14 August 2014

ஏடிம் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்? இந்த புதிய விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்

ஏடிம் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்? இந்த புதிய விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்

ஏடிம் இயந்திரத்தில் அதிகமாக பணம் எடுப்பவர் நீங்கள் எனில் வரும் நவம்பர் மாதம் முதல் இது உங்களுக்கு பெருஞ்செலவை ஏற்படுத்த போகிறது.  அதாவது, ரிசர்வ் வங்கி வகுத்துள்ள புதிய வரைமுறையின் படி, ஒரு மாதத்தில் பிற வங்கி ஏடி.எம்களில் இலவசமாக மூன்று முறை மட்டுமே பரிவர்த்தனை (நிதி மற்றும் நிதி அல்லாத) செய்ய முடியும். அதேபோல், அதே வங்கி ஏடி.எம்.களில் மாதத்திற்கு ஐந்து முறை மட்டுமே இலவசமாகபரிவர்த்தனை செய்து கொள்ளலாம். இந்த எல்லையை தாண்டி பயன்படுத்தும் போது ஒவ்வொரு முறைக்கும் நாம் ரூ 20 கட்டணமாக செலுத்த வேண்டி வரும். இந்த நடைமுறை மெட்ரோபோலிடன் நகரங்களான டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், கொல்கத்தா, ஐதராபாத் போன்ற இடங்களுக்கு பொருந்தும். இந்த அறிவிப்பை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment