19 November 2014

சத்துணவு முட்டை வாங்குவதில் கோடிக்கணக்கில் கொள்ளை’

சத்துணவிற்காக, முட்டையை அதிக விலை கொடுத்து வாங்குவதால், சிலருக்கு கமிஷன் கிடைக்கிறது. இதனால், பல கோடி ரூபாய், அரசுப் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது

கொள்ளையடிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என, தமிழக அரசு நிர்வாகத்தை, கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்து உள்ளார், தமிழக காங்., தலைவர் இளங்கோவன்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில், அவர் நேற்று அளித்த பேட்டியில், “சத்துணவுக்காக மாதந்தோறும், 12 கோடி முட்டைகளை, தமிழக அரசு வாங்குகிறது. ஒரு முட்டை, 3.40 பைசாவுக்கு வெளி மார்க்கெட்டில் கிடைக்கிறது. ஆனால், 5 ரூபாய்க்கு வாங்குவதால், அரசுக்கு, 15 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.
இப்படி விலை அதிகமாக வைத்து, யார் கமிஷன் வாங்கி கொள்ளையடிக்கின்றனர் என்பதை ஆராய்ந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்

No comments:

Post a Comment