Posted: 04 Sep 2015 05:45 AM PDT
நாடு முழுவதும் செப்டம்பர் 5-ம் தேதி முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனை நினைவுகூறும் வகையில் ஆசிரியர் தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறோம்.
இந்நிலையில், நாளை கொண்டாடவிருக்கும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டாக்டர்.சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை கவுரவிக்கும்
விதமாக நினைவு நாணயம் ஒன்று இன்று வெளியிடப்பட உள்ளது.இந்த நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட உள்ளார். மேலும் கலா உற்சவ் என்ற இணையதள சேவையையும் அவர் துவக்கி வைக்க உள்ளார். |
Posted: 04 Sep 2015 05:44 AM PDT
கோவை மத்திய சிறையில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியருக்கான நான்கு பணியிடங்களுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய சிறை கண்காணிப்பாளர் பழனி வெளியிட்ட அறிக்கை:
கோவை மத்திய சிறையில், காலியாக உள்ள நான்கு இடைநிலை ஆசிரியர் பணியிடத்துக்கு, ஆசிரியர் பட்டயப்படிப்புடன்,இரண்டு ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பொதுப்போட்டி, இன சுழற்சிஅடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும். பொதுப்பிரிவினருக்கு 30 வயதும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 32 வயதும், தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு, 35 வயது 2015 (ஜன.,1ன்படி) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தகுதிகள் உடையவர்கள், உரிய கல்விச்சான்றிதழ், முன் அனுபவம்-ஜாதி-முன்னுரிமைச் சான்றிதழுடன், வரும் 18ம் தேதி காலை, 11:00 மணியளவில், கோவை மத்திய சிறைக் கண்காணிப்பாளர், முன் ஆஜராக வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
Posted: 04 Sep 2015 05:43 AM PDT
ஆசிரியர் பயிற்றுநர்கள் 500 பேருக்கு பணிமூப்பு அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர் பணி மாறுதல் வழங்க அரசு முடிவெடுக்க வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.அனைத்துவளமைய பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்க பொதுச்செயலர் ராஜ்குமார் தாக்கல் செய்த மனு:
அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் (எஸ்.எஸ்.ஏ.,) கீழ் 4582 பேர் மாவட்ட மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார வளமைய பயிற்றுநர்களாக பணிபுரிகின்றனர்.தமிழக அரசு 2006 ல்,' ஆண்டுதோறும் 500 வட்டார வளமைய பயிற்றுநர்கள் பணி மூப்பு அடிப்படையில் அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர்,
' என தெரிவித்தது. 2006 முதல் 2012 வரை அந்நடைமுறை பின்பற்றப்பட்டது. 2012--13 ல் 115 வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மட்டுமே, பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். அரசாணைப்படி ஆண்டுக்கு 500 வட்டார வளமைய பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். 385 வட்டார கண்காணிப்பாளர்களை முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக நியமித்தது தவறு. எனவே, 2012--14 வரை 885வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களை, பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க உத்தரவிட வேண்டும். பட்டதாரி ஆசிரியர்களை நேரடியாக நியமிக்க ஆசிரியர் தேர்வுவாரியம் 2014 ஜூலை 14 ல் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, ராஜ்குமார் மனு செய்திருந்தார்.
தனி நீதிபதி,' 885 வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களை, பட்டதாரி ஆசிரியர்களாக நியமிப்பது பற்றி பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,' என 2014 ல் உத்தரவிட்டார்.இதை எதிர்த்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் மேல்முறையீடு செய்தார்.நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், ஜி.சொக்கலிங்கம் கொண்ட அமர்வு உத்தரவு: ஆசிரியர் பயிற்றுநர்கள் 500 பேருக்கு பணிமூப்பு அடிப்படையில்,2015--16 ல்பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் வழங்க அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம்;ஒப்புதல் கிடைத்ததும் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக் கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் அரசு 6 வாரங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றனர். ராஜ்குமார் தரப்பு வழக்கறிஞர் சண்முகராஜா சேதுபதி ஆஜரானார்.
|
Posted: 04 Sep 2015 05:43 AM PDT
பணிக்குச் செல்லும் பெண்களுக்கு உதவும் வகையில் மகப்பேறு கால விடுமுறையை 3 மாதங்களில் இருந்து 8 மாதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மத்திய மகளிர் மற்றும் குழந்தை நலத்துறை அமைச்சர் மேனகாவின் கோரிக்கையை ஏற்று அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பணிபுரியும் பெண்களுக்கு தாய்மைஅடையும் போது பலவித சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. பிரசவத்திற்கு முந்தைய சிக்கலைவிட பிரசவத்திற்குப் பின்னர் குழந்தையைக் கூட கவனிக்க முடியாமல் மூன்று மாதங்களிலேயே பணிக்கு திரும்ப வேண்டியிருக்கிறது.
இதனால் ஏராளமானோர் தாய்மையடைவதைக்கூட தள்ளிப் போடுகின்றனர்.குழந்தை பிறந்த உடன் பணிக்குத் திரும்பும் பெண்கள் பல்வேறு உடல்நல பாதிப்புக்களுக்கு ஏற்படுவதுடன், குழந்தைக்கும் தாயின் அறவணைப்பு கிடைக்காமல் போய்விடுகிறது. எனவே தற்போதிருக்கும் 3 மாத மகப்பேறு விடுமுறையை 8 மாதமாக உயர்த்த பரிந்துரை செய்துள்ளோம் என்று மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை கூடுதல் செயலாளர் நுதன் குகா பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார்.
இந்த பரிந்துரையை பிரதமர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். செயலாளர்கள் குழுவின் ஆலோசனைக்காக மத்திய அமைச்சரவை செயலகத்திடம்இந்த பரிந்துரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றார். பிரசவத்திற்கு முன்பு இந்த 8 மாத விடுமுறை என்பது குழந்தை பிறப்பு நாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தேவிடுமுறை எடுக்க வழிவகை செய்யும். குழந்தை பிறந்த பிறகு 7 மாதங்கள் விடுமுறை அளிக்கப்படும். அமைச்சரவை செயலகம் ஒப்புதல் அளித்த பிறகு இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
|
Posted: 04 Sep 2015 05:41 AM PDT
![]() |
Posted: 04 Sep 2015 05:39 AM PDT
ராதாகிருஷ்ணன் விருதுக்கு இந்தாண்டு 377 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
மறைந்த முன்னாள் ஜானதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செம்படர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஆசிரியர்களை
தேர்வு செய்து, அவர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன், நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு, தமிழகம் முழுவதுமுள்ள பல்வேறு பள்ளிகளில் பணியாற்றும், 377 ஆசிரியர்கள் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். தொடக்கப்பள்ளி - 201, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி - 134, மெட்ரிக் - 30, ஆங்கிலோ இந்தியன் பள்ளி - 2, கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள் - 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
|
Posted: 04 Sep 2015 05:39 AM PDT
|
Posted: 03 Sep 2015 06:28 PM PDT
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணினைச்சார்ந்த ஆசிரியர்கள் பலர் டாக்டர் ராதக்கிருஷ்ணன் விருது,மற்றும் தேசிய நல்லாசிரியர் விருதுகளுக்கு தேர்வாகியுள்ளது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் அதனை எண்ணி பெருமிதம் அடைவதாகவும் பொதுசெயலர் மற்றும் மாநில நிர்வாகிகள் சேர்ந்த கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.விருதுபெ
தகவல்-கே.பி.ரக்ஷித்.மாநில துணைத்தலைவர்
|
Posted: 03 Sep 2015 06:31 PM PDT
இவ் வாண்டு ஆசிரியர்தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஆசிரியர்களுக்கான டாக்டர் ராதாக்கிருஷ்ணன் விருது மற்றும் தேசிய நல்லாசிரியர் விருதுபெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் தமது நல்வாழ்த்துக்களை பொதுசெயலர் செ.முத்துசாமி மற்றும் மாநில நிர்வாகிகள் திரு க செல்வராஜ்(பொறுப்பு தெரிவித்துள்ளனர்.மேலும் அவர்களின் சிறந்த பணியும் சேவையும் தொடர )பொதுசெயலர்,திரு கு,சி.மணி தலைவர்,மற்றும் தே.அலெக்சாண்டர் மாநில் பொருளாளர் ஆகியோர் வாழ்த்துவதாகவும் தமது கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணினைச்சார்ந்த ஆசிரியர்கள் பலர் இவ்விருதுகளுக்கு தேர்வாகியுள்ளது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் அதனை எண்ணி பெருமிதம் அடைவதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.விருதுபெ
தகவல்-கே.பி.ரக்ஷித்.மாநில துணைத்தலைவர்
|
Posted: 03 Sep 2015 06:12 PM PDT
பணி நிரந்தரம் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திய பகுதி நேர ஆசிரியர்கள் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் திரட்டி வருவதால் பகுதி நேர ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தமிழக பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், அரசின் கவனத்துக்கு எடுத்து செல்லும் வகையில் கடந்த 31ம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில்,
எந்தெந்த பகுதிகளில் யார்? யார்? பங்கேற்றனர் என உளவுத்துறை மூலம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் தகவல்களை திரட்டி வருகிறது.
ஆர்ப்பாட்டம் நடந்த அன்று பள்ளிக்கு செல்லாத பகுதி ஆசிரியர்கள் பட்டியல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் கேட்டுள்ளதால், பகுதி நேர ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதுகுறித்து பகுதி நேர ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ‘கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்த அன்று பள்ளிக்கு செல்லாத பகுதி நேர ஆசிரியர்கள் பட்டியலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலிருந்து கோரி உள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவே இந்த பெயர் பட்டியல் கேட்டுள்ளதாக கூறுகின்றனர்.
உடல்நிலை சரியில்லாமல், சொந்த விஷயங்களுக்காக விடுமுறையில் சென்றவர்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்காத ஆசிரியர்களும் பாதிக்கப்படுவர். எனவே முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
மெகா வசூலில் ஈடுபட முயற்சி
ஏற்கனவே பகுதி நேர ஆசிரியர்களின் தொகுப்பூதியம் ரூ.5,000 லிருந்து ரூ.7,000மாக உயர்த்தப்பட்டது. அப்போது ஒருசில சங்க நிர்வாகிகள் ‘நாங்கள் சொல்லிதான் சம்பளம் உயர்ந்துள்ளது. மேலும், மேலிடத்தை கவனிக்க வேண்டும். எனவே, ஒவ்வொரு ஆசிரியரும் ரூ.1,500 முதல் ரூ.2,000 கொடுக்க வேண்டும். அப்போதுதான் பணி நிரந்தரம் கோரிக்கையை வைக்க முடியும்’ எனக்கூறி வசூல் வேட்டையில் ஈடுபட முயன்றனர். இதுதொடர்பாக புகார் எழவும் வசூல் வேட்டைக்கு தடை வந்தது. தற்போது பணி நிரந்தர கோரிக்கையை முன்வைத்து சிலர் மெகா வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
|
Posted: 03 Sep 2015 06:11 PM PDT
புதுடில்லி: விலங்குகளிடமும் அன்பு செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், நாடு முழுவதும் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்ய சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.
இதற்கு பிள்ளையார் சுழி போட்டது குஜராத் மாநிலம் தான். அங்கு தான் இம்முறை முதலில் கொண்டு வரப்பட்டது. சமீபத்தில் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் அம்மாநில அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில், மூன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை
மாணவர்களுக்கு விலங்குகளிடம் கருணை செலுத்த வேண்டியது பற்றி வலியுறுத்த வேண்டும் எனவும், இதற்காக பிராணிகள் நலச்சங்கம் வகுத்து கொடுத்த பாடங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இதையே நாடு முழுவதும் உள்ள தங்கள் பள்ளிகளிலும் கொண்டு வர சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. சண்டிகர், டில்லி, கோவா, கேரளா, அரியாணா, மத்திய பிரதேஷ் ஆகிய மாநிலங்களும் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளன. பிராணிகள் நலச்சங்க கல்வி ஒருங்கிணைப்பாளர் பூஜா மகாஜன் கூறும்போது, ''விலங்குகளிடம் அன்பு செலுத்த வேண்டும் என்று சொல்லித் தந்தாலே மற்றவர்களிடமும் குழந்தைகள் அன்பு செலுத்த துவங்கிவிடுவர். வன்முறை கலாசாரம் ஒழியும்'' என்றார். இப்பாடத்திட்டத்தில் விலங்குகளின் முக்கியத்துவம், அன்பு செலுத்த வேண்டியதன் அவசியம், வீடியோ, புகைப்படங்கள், விலங்குகள் பற்றிய கதைகள் போன்றவை இடம் பெற்றுள்ளன. ஏற்கனவே பிராணிகள் நலச்சங்கம் தயாரித்துக்கொடுத்த பாடக் குறிப்புகள், நாடு முழுவதும் 25 ஆயிரம் பள்ளிகளில் பயன்படுத்தப்படுகின்றன. 50 லட்சம் குழந்தைகளை இவை சென்றடைகின்றன.
|
Posted: 03 Sep 2015 06:08 PM PDT
2016-17ம் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் பி.எஸ்சி. அறிவியல் பட்டப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையையும் பல்கலைக்கழகம் நடத்த உள்ளது. தொலைநிலைக் கல்வி வாயிலாக விலங்கியல், தாவரவியல், வேதியியல், இயற்பியல் தொடர்பான இளநிலை பட்டப் படிப்புகள் தொடங்கப்பட உள்ளன என தமிழக அரசின் உயர் கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2015-16 இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படிப்புகளைத் தொலைநிலைக் கல்வி முறையில் அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஏற்கெனவே மேற்கொண்டு தயார் நிலையில் உள்ளது.
தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சந்திரகாந்தி இதுகுறித்து மேலும் கூறியிருப்பதாவது : தொலைநிலை கல்வி முறையில் பி.எஸ்சி. விலங்கியல், தாவரவியல், வேதியியல், இயற்பியல் படிப்புகளை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகளை பல்கலைக்கழகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இதற்கு பல்கலைக்கழகத்தின் கல்வி வாரியக் குழு, ஆட்சிமன்றக் குழு ஆகியவற்றின் ஒப்புதலும் பெறப்பட்டு விட்டது.
இதில் இடம்பெறும் செய்முறை பயிற்சிகளை மாணவர்கள் நேரடியாக மேற்கொள்ள வசதியாக அந்தந்தப் பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட கல்லூரிகளில் ஏற்பாடு செய்யப்படும்.
பிராக்டிக்கல் வகுப்புகளையும் அந்தக் கல்லூரியிலேயே மாணவர்கள் மேற்கொள்ளலாம்.
இதற்காக தமிழகத்தில் பல கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. 2016-17 கல்வியாண்டு முதல் இந்தப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்றார்.
யுஜிசி துணைத் தலைவர் எச். தேவராஜ் கூறுகையில்
ஏற்கனவே அடிப்படை அறிவியல் கல்வியை சில கல்வி நிறுவனங்கள் தொலைநிலைக் கல்வி முறையில் வழங்குவதாக தகவல்கள் வந்துள்ளன. அது சாத்தியமில்லாத ஒன்று. ஏனெனில் செய்முறை பயிற்சிகளை மாணவர்கள் முழுமையாகப் பெறுவது கடினம்.
இதற்கு யுஜிசி அனுமதி வழங்காது. இருந்தபோதும் இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார்.
|
Posted: 03 Sep 2015 06:06 PM PDT
|
Posted: 03 Sep 2015 06:02 PM PDT
பீடி, சுரங்கம் மற்றும் சினிமா தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வி உதவித்தொகை பெற, விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
இதுகுறித்து, மத்திய அரசின் தொழிலாளர் நல ஆணையாளர் ஜோப்பிரின்ஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகாரம் பெற்ற பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் பீடி, சுரங்கம் மற்றும் சினிமா தொழிலாளர்களின் பிள்ளைகள், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
உதவித்தொகை சம்பந்தமான தகவல்களையும், விண்ணப்பத்தையும், http://tirunelveli.nic.in./
|
Posted: 03 Sep 2015 05:46 PM PDT
தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 16 கோடி கனஅடியாகக் குறைந்துள்ளதால், 2020- ல் கடல் நீர் பூமிக்குள் ஊடுருவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12 லட்சம் கிணறு கள், 39 லட்சம் ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் 91 ஆயிரம் கிணறு கள், 6 லட்சத்து 21 ஆயிரம் ஆழ் துளைக் கிணறுகள் உள்ளன. இவற்றில் 60 சதவீத கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் தற்போது வறண்டுபோய் உள்ளன.
கடந்த 1998 முதல் 2008-ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகால மழை அளவை ஒப்பிடும்போது, எதிர்பாராதவிதமாக குறைந்து கொண்டே வருகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சிறப்பாக இருக்கும் என ஆய்வுகள் தெரிவித்தும், தற்போது 40 சதவீதம் மழை மட்டும் பெய்துள்ளது. இதேநிலை நீடித்தால், 2020-ம் ஆண்டில் மிகப்பெரிய வறட்சியை தமிழகம் எதிர்கொள்ள வேண்டிய நிலை உண்டாகும் எனவும், அதற் குள் நிலத்தடி நீரை செறிவுபடுத் தாவிட்டால் விவசாயம் பொய்த்து விடும் நிலை ஏற்படக்கூடும் எனவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட நீர்வடிப் பகுதி மேம்பாட்டு முகமை வேளாண் பொறியாளர் பிரிட்டோராஜ் கூறியதாவது:
‘‘தமிழகத்தில் 2011-ம் ஆண்டு நடைபெற்ற கணக்கெடுப்பில், நிலத்தடி நீரின் அளவு 26.2 கோடி கனஅடியாக இருந்தது. 2014-ம் ஆண்டு கணக்கெடுப்பில் நிலத்தடி நீர் 16 கோடி கனஅடியாகக் குறைந் துள்ளது. மக்கள் தொகை பெருக் கத்தால், நீரின் தேவை ஒருபுறம் அதிகரித்துக் கொண்டிருக்கையில், மறுபுறம் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மேட்டுப் பகுதிகள் நிலத்தடி நீரை இழந்து வருகின்றன. ஆற்றின் கரையோரங்களில் ஒருசில பகுதி களில் மட்டும் நீர்வளம் உள்ளது.
மூடாமல் விடப்படும் குவாரி பள்ளங்கள் மற்றும் அந்த பகுதியின் நிலத்தடி நீர், பூமிக்குள் உட்புக முடியாமல் உள்ளன. அதனால், குவாரியை சுற்றியுள்ள பகுதிகள் நாளடைவில் நீர்வளத்தை இழக்கின் றன. குவாரிக்கான தேவை முடிந்த பின், அவற்றை தோண்டப்பட்ட மணலைக் கொண்டு மூடிவிட வேண்டும். பெரும்பாலான குவாரி கள், மூடப்படாமல் உள்ளன.
உலக சுகாதார நிறுவன கணக் கெடுப்பின்படி, தனி மனிதனுக்கு ஒரு நாளைக்கு 135 முதல் 155 லிட்டர் நீர் தேவை. ஆனால், 75 சதவீதம் பேர் ஒரு நாளைக்கு 260 முதல் 300 லிட்டர் நீரை பயன்படுத்துகின்றனர். மீதமுள்ள 25 சதவீதம் பேருக்கு 40 லிட்டருக்கும் குறைவான தண்ணீரே கிடைக்கிறது.
ஊற்று என்பது 2 இன்ச் இடை வெளியில் 60 கி.மீ. நீளத்துக்கு பரவியிருக்கும் ஒரு அமைப்பு. ஒவ் வொரு பகுதியிலும் குறைந்தபட்சம் 6 முதல் 8 நீர் ஊற்றுகள் தரை யின் கீழ் உள்ளன. குடிநீர் மோட்டார் பயன்பாடு அதிகரிப்பால் ஊற்று தண்ணீர் அதிக அளவு உறிஞ்சப்படுகிறது. மக்களிடம் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு இல்லாததால், மீண்டும் நீர்ச்செறிவு ஏற்படுவதில்லை. அதனால், விவ சாயத்தில் பெரிய தேக்கத்தை காண முடிகிறது. குடிநீருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.’’
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சாலைகளில் மழைநீர் சேகரிப்பு
நீர் சேமிப்பு குறித்து பிரிட்டோ ராஜ் கூறும்போது,
‘‘5 ஏக்கர் நிலப் பரப்பு கொண்ட ஒரு கிராமத்தில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு இன்ச் அளவு மழை பெய்தால், அந்த கிராமத்துக்கு 5 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும்.
இன்று சாலைகள் தார் மற்றும் சிமெண்ட் சாலைகளாக மாற்றப்பட்டுவிட்டன. அதனால், தண்ணீர் பூமிக்குள் புகுந்து செறிவூட்ட வசதியின்றி, பள்ளங் களை நோக்கி ஓடி ஊருக்கு பலனில்லாத இடங்களில் சேகர மாகிறது. வெளிநாடுகளைப் போல் தார் சாலையின் இருபுறங்களிலும் வழிந்தோடும் நீரை சேகரிக் கும் அமைப்புகளை உள்ளாட்சி நிர்வாகங்கள் ஏற்படுத்த வேண் டும்.
சாலையின் இரு புறங்களிலும் 6 அடி நீளம், 4 அடி அகலத்தில், சுமார் 5 முதல் 6 அடி ஆழம் கொண்ட குழிகளை அமைத்து சிமெண்ட் பலகை, மூடிகள் கொண்ட மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். இதில் 5 அடி வரை 60 மில்லி மீட்டர், 20 மில்லி மீட்டர் எடை கொண்ட ஜல்லிக் கற்களை நிரப்பி, மேல் பகுதியில் ஒரு அடி இடைவெளி விட்டால் அதன் வழியாக மழைநீர் விழுந்து சேகரிக்கப்படும். இவ்வாறு செய்தால் வறட்சியில் இருந்து தமிழகத்தை காப்பாற்றலாம்’’.
இவ்வாறு பிரிட்டோ ராஜ் கூறினார்.
|
Posted: 03 Sep 2015 05:45 PM PDT
பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு கிடைத்த வரவேற்பையடுத்து ஆண் குழந்தைகளுக்காக பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தை இந்திய அஞ்சல் துறை தொடங்கவுள்ளது.
இது தொடர்பாக அஞ்சல் துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு தமிழகத்தில் பெரும் வரவேற்பு உள்ளது. அத்திட்டத்தின் கீழ் இதுவரை 10 லட்சத்து 60 ஆயிரம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில்,
ஆண் குழந்தைகள் பயன்பெறும் வகையிலும் சேமிப்பு திட்டத்தை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பல்வேறு தரப்பிலிருந்து வந்தன.
அதனை மனதில் கொண்டு, குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுள்ள குடும்பங்களில் சேமிப்பு பழக்கத்தை உருவாக்கும் வகையில் ‘பொன்மகன் பொது வைப்பு நிதி’ என்ற திட்டம் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் செலுத்தப்படும் தொகைக்கு 80-சி பிரிவில் வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.
10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் பாதுகாவலர் உதவியோடு பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தில் கணக்கு தொடங்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தானாகவே கணக்கு துவங்கலாம். இத்திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்க வயது வரம்பு கிடையாது. இந்த சேமிப்பு கணக்குகளுக்கு 8.7 சதவீதம் வட்டி தற்போதைய நிதியாண்டில் வழங்கப்படும். இந்த கணக்கின் மூலம் கிடைக்கப்படும் வட்டிக்கு வரி விலக்கு உண்டு.
இந்த வைப்புநிதி திட்டத்தில் இணைய பி-பிரிவில் வரும் அனைத்து அஞ்சல் அலுவலகங்களையும் அணுகலாம். ஆண்டுக்கு ரூ.100 முதல் ரூ. 1லட்சத்து 50 ஆயிரம் வரையிலும் முன் பணம் செலுத்தலாம். இதில் கடன் வசதி மற்றும் செலுத்திய தொகையை திரும்பப்பெறும் வசதியும் உண்டு. பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தின் தொடக்க விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழக அஞ்சல் வட்ட அலுவலகத்தில் செப்டம்பர் 4-ம் தேதி நடக்கவுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
|
04 September 2015
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment