பாலியல் புகாரில் சிக்கினால் டிஸ்மிஸ். ஆசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை..
மாணவர்களுக்கு முன்னுதாரணமாக, வழிகாட்டியாக ஆசிரியர்கள் நடந்து கொள்ள வேண்டும். இதை மீறி, மாணவர்களிடம் தவறாக நடந்துகொண்டால்,
உடனடியாக, 'டிஸ்மிஸ்' செய்யப்படுவர்' என, கல்வித்துறை, எச்சரிக்கை விடுத்துள்ளது.கடந்த சில மாதங்களாக, கர்நாடகா, மகாராஷ்டிரா, டில்லி, உ.பி., உள்ளிட்ட, சில மாநிலங்களில், சிறுவர்களுக்கு எதிராக, குறிப்பாக, மாணவியருக்கு எதிரான குற்றங்கள், அதிகளவில் நடந்து வருகின்றன.சமீபத்தில், பெங்களூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, இரண்டு உடற்கல்வி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில், தமிழகத்தில், மாணவர்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்காமல் இருக்க, மாணவர்கள்,ஆசிரியர்களுக்கு, உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கவுன்சிலிங்:
பள்ளி கல்வித்துறை சார்பில், 10 'மொபைல் கவுன்சிலிங்' வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில், ஒரு வாகனத்திற்கு ஒருவர் வீதம், 10 உளவியல் நிபுணர்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.இவர்கள், மாவட்ட வாரியாக, பள்ளிகளுக்கு சென்று, ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், 'கவுன்சிலிங்' அளித்து வருகின்றனர். சிலமாதங்களுக்கு முன் சென்னையில் நடந்த, பள்ளி முதல்வர்கள், போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில், 'மாணவர்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, பள்ளிகளில், முக்கிய இடங்களில்,'கேமரா' பொருத்த வேண்டும்' என, பள்ளி முதல்வர்களுக்கு, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment