04 August 2014

பி.எட்., கலந்தாய்வு 6ம் தேதி துவக்கம்

பி.எட்., கலந்தாய்வு 6ம் தேதி துவக்கம்

''தமிழக பி.எட்., கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, 6ம் தேதி துவங்கும்,'' என, ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில், அரசு சார்பில், ஏழு மற்றும் தனியார் கல்லூரிகள், 14 என, 21 பி.எட்., கல்லூரிகள் உள்ளன. இவற்றில், 2,155 இடங்கள் உள்ளன. இவை, ஒற்றைச் சாளர கலந்தாய்வு முறையில் நிரப்பப்படுகின்றன. இந்தாண்டு, பி.எட்., கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம், வினியோகிக்கப்பட்டது. 10,450 பேர் விண்ணப்பங்களை பெற்றுச் சென்றுள்ளனர். ''விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான, சேர்க்கை கலந்தாய்வு, இம்மாதம் 6ம் தேதி முதல், 9ம் தேதி வரை, சென்னை, மதுரை, கோவை, சேலம் ஆகிய பகுதிகளில் நடக்கும்,'' என, நெல்லையில் நேற்று, ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment