23 May 2015

மே 25-ம் தேதி தொடக்க நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடத்த இயக்குநர் உத்தரவு-

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்களுக்கான சிறப்பு கூட்டத்தை மே 25-ம் தேதி(திங்கள்கிழமை), அந்ததந்த உதவித் தொடக்கக் கல்வி

 அலுவலர்கள்நடத்தி அதில் இயக்குநர் கொடுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை

விளக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநர்
ஆர்.இளங்கோவன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி
அலுவலர்களு்ககு 20-ம் தேதி அனுப்பியுள்ள உத்தரவு விவரம்:
மே 25-ம் தேதி அனைத்து உதவித் தொடக்கக் கல்வி
 அலுவலர்களும்

,தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தை நடத்தி கீழ்கண்ட 
அறிவுரைகளைதலைமை ஆசிரியர்களுக்கு வழங்கி அவை
 உறுதியாககடைபிடிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க
 வேண்டும்.அனைத்து தொடக்கநடுநிலைப் பள்ளிகளும் ஜூன் 1-ம் தேதிதிறக்கப்பட வேண்டும்பள்ளிக்கு வரும் மாணவர்களை
 அன்புடன்வரவேற்றுநல்லதொரு கற்றல் சூழல் உருவாக்கித் 
தருவதை உறுதிசெய்ய வேண்டும்.
அரசு அளித்துள்ள விலையில்லா பாடபுத்தகம்
விலையில்லாசீருடைகள்விலையில்லா நோட்டுப் புத்தகங்கள்
 உள்ளிட்டஅனைத்தும் பள்ளி திறக்கும் நாளன்றே வழங்கப்பட
 வேண்டும்.விலையில்லா பேருந்து பயண அட்டைகள் 
தேவைப்படும் மாணவமாணவிகள் அனைவருக்கும்
 காலதாமதமின்றிவில்லையில்லாபேருந்து பயண அட்டைகள்
 பெற்றுத் தருவதற்கு போக்குவரத்துஅலுவலர்களை தொடர்பு 
கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள தண்ணீர் வசதியுடன்
 கூடியகழிப்பறைகள் பயன்பாட்டில் உள்ளதை பள்ளி திறக்கும் 
முன்தினமேஉறுதி செய்து கொள்ள வேண்டும்அனைத்துப்
 பள்ளிகளிலும்பாதுகாப்பான சுத்தமான குடிநீர் 
வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகளைசெய்ய வேண்டும்.
பள்ளி குழந்தைகளுக்கு ஊறுவிளைவிக்கும் விதத்தில்
 பள்ளிவளாகத்தில் திறந்தவெளி கிணறுகள்உயர் அழுத்த
 மின்கம்பிகள்,மின்கசிவுகள்பழுதடைந்த கட்டடங்கள்புல் 
புதர் போன்றவைஇல்லாமல் இருப்பதையும் பாதுகாப்புையும் உறுதி செய்ய வேண்டும்.
பள்ளி திறப்பதற்கு முன்தினம் தலைமை ஆசிரியர் மற்றும்
ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து பள்ளி வளாகம் மற்றும் 
பள்ளிவகுப்புறைகள் தூய்மையாக உள்ளதை உறுதி செய்து 
கொள்ளவேண்டும்.
பள்ளி மாணவர்களுக்கு வசதியான காற்றோட்டம்
பாதுகாப்பானகுடிநீர் வசதி மற்றும் மின் இணைப்பு வசதி
 ஆகியவைகளை பள்ளிதிறக்கும் முன்தினமே தயார் நிலையில்
 வைத்திருக்க அனைத்துதலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை
 வழங்க வேண்டும்.
ஆங்கிலப் பிரிவு தொடங்கப்படும் பள்ளிகளின் 
எண்ணிக்கையினைஉயர்த்தி மாணவர்கள் சேர்க்கையினை 
அதிகரிக்க நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும்பள்ளி தலைமை 
ஆசிரியர் மற்றும்ஆசிரியர்கள் பள்ளிக்கு காலதாமதமின்றி குறித்த 
நேரத்தில் வருகைபுரிதலை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
அரசாணை (நிலைஎண் 264-ன்படி காலை வழிபாட்டு முறை,மாணவர்களின் திறன்களையும் 
தன்னம்பிக்கையும்வெளிக்கொணரும் விதமாக பேசுதல்நடித்தல்
,மனக்கணக்குகூறுதல்பொன்மொழி கூறுதல்படைப்பாற்றல் 
போன்றசெயல்பாடுகள் தவறாமல் நடைபெறுவதற்கு 
நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும்.
பள்ளி வயதுக் குழந்தைகளைக் கண்டறிந்து பள்ளியில்
 சேர்க்கநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து பள்ளிகளில்
இடைநின்ற மாணவர்களைக் கண்டறிந்துஅவர்களை
 பள்ளியில்சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள செயல்வழிக் கற்றல் அட்டைகள்
கணித உபகரணப் பெட்டிகணினிபல்நோக்கு கருவி,
தொலைக்காட்சிப் பெட்டிடிவிடிபுத்தகப் பூங்கொத்து, 75-க்கும்மேற்பட்ட பாடவாரியான குறுந்தகடுகள்அறிவியல் 
உபகரணங்கள்ஆகிய அனைத்தையும் பயன்பாட்டில் கொண்டுவர 
வேண்டும்.இவ்வாறு தொடக்கக் கல்வி இயக்குநர் கேட்டுக் 
கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment