27 September 2014

PG TRB Exam விரைவில்...

தமிழகத்தில் அரசு மற்றும் நகராட்சி, மாநகராட்சியை சேர்ந்த 100 உயர்நிலை பள்ளிகள், மேல் நிலைபள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு தேவையான 900 முதுகலை ஆசிரியர்கள் டி.ஆர்.பி., மூலம் விரைவில்தேர்வு செய்யப்பட உள்ளனர்.தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளில் அரசு, மாநகராட்சி, நகராட்சி உயர்நிலை பள்ளிகள் 300, மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இதில், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், உயிரியல், வேதியியல் பாடங்களுக்கு முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் புதிதாக தோற்று விக்கப்பட்டன. தற்போது, இதனுடன் தமிழ், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல் பாடங்களுக்கும் கூடுதலாக முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment