பள்ளியில் சேர்த்து, படிக்கும் செலவை அரசு ஏற்றுக்கொள்ளும். 97 பேர் பங்கேற்ற போட்டியில் இருவருள் ஒருவராகத் தேர்வுபெற்று கடலூருக்கு வந்து சேர்ந்தேன். போட்டித் தேர்வை எழுதிய திண்டிவனத்துக்கோ, படிக்கச் சென்ற கடலூருக்கோ அப்பா உடன்வரவில்லை. எட்டாவது படிக்கும்போதே பெற்றோர் உடன்வரவில்லை. ஆனால் நானோ பட்டப்படிப்புக்குப் பிறகும் கூடவே அலை கிறேன். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த தலைமுறை என்பது மட்டும் இதற்குக் காரணமாய்த் தோன்றவில்லை. பொருளாதார அன்பும் கூடுதல் காரணங்கள் என்று தோன்றுகின்றன. என் மகள் சொல்வாள் பெண் என்பதுதான் காரணம் என்று.
|
09 September 2015
today total news
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment