அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் இருக்கும்போது இறந்தால் 10 லட்சம் நிவாரண உதவி
தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்கள் இறந்தால், ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிக்கான சிறப்பு முகாம் வருகிற 15ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை நடைபெறும். இந்த முகாமில், 2015ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியுடன் 18 வயது நிறைவடைந்தவர்கள் புதிய வாக்காளர்களாக தங்கள் பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம். அதேபோன்று, இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், பெயர் நீக்கம், திருத்தம், இருப்பிடத்தை மாற்றுவதற்கும் விண்ணப்பிக்கலாம். புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் செய்பவர்களுக்கு தேசிய வாக்காளர் தினமான ஜனவரி மாதம் 25ம் தேதி வண்ண அடையாள அட்டை வழங்கப்படும்.
No comments:
Post a Comment