08 July 2015

அரசு ஊழியர்கள், அதிகாரிகள் கடவுச்சீட்டு பெற விதிகளில் தளர்வு

CLICK HERE-G.O.Ms.No.71 Dt: July 02, 2015 -Personnel and Administrative Reforms DepartmentYear : 2015 

அரசு ஊழியர்கள்அதிகாரிகள் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்பெற
அடையாளச் சான்றோஆட்சேபணையின்மைச் சான்றோ 
பெறவேண்டியதில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
 இதற்குமுன்னறிவிப்புக் கடிதம் கொடுத்தாலே போதும் என்றும் 
அரசு
தெரிவித்துள்ளது.
இதுகுறித்துஅனைத்துத் துறை செயலாளர்கள்துறைத் 
தலைவர்கள்உள்ளிட்டோருக்கு பணியாளர்நிர்வாகச் சீர்திருத்தத் 
துறைசெயலாளர் பி.டபிள்யூ.சி.டேவிதார் அனுப்பியுள்ள கடிதம்:
அரசுத் துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள்பணியாளர்கள்
,பொதுத் துறைகளைச் சேர்ந்தவர்கள் கடவுச்சீட்டுகளைப் பெற 
சிலகடினமான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன
இந்தநடைமுறைகளை எளிதாக்க வெளியுறவுத் துறை 
அமைச்சகம்முன்வந்துள்ளது.
கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும்போது அரசுத் துறைகளின்
அதிகாரிகள்அலுவலர்கள்பணியாளர்கள் உள்ளிட்டோர் 
தங்களதுபணிதாங்கள் யார் என்பதைத் தெரிவிக்கும் அடையாளச்
 சான்றுஅல்லது அரசுத் துறைகளில் இருந்து ஆட்சேபணையின்மைச்சான்றினைச் சமர்பிக்க வேண்டும் என்று ஏற்கெனவே
தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தச் சான்றிதழ்களைப் பெறுவது கடினமாக இருப்பதால்
 இந்தநடைமுறை இப்போது எளிதாக்கப்பட்டுள்ளதுஅதன்படி,

கடவுச்சீட்டைப் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கு முன்னதாக,
அதுகுறித்த முன்னறிவிப்புக் கடிதத்தை சம்பந்தப்பட்ட அரசுத்
 துறைஉயரதிகாரிக்குத் தெரிவித்தால் போதும்.

ஆட்சேபணை ஏதும் இருந்தால் சம்பந்தப்பட்ட அந்த 
உயரதிகாரிமண்டல கடவுச்சீட்டு அலுவலகத்துக்கு அதைத் 
தெரிவித்து,கடவுச்சீட்டு விண்ணப்பத்தை திரும்பப் பெற்று விடலாம் என்று தனதுகடிதத்தில் டேவிதார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment