Posted: 06 Aug 2015 06:26 PM PDT
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான சிறப்பாசிரியர்களை வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு மூலம் நியமனம் செய்யும் அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் திரும்பப் பெற்றுள்ளது.
இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பின் அடிப்படையில் மட்டும் பணி நியமனம் நடைபெறக்கூடாது என சென்னை உயர்
நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. அதேபோன்று, பள்ளிக் கல்வித் துறையின் 17.11.2014-ஆம் தேதியிட்ட அரசாணையில், போட்டித் தேர்வு மூலம் சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, வேலைவாய்ப்பு அலுவலக மாநிலப் பதிவு மூப்பு அடிப்படையில் சிறப்பாசிரியர்கள் பணி நியமனம் செய்வது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணை திரும்பப் பெறப்படுகிறது. இது தொடர்பான புதிய அறிவிப்பாணை விரைவில் வெளியிடப்படும்.சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நிலுவையில் உள்ள வழக்குகளின் முடிவுக்கு இது கட்டுப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

|
Posted: 06 Aug 2015 06:26 PM PDT
பகுதி நேர ஆசிரியர்களை அரசு பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, வாலாஜாபாதில் நடந்த சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கக் கூட்டம் வாலாஜாபாத் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் முருகதாஸ் தலைமை வகித்தார். இந்தக்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: அனைத்து ஆசிரியர்கள் போல் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாதத்தின் கடைசி வேலை நாளன்று ஊதியம் வழங்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கடந்த 3 ஆண்டாக நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும். போட்டிகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பயணப்படியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

|
Posted: 06 Aug 2015 06:25 PM PDT
'பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள், பள்ளிகளில், வேலை வாய்ப்புக்கு பதிவு செய்தால், வரும், 19ம் தேதி வரை பதிவு மூப்பில் சலுகை வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்ரலில் நடந்தது; மே, 21ம் தேதி முடிவுகள் வெளியாகின. இதையடுத்து, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மட்டும் வழங்கப்பட்டது; பின், மறு மதிப்பீடு, மறு கூட்டல் மற்றும் 'பெயில்' ஆனவர்களுக்கான மறு தேர்வுகள் நடந்தன.
திருத்தப்பட்ட மதிப்பெண்களுடன், அசல் மதிப்பெண் சான்றிதழ், கடந்த, 5ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. மதிப்பெண் சான்றிதழ் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும், பள்ளிகளில், வேலைவாய்ப்பு பதிவுப் பணி நடந்து வருகிறது. மாணவர்கள், வரும், 19ம் தேதி வரை மதிப்பெண் சான்றிதழ் பெறலாம்; வேலைவாய்ப்பு பதிவை மேற்கொள்ளலாம்.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:மாணவர்கள், 19ம் தேதி வரை எந்த தேதியில் பதிவு செய்தாலும், ஆக., 5ம் தேதிக்கான பதிவு மூப்பு கிடைக்கும் வகையில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த வசதியை பயன்படுத்தி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மதிப்பெண் சான்றிதழ் வாங்கி, தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

|
Posted: 06 Aug 2015 06:25 PM PDT
தொழிற்கல்வி பட்டப்படிப்பு துவங்க, தமிழகத்தில் ஐந்து கல்லுாரிகள் உட்பட, 49 கல்லுாரிகளுக்கு, பல்கலை மானியக் குழு அனுமதி அளித்துள்ளது.
கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், தொழிற்கல்வி படிப்புகளை தொடங்க, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் பல்கலை மற்றும் கல்லுாரிகளிடம் இருந்து இதற்கான விண்ணப்பங்கள்
பெறப்பட்டன. பரிசீலனை முடிந்து, நாடு முழுவதும் 49 கல்லுாரி மற்றும் பல்கலை யில் தொழிற்கல்வி பட்டப்படிப்பு தொடங்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், திருச்சி பிஷப் ஹெபர் கல்லுாரி (கணக்குப் பதிவு மற்றும் வரிக் கணக்கீடு), மதுரை லேடி டோக் கல்லுாரி (மருத்துவ சேவை மற்றும் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம்), பெரியார் பல்கலை (துணிநுால் வடிவமைப்பு மற்றும் உணவு பதப்படுத்துதல்), சென்னை ஸ்டெல்லா மேரிஸ் (உணவு பதப்படுத்துதல் மற்றும் தர நிர்ணயம், நிலைக்கத்தக்க எரிசக்தி மேலாண்மை), விருதுநகர் இந்து நாடார் கல்லுாரி (சுற்றுச்சூழல் கணக்கீடு மற்றும் தீர்வு நடவடிக்கை) ஆகிய ஐந்து கல்லுாரிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது. இதற்காக, 7.9 கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 16 கல்லுாரிகள் உட்பட, நாடு முழுவதும், 337 கல்லுாரி மற்றும் பல்கலைகளுக்கு, தொழிற்கல்விக்கான அனுமதி மறுக்கப்பட்டுஉள்ளது

|
Posted: 06 Aug 2015 11:42 AM PDT
கல்வி கற்பதில் சிரமம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஐ.ஐ.டி., என்.ஐ.டி., உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளில் 4,400 மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு உறுதிமொழி அளித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, லோக்சபாவில் கேள்வி நேரத்தின் போதுகேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், கடந்த 2012-13 முதல் 2014-15ம் கல்வியாண்டு வரை, ஐ.ஐ.டி.,க்களில் இருந்து 2,060 மாணவர்கள் பாதியில் நிறுத்தியுள்ளனர். இதேகாலகட்டத்தில் என்.ஐ.டி.,க்களில் இருந்து 2,352 மாணவர்கள் பாதியில் நிறுத்தியுள்ளனர் என கூறியுள்ளார்.
மேலும் அவர், வேறு கல்லூரி,கல்வி நிறுவனங்களுக்கு மாறுதல், தனிப்பட்ட காரணங்கள், மருத்துவ காரணங்கள், உயர்நிலை கல்வியில் போது பணி கிடைத்தது மற்றும் கல்வி கற்பதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர்.
அழுத்தம் மற்றும் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவ செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. கல்வி கற்பதில் சிரமப்படும் மாணவர்களின் பிரச்னைகளை தீர்க்கவும் அரசு உறுதிபூண்டுள்ளது என கூறியுள்ளார்.
கடந்த 2014 -15ம் ஐ.ஐ.டி.,க்களில் இருந்து 757 பேர் நீக்கப்பட்டுள்ளனர். 2013-14 காலகட்டத்தில் 697 பேர் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர்.. 2012-13ல் 606 பேர் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர். இதில் ரூர்க்கி ஐ.ஐ.டி.,யில் இருந்து 228 பேரும், காரக்பூர் ஐ.ஐ.டி.,யில் இருந்து 209 பேரும், டில்லி ஐ.ஐ.டி.,யில் இருந்து 169 பேரும் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர்.
மாண்டி, ஜோத்பூர், கான்பூர், சென்னை ஐ.ஐ.டி.,யில் இருந்து எந்த மாணவரும் படிப்பை பாதியில் நிறுத்தவில்லை. கடந்த 2014-15ல் 717 மாணவர்களும். 2013-14ல் 785 மாணவர்களும், 2012-13ல் 850 மாணவர்களும் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர். இந்தியாவில் தற்போது, 15 ஐ.ஐ.டி.,க்களும், 30 என்.ஐ.டி.,க்களும் உள்ளன.

|
Posted: 06 Aug 2015 11:41 AM PDT
|
Posted: 06 Aug 2015 11:40 AM PDT
|
Posted: 06 Aug 2015 11:39 AM PDT
சுதந்திர தினத்தையொட்டி வருகிற 15-ஆம் தேதி, தில்லி செங்கோட்டையில் நடைபெறவுள்ள விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ள மத்திய அரசு அதிகாரிகள் அனைவரும், இந்த விழாவில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று மத்திய அமைச்சரவைச் செயலர் பிரதீப் குமார் சின்ஹா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, மத்திய அரசின் அனைத்து அமைச்சகச் செயலர்களுக்கும் அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சுதந்திர தினத்தையொட்டி வருகிற 15-ஆம் தேதி,
தில்லி செங்கோட்டையில் நடைபெறவுள்ள விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். தேசிய விழாவான, சுதந்திர தின விழாவின் முக்கியத்துவத்தைக் கருதி, இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ள மத்திய அரசு அதிகாரிகள் அனைவரும், விழாவில் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.
பல சமயங்களில், சுதந்திர தின விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும் அரசு அதிகாரிகளில் பெரும்பாலோர், விழாவில் கலந்து கொள்ளாதது தெரிய வந்துள்ளது. இந்த முறை, விழாவில் பங்கேற்காத அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

|
Posted: 06 Aug 2015 11:38 AM PDT
|
Posted: 06 Aug 2015 11:37 AM PDT
|
Posted: 06 Aug 2015 11:36 AM PDT
|
Posted: 06 Aug 2015 11:35 AM PDT
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களைச் சேர்ப்பதற்கான கடைசி தேதி வரும் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் பிறப்பித்தார்.
அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வழக்கமாக ஜூலை 31-ஆம் தேதியுடன் நிறைவுபெறும். பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு எழுதிய மாணவர்கள், ஜூன் மாத மாணவர் சேர்க்கையின்போது விடுபட்ட மாணவர்கள், பள்ளியில் சேர்வதற்கான குறைந்தபட்ச வயதை நிறைவு செய்யும் மாணவர்கள் ஆகியோரின் நலனுக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6,9,11 ஆகிய வகுப்புகளில் 37 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாகச் சேர்ந்துள்ளனர்.
இதையடுத்து, விடுபட்ட மாணவர்களையும் பள்ளிகளில் சேர்ப்பதற்காகக் கூடுதல் அவகாசம் வழங்கும் வகையில் அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பான உத்தரவு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் செவ்வாய்க்கிழமை அனுப்பப்பட்டுள்ளது.
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து இருந்தாலும், அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

|
Posted: 06 Aug 2015 11:35 AM PDT
தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பொது இ-சேவை மையங்களிலும், ரூ.30 கட்டணம் செலுத்தி பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இ-சேவை மையம்:
தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம், தமிழகம் முழுவதும் 333 இடங்களில் பொது இ-சேவை மையங்களை அமைத்துள்ளது. தலைமைச் செயலகத்தில் ஒன்றும், 264 தாலுகா அலுவலகங்களிலும், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில்
ஒரு மையமும் மற்றும் 15 மண்டல அலுவலகங்கள், 50 கோட்ட அலுவலகங்களில் தலா ஒரு பொது இ-சேவை மையமும், மதுரை மற்றும் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களில் தலா ஒரு மையமும் என மொத்தம் 333 மையங்களை தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் அமைத்துள்ளது.
ஏற்கனவே ஆதார் அட்டை வாங்கி தொலைத்தவர்கள் அல்லது ஸ்மார்ட் கார்டு அளவில் பெற விரும்பினால், பொது இ-சேவை மையத்தில் ரூ.30 கட்டணம் செலுத்தி பிளாஸ்டிக் அட்டை பெறலாம்.
அரசு தலைமை செயலகத்தில் செயல்படும் பொது இ-சேவை மையத்தை, அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் குமரகுருபரன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-
பிளாஸ்டிக் அட்டை
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொது இ-சேவை மையங்களில், பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறுவதற்கு வசதி செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே கண்விழி-கைரேகை பதிவு செய்து ஒப்புகைச் சீட்டு பெற்றவர்கள் பொது இ-சேவை மையத்துக்கு சென்று, ஒப்புகை சீட்டின் பதிவு எண்ணை தெரிவித்து பிளாஸ்டிக் அட்டை பெறலாம்.
இதற்கு ரூ.40 கட்டணம் பெறப்படுகிறது. ஏற்கனவே ஆதார் எண் கிடைக்கப்பெற்றவர்கள் பிளாஸ்டிக் அட்டை பெற விரும்பினால் ஆதார் எண்ணை தெரிவித்து பிளாஸ்டிக் அட்டை பெறலாம். இதற்கு கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்படும். தமிழகத்தில் எந்த பகுதியை சேர்ந்தவரும், ஏதாவது ஒரு பொது இ-சேவை மையத்தில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற வசதி செய்யப்பட்டு உள்ளது. திருச்சி மாவட்டத்தில் அதிகபட்சமாக 7 ஆயிரத்து 806 பேரும், குறைந்த பட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 753 பேரும் பிளாஸ்டிக் அட்டை பெற்றுள்ளனர். தினமும் 5 ஆயிரம் பேருக்கு பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கப்படுகிறது.

|
Posted: 06 Aug 2015 11:34 AM PDT
தமிழக தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள், 75 பேருக்கு, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது; இதற்கான, 'கவுன்சிலிங்' நாளை மறுநாள் நடக்கிறது.தமிழக அரசு பள்ளிகளில், காலியாக உள்ள பணியிடங்கள் மற்றும் பணி நிரவல், பணி மாறுதலால் காலியாகும் இடங்களுக்கு, ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங், 8ம் தேதி துவங்குகிறது; முதலில், தொடக்கக் கல்வி கவுன்சிலிங் நடக்கவுள்ளது.
இத்துடன், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், 75 பேருக்கு,
உதவி தொடக்கக் கல்வி அதிகாரியாக, பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. இதற்கான கவுன்சிலிங், சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள தொடக்கக் கல்வி அரங்கில், வரும் 8ம் தேதி பிற்பகல் 3:00 மணிக்கு துவங்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது

|
Posted: 06 Aug 2015 11:32 AM PDT
In accordance with the direction in Government letter No.5852/B2/2014 MBC & DNC Dept. Dated 27.07.2015 for the filling of Secondary Grade Teachers vacancies in Most Backward Classes and Denotified Communities Department as notified in Notification No.06/2014, Dt.21.08.2014, the following first list is released. Further in compliance with the order of the Hon’ble Madurai bench of Madras High Court in W.P.(MD)No. 17255/2014 dt.16.4.2015 & W.P.(MD) No.17164/2014, W.P.(MD)No.17292/2014, W.P.(MD)No.17293 / 2014, dt. 23.07.2015 Board releases the provisional selection list for 49 vacancies.

|
Posted: 06 Aug 2015 11:31 AM PDT
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் புதிய விதிமுறை காரணமாக, தொலைதூரக்கல்வி பி.எட். மாணவர் சேர்க்கையில் விரைவில் மாற்றம்
கொண்டுவரப்பட உள்ளது. அதன்படி,இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் மட்டுமே இனி தொலைதூரக்கல்வி பி.எட். படிப்பில் சேர முடியும்.என்சிடிஇ எனப்படும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அமைப்பு, ஆசிரியர் கல்வி பயிற்சியில் பல் வேறு மாற்றங்களை கொண்டுவந் துள்ளது.
பிஎட், எம்எட் படிப்புக் காலத்தை ஓராண்டிலிருந்து 2 ஆண்டுகளாக உயர்த்தியுள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து 2015-16-ம் கல்வி ஆண்டு முதல் பிஎட் படிப்பு காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இதைத் தொடர்ந்து, பிஎட் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை சென்னை லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் என்சிடிஇ-யின் புதிய விதிமுறை காரணமாக, தொலைதூரக்கல்வி பிஎட் மாணவர்சேர்க்கையில் விரைவில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. தமிழ்நாட்டில் மதுரை காமராஜர், திருச்சி பாரதிதாசன், நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார். கோவை பாரதியார் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களும், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகமும் தொலைதூரக்கல்வியில் பி.எட். படிப்பை வழங்கி வருகின்றன. அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 2 ஆண்டு ஆசிரியர் பணி அனுபவத் துடன் பணியில் இருக்கின்ற பட்டதாரிகள்இதில் சேரலாம். பல்கலைக்கழகத்துக்கு ஏற்ப நுழைவுத்தேர்வு அல்லது பட்டப் படிப்பில் பெற்ற மதிப்பெண் மற்றும் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்சேர்க்கை நடைபெறுகிறது.
என்சிடிஇ-யின் புதிய விதிமுறை யின்படி, தொலைதூரக்கல்வியில் பிஎட் படிப்பில் சேர இடைநிலை ஆசிரியர் பயிற்சி (ஆசிரியர் கல்வி பட்டயப் படிப்பு) அவ சியம். அத்துடன் பட்டப் படிப்பும் முடித்திருக்க வேண்டும். என்சிடிஇ- யின் இந்த புதிய விதிமுறை யின்படிதான் அடுத்த ஆண்டு தொலைதூரக்கல்வி பி.எட். படிப் பில் மாணவர்களைச் சேர்க்க முடிவுசெய்திருப்பதாக தமிழ்நாடு திறந்தநிலைப் தபல்லைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியை சந்திரகாந்தா ஜெயபாலன் தெரிவித்தார்.

|
Posted: 06 Aug 2015 11:30 AM PDT
ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் தளர்த்தப்பட்ட நிபந்தனையிலும் குழப்பமா: ஆசிரியர்கள் குமுறல்
ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்பதற்காக கல்வித்
துறையின் தளர்த்தப்பட்ட நிபந்தனையிலும் குழப்பம் நீடிப்பதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.
இந்தாண்டு பொது மாறுதல் கலந்தாய்வு ஆக., 12 முதல் செப்., 16 வரை நடக்கின்றன. இதற்காக ஆக.,7 வரை ஆசிரியர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. கலந்தாய்வில் பங்கேற்க சம்பந்தப்பட்ட
ஆசிரியர் அந்த பள்ளியில் குறைந்தபட்சம் மூன்று கல்வியாண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு 1.6.2012 தகுதி நாளாக அறிவிக்கப்பட்டது.இதற்கு ஆசிரியர்களிடம் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து குறைந்தபட்சம் ஒரு கல்வியாண்டு போதும் என நிபந்தனை தளர்த்தப்பட்டது. இதன்படி 1.6.2014 தகுதி நாளாக அறிவுறுத்தப் பட்டது.ஆனால் கடந்தாண்டில் பங்கேற்றோர் இந்தாண்டு பங்கேற்க முடியாத நிலையுள்ளது.
2013-14ம் கல்வியாண்டு தாமதமாக ஜூன் 17ல் கலந்தாய்வு நடந்தது குறிப்பிடத்தக்கது.மதுரை மாவட்ட ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: 2012-13 கல்வியாண்டு தாமதமாக கலந்தாய்வு நடந்தது. அதற்காக 2014ல் நடந்த கலந்தாய்வில் ஜூன் முதல் தேதி குறிப்பிடாமல் 'சிறப்பு தகுதி நாள்' அறிவிக்கப்பட்டது. இந்தாண்டிற்கு அதுமாதிரி அறிவிப்பு இல்லை. இதனால் கடந்தாண்டு கலந்தாய்வில் பங்கேற்றவர் இந்தாண்டு பங்கேற்க முடியாது. பதவி உயர்வு பெறுவதில் பிரச்னை இல்லை. மூன்று கல்வியாண்டு என்ற நிபந்தனை ஓராண்டாக குறைக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் இரண்டு ஆண்டுகள் பங்கேற்க முடியாது. இது கல்வித்துறையின் நூதனமான முடிவு என்றார்.
|
No comments:
Post a Comment