- பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மை: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
- தொடக்கக்கல்வி - முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்று ஊக்க ஊதியம் கோரும் ஆசிரியர்களின் பட்டியலில் விடுபட்ட ஆசிரியர்களின் விபரம் கோருதல் சார்பான தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் நாள் : 28. 12. 2015
- மகப்பேறு விடுமுறை 26 வாரம்?-மத்திய அரசு
- தொடக்கக்கல்வி-பதவி உயர்வு கலந்தாய்வு 30.12.15 அன்று நடைபெறும்
- முக்கிய படிவங்கள் அனைத்தும் ஒரே கிளிக்கில் பதிவிறக்கம் செய்ய
- உயர்கல்வி பயில முன் அனுமதி கோரும் விண்னப்பம்
- மாறுதல்/பதவி உயர்வு பணியிடத்தில் சேர்ந்த அறிக்கை படிவம்
- ஈட்டிய விடுப்புஒப்படைப்பு விண்ணப்பம்
- ஊக்க ஊதியம் அனுமதிக்க கோரும் விண்ணப்பம்
- பணி விடுவிப்புஅறிக்கை படிவம்
- அனுபவிக்காத பணியேற்பிடைக்காலம்-பதிவுசெய்து ஈட்டிய விடுப்புகணக்கில் சேர்க்க விண்னப்பம்
- தற்செயல் விடுப்பு தவிர பிற விடுப்பு முடித்து பணியில் சேர அனுமதி கோரும் படிவம்
- உயர்கல்வி முடித்தமை-பணிப்பதிவேட்டில் பதிவு செய்யக்கோரும் விண்ணப்பம்
- தொடக்கக்கல்வி-பதவி உயர்வு கலந்தாய்வு நாளை 30.12.15 அன்று நடைபெறும்
- தொ.க.துறையில் தற்போது காலியாக உள்ள இடங்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு :நாளை அந்தந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெறும்
- ஆண்டுக்கு 220 நாட்கள் கண்டிப்பாக பள்ளிகளில் சத்துணவு வழங்க வேண்டும்-RTI விளக்கம்
- இந்தியாவில் எத்தனை கல்வி முறைகள் ( சிலபஸ்) உள்ளன... கல்விமுறை பற்றிய விளக்கம்
- பள்ளிகளின் உறுதித்தன்மை : ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு
- பள்ளிக்கல்வி - தொடக்க/நடுநிலை/உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் கழிப்பறை சுத்தம் செய்தல் - அரசாணைப்படி உள்ளாட்சி அமைப்புகளுடன் இனைந்து துப்புரவு தொழிலாளர்களை நியமிக்க இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்
- மாற்றுத்திறனாளிகள் அரசாணையால் குழப்பம்
- ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்குமேல் வருவாய் உள்ளவர்களுக்கு காஸ் மானியம் ரத்து: புத்தாண்டு முதல் அமல்
- தமிழ் நாட்டில் 01.04.2003 க்குமுன் நியமனம்செய்யப்பட்டு01.04.
2003க்குப்பின்நிரந்தரம் செய்துபணிவரன்முறைசெய்யப்பட் டஅரசுஊழியர்களில் ஓய்வுபெற்றமற்றும்மரணம்அடைந் தவர்களுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பின்அடிப்படையில் பழையஓய்வூதிய திட்டப்படிஓய்வூதியம் ,பணிக்கொடை., கம்முடேஷன்மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க அரசாணை வெளியீடு. - NATIONAL TALENT SEARCH EXAMINATION – NOVEMBER 2015 - TENTATIVE SCORING KEY
Posted: 29 Dec 2015 07:29 PM PST
மழை-வெள்ளத்தில் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களிலுள்ள பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பத்திரிகையாளர் அன்பழகன் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:
மழை-வெள்ளத்தில், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும் கடுமையாகப் பாதிக்கபட்டன. ஏற்கெனவே அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள கட்டடங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளன. இவற்றில் எந்தவித பாதுகாப்பு நடவடிக்கையும், அரசு மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில், கட்டடங்களின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்ய, அந்தந்த மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும். முழுமையாக ஆய்வும் செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.
விடுமுறை கால சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்த இந்த மனுவை நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது.
இதுதொடர்பாக பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, ஜனவரி 22-க்கு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்
|
Posted: 29 Dec 2015 07:28 PM PST
|
Posted: 29 Dec 2015 07:26 PM PST
அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு அளிக்கப்படும் மகப்பேறு விடுமுறையை, 12 வாரத்திலிருந்து, 26 வாரமாக உயர்த்த, மத்திய அரசு உத்தரவிட உள்ளது.
மகப்பேறு கால பயன் சட்டத்தின் கீழ், பெண் ஊழியர்கள், அதிகபட்சம், 12 வாரங்கள் அல்லது 84 நாட்கள், மகப்பேறு விடுமுறையாக எடுத்துக் கொள்ளலாம். இந்த விடுமுறையை, பிரசவ தேதிக்கு முந்தைய, ஆறு வாரத்திலிருந்து எடுக்கலாம். குழந்தை பிறப்புக்கு பின், பெண்ணின் பொறுப்புகள் அதிகரிப்பதால், விடுமுறை காலம் போதாது என்ற கருத்து எழுந்துள்ளது.
இந்நிலையில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த, மேனகா, நிருபர்களிடம் கூறுகையில்,''குழந்தை பிறந்த பின், ஆறு
மாத காலம், பால் புகட்ட வேண்டிய அவசியம் இருப்பதால், பெண்களுக்கு, 26 வார காலம், மகப்பேறு விடுமுறை அளிக்க வேண்டுமென்ற என் கோரிக்கையை, தொழிலாளர் துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது,'' எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, தொழிலாளர் துறை உயரதிகாரி கூறுகையில், 'தனியார் மற்றும் அரசு துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு, ஆறரை மாதம், மகப்பேறு விடுமுறை அளிப்பதென, தொழிலாளர் துறை முடிவு செய்துள்ளது. இருப்பினும், இந்த விடுமுறையை, எட்டு மாதங்களாக அதிகரிக்க வேண்டுமென கருதுகிறோம். இதுபற்றி, அமைச்சரவை செயலகத்துக்கு கடிதம் எழுத உள்ளோம்; விரைவில் அறிவிப்புவெளியாகும்' என்றார்.
|
Posted: 29 Dec 2015 10:54 AM PST
|
Posted: 29 Dec 2015 10:50 AM PST
|
Posted: 29 Dec 2015 09:59 AM PST
|
Posted: 29 Dec 2015 09:59 AM PST
|
Posted: 29 Dec 2015 10:37 AM PST
|
Posted: 29 Dec 2015 10:34 AM PST
|
Posted: 29 Dec 2015 09:59 AM PST
|
Posted: 29 Dec 2015 09:59 AM PST
|
Posted: 29 Dec 2015 10:00 AM PST
|
Posted: 29 Dec 2015 10:45 AM PST
|
Posted: 29 Dec 2015 09:24 AM PST
|
Posted: 29 Dec 2015 09:07 AM PST
01.01.2015 ந் தேதியை தகுதி நாளாகக்கொண்டு தேர்ந்தோர் பட்டியல் படி அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்தில்நாளை (30.12.2015) அன்று காலை 10 மணிமுதல் தற்போது காலியாக உள்ள நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ,தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்,பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு பதவி உயர்வுமூலம்கலந்தாய்வு நடைபெற உள்ளது
|
Posted: 29 Dec 2015 08:57 AM PST
|
Posted: 29 Dec 2015 08:48 AM PST
கற்றல் திறன், தேர்ந்தெடுக்கப் போகும் மேற்படிப்பு, படிக்க நினைக்கும் கல்வி நிறுவனம் என இந்த அம்சங்களின் அடிப்படையில், எந்த சிலபஸ் பள்ளியில் பிள்ளையைச் சேர்க்கலாம் என்ற முடிவை எடுக்கலாம்.
ஸ்டேட் போர்டு
மாநில கல்வித் துறை, நேஷனல் கோர் கரிக்குலம் வரையறைகளின் படி அமைக்கும் பாடத்திட்டத்தை கொண்டது, ஸ்டேட் போர்டு சிலபஸ். பத்தாம் வகுப்பு வரை சமச்சீர் கல்விப் பாடத்திட்டமும், பதினொன்றாம், பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு ஏற்கெனவே வழங்கி வந்த பாடத்திட்டமும் பின்பற்றப்படுகிறது. பாடத்திட்டங்களில் சி.பி.எஸ்.இ சிலபஸில் இருந்து பெரிதாக வேறுபாடு இல்லை.
ஆனால், பரீட்சை என்பது மனப்பாடம் செய்யும் திறனை மதிப்பிடுவதாகவே உள்ளது. இதனால் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளில் ஸ்டேட் போர்டு மாணவர்கள் சரியாக ஸ்கோர் செய்ய முடிவதில்லை.
சி.பி.எஸ்.இ (CBSE)
மத்திய அரசின் நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் டிரெயினிங் (NCERT) பரிந்துரைக்கும் பாடத்திட்டம் இது. இந்த சிலபஸில் பத்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தொடர்ச்சியான தேர்வு முறை (continuous comprehenvive assessment) மூலம் திறன் மதிப்பிடப்படும். பதினொன்றாம் வகுப்பில் ஸ்டேட் போர்டு சிலபஸ் பள்ளிக்கு மாற விரும்பும் மாணவர்களுக்கு மட்டுமே, பொதுத் தேர்வின் மூலம் சி.ஜி.பி.ஏ-யாக (CGPA – cumulative grade point average) முடிவுகள் வெளியிடப்படும்.
இதன் தேர்வு முறை, மாணவர்களின் புரிதல் மற்றும் யோசிக்கும் திறனுக்கு முக்கியத்துவம் தருவதாக இருக்கும். உதாரணமாக, 10 மார்க் கேள்வியில் 2 மார்க் அனலிடிக்கல் திங்கிங், 2 மார்க் அது சம்பந்தபட்ட ஒரு பிராப்ளம், மீதி 6 மார்க்தான் புத்தகத்தில் இருந்து கேட்கப்படும் கேள்வியாக இருக்கும். இந்தப் பயிற்சி, அவர்களை JEE போன்ற தேசியத் தேர்வுகளை திறம்பட எதிர்கொள்ள வைக்கும். யு.பி.எஸ்.சி தேர்வுகளுக்கும்கூட இந்த என்.சி.ஈ.ஆர்.டி புத்தகங்கள் அதிக பலன் தருவதாக உள்ளன.
ஐ.சி.எஸ்.இ (ICSE)
‘கவுன்சில் ஃபார் த இந்தியன் ஸ்கூல் சர்டிஃபிகேட்’ என்ற அரசு அல்லாத கல்வி அமைப்பால் நெறிப்படுத்தப்படும் சிலபஸ் இது. இதில் ஏழாம் வகுப்பு வரை தேர்வுகளே இருக்காது. பாடவாரியாகக் கொடுக்கப்படும் வொர்க்்ஷீட்டை மட்டும் மாணவர்கள் செய்தால் போதும். கணக்கு, அறிவியல், மொழிப்பாடங்கள் என அனைத்தும் நாடகங்கள் மற்றும் செயல்முறை விளக்கங்களாக மாணவர்களே செய்து காட்ட வேண்டும்.
எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்வுகள் உண்டு. பதினொன்றாம் வகுப்பில் ஸ்டேட் போர்டு, சி.பி.எஸ்.இ போர்டுகள் வழங்கும் பாடப்பிரிவுகளைவிட மிக அதிகமாக, ஆங்கில இலக்கியம், சுற்றுச்சூழல் அறிவியல், சமூகவியல், பொலிட்டிக்கல் சயின்ஸ், ஃபேஷன் டிசைனிங் என 70 பாடப்பிரிவுகளை ஆப்ஷனாக மாணவர்களுக்கு அளிக்கிறது. பொறியியல், மருத்துவம், கலை அறிவியல் என்ற வட்டம் விட்டு வந்து, மேற்படிப்புக்கு நிறைய கோர்ஸ் களை தேர்வு செய்ய உதவும் சிலபஸ் இது.
இன்டர்நேஷனல்
கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகம் வழங்கும் கல்வி மற்றும் தேர்வு முறையைப் பின்பற்ற சான்றிதழ் பெற்றவையே இன்டர்நேஷனல் பள்ளிகள். சென்னையில் கேம்ப்ரிட்ஜ் கல்வியில் படிக்க பிரைமரிக் கான வயது வரம்பு (5 -11 வயது), செகண்டரிக்கான வயது வரம்பு 1 (11-14 வயது), செகண்டரி 2-க்கு (14 -16 வயது), அட்வான்ஸ்ட்க்கு (16 -19 வயது) என நான்கு நிலைகள் உள்ளன. அட்வான்ஸ்டு லெவலில் ஏ.எஸ் லெவல் (ஒரு வருடம்), ஏ லெவல் (இரண்டு வருடம்) என சாய்ஸ் உண்டு. கணிதம், அறிவியல், பொருளாதாரம், ஊடக அறிவியல், ரிலீஜியஸ் ஸ்டடீஸ், சமூகவியல், மரைன் அறிவியல், டிராவல் அண்ட் டூரிசம் உள்ளிட்ட 55 பாடங்களில் இருந்து மாணவர்கள் விரும்பும் பாடத்தைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். பிராக்டிக்கல் தேர்வுகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் இந்த சிலபஸில், மனப்பாடத்துக்கு இடமின்றி அந்தப் பயிற்சியை முழுமை யாகப் புரிந்து செயல்படுத்திக் காட்ட வைப்பதால், மாணவர்களின் சிந்திக்கும் திறனே இங்கு மதிப்பெண் காரணி.
மான்டிசோரி
ப்ரீ பிரைமரி என அழைக்கப்படும் இந்தக் கல்விமுறையில் 1 – 6 வயது வரையுள்ள குழந்தை களின் முழுமையான வளர்ச்சியை மனதில் வைத்து வகுப்புகளும் பாடங்களும் இருக்கும். விளையாட்டு, நாட கங்கள் மூலம் கல்வியைக் கொண்டுசேர்க்கும் இங்கு, பெரும்பாலும் செயல்முறை விளக் கங்கள் மூலமே பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
ஒபன் ஸ்கூல்
பல்வேறு காரணங் களால் பள்ளிகளில் சேர்ந்து படிக்க முடியாத மாணவர்கள், இந்தக் கல்விமுறையைத் தேர்ந்தெடுக்கலாம். செகண்டரி கோர்ஸ் (பத்தாம் வகுப்பு), சீனியர் செகண்டரி கோர்ஸ் (பன்னிரண்டாம் வகுப்பு) என இரு நிலைத் தேர்வுகள் உண்டு. வீட்டிலிருந்தே டிஸ்டன்ஸ் எஜுகேஷன் மூலம் படிப்பதால், தேர்வு களுக்கு மட்டும் சென் றால் போதும்.
இப்படி கல்விச் சந்தையில் பலதரப்பட்ட சிலபஸ்கள் உள்ளன. உயர்நிலை கல்வியிலும் மேற்படிப்பிலும் பொறியியல், மருத்துவம் என்ற வட்டத்துக்குள் அடைக்காமல் மாணவர்களின் விருப்பதுக்கு ஏற்ப பாடங்களைத் தேர்ந்தெடுத்தால், அதில் சிறப்பாக செயல்படுவது மட்டுமின்றி, நல்ல வேலைவாய்ப்புகளை அவர்களே உருவாக்கிக்கொள்ள வழிவகுக்கும்!’’
|
Posted: 29 Dec 2015 08:43 AM PST
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளின் உறுதித் தன்மையை ஆராய்ந்து பள்ளிகளை சீரமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அன்பழகன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.4 வார காலத்திற்குள் பதிலளிக்கவேண்டி தமிழக அரசுக்கு நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது
|
Posted: 29 Dec 2015 08:39 AM PST
|
Posted: 29 Dec 2015 08:25 AM PST
அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்க மாநில தலைவர் ஜான்சிராணி அறிக்கை: அரசு பணியில் உள்ள, மாற்றுத் திறனாளிகளுக்கு ஊர்திப்படி மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதில், தாமதம்ஏற்படுவதை தவிர்க்க, டிச., 22ம் தேதி, நிதித்துறை புதிய அரசாணை வெளியிட்டுள்ளது; இதை வரவேற்கிறோம்.அதே
சமயத்தில், ஊர்திப்படி பெற, மாவட்ட மாற்றுத் திறனாளி அலுவலர் வழங்கிய, தேசிய அடையாள சான்றையே ஏற்க வேண்டும் என, மாநில ஆணையர் கூறியிருந்தார். அதை உறுதி செய்யாமல், அரசாணை உள்ளதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது. செவித் திறனை இழந்து, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி அரசு ஊழியர்களுக்கு, ஊர்திப்படி மறுக்கப்படுகிறது. இந்த பாரபட்சம் கூடாது என வலியுறுத்தியும், சமீபத்திய அரசாணையில், அது இல்லாததது வருத்தம் அளிக்கிறது.இவ்வாறு அவர் கூறிஉள்ளார் |
Posted: 29 Dec 2015 08:24 AM PST
ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கும் மேல் வருமானம் உடைய வரிசெலுத்துவோருக்கு சமையல் காஸ் மானியத்தை ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இது வரும் ஜனவரி முதல் அமலுக்கு வருகிறது.
தற்போது அனைத்து நுகர்வோர்களுக்கும் 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு காஸ் சிலிண்டர் ஆண்டுக்கு 12 என்ற எண்ணிக்கையில் மானிய விலையான 419.26 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. சந்தை விலையில் இந்த சிலிண்டர் ரூ.608-க்கு வழங்கப்படுகிறது.
இந்நிலையில் மானிய ரத்து தொடர்பாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏராளமான நுகர்வோர்கள் தானாக முன்வந்து மானியத்தை விட்டுக்கொடுத்துள்ளனர். எனவே, அதிக வருவாய் பிரிவில் உள்ளவர்கள் சமையல் காஸை சந்தை விலையில் வாங்க வேண்டும்.
எனவே, நுகர்வோரின் கணவர் அல்லது மனைவி, வருமான வரி செலுத்தும் வகையில் ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கும் மேல் வருமானம் ஈட்டுபவராக இருப்பின் அவர்களுக்கு காஸ் மானியம் வழங்கப்படமாட்டாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் ஜனவரி 2016 முதல் சிலிண்டர் பதிவு செய்யும்போது, நுகர்வோர் தானாக முன்வந்து அளிக்கும் தகவலின் அடிப்படையில் இத்திட்டம் அமலுக்கு வரும். உரியவர்களுக்கு மானிய சலுகைகள் சென்றடைய வேண்டும் என்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் மொத்தம் 16.35 கோடி சமையல் எரிவாயு காஸ் நுகர்வோர்கள் உள்ளனர். நேரடி மானிய திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, போலி நுகர்வோர்கள் களையப்பட்டதில் இந்த எண்ணிக்கை 14.78 கோடியாக குறைந்தது. இவர்களில் எத்தனைபேர், வருமான வரி செலுத்தும் வகையில் ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கும் மேல் வருவாய் ஈட்டுகின்றனர் என்ற கணக்கீடு இல்லை.
விட்டுக்கொடுங்கள்
அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி, சந்தை விலையில் காஸ் சிலிண்டர் வாங்க தகுதியுள்ள வசதி படைத்தவர்கள் மானியத்தை விட்டுக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.
எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பேராசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் உள்ளிட்டோர் மானியத்தை விட்டுக்கொடுக்க வேண்டும். ஒரு கோடி பேர் மானியத்தை விட்டுக் கொடுத்தால் ஒரு கோடி ஏழை மக்கள் பயன்பெறுவர் என அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதுவரை 57.5 லட்சம் நுகர்வோர்கள் காஸ் மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர்.
ஏழை மக்கள் சமைப்பதற்காக, மண்ணெண்ணெய், விறகு, நிலக்கரி, சாண வறட்டி உள்ளிட்டவற்றை சார்ந்திருப்பதை தவிர்க்கும் வகையில், அனைவருக்கும் சமையல் காஸ் இணைப்பு வழங்க அரசு முயற்சி செய்து வருகிறது. இந்த இலக்கை எட்டுவதற்காகவே, மானியத்தை விட்டுக்கொடுக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.
உச்சவரம்பு நிர்ணயம்
மானிய செலவு, நிதிப்பற்றாக்குறையை குறைக்க முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு, மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 6 என கடந்த 2012 செப்டம்பரில் நிர்ணயம் செய்தது. பின்னர் இந்த எண்ணிக்கை 9 ஆக உயர்த்தப்பட்டது. கடந்த 2014 ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து மானிய சிலிண்டர்களுக்கான உச்சவரம்பு 12 ஆக உயர்த்தப்பட்டது.
நுகர்வோர் காஸ் சிலிண்டரை சந்தை விலையில் வாங்குகின்றனர். மானியம் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
2014-15-ம் நிதியாண்டில் சமையல் காஸ் மீதான மானியம் ரூ.40 ஆயிரத்து 551 கோடியாக இருந்தது. நடப்பு நிதியாண்டில் கச்சா எண்ணெய் விலை ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதால் மானியம் முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் பாதியை விட குறைந்துள்ளது. செப்டம்பர் வரையிலான அரையாண்டு முடிவில் மானியம் ரூ.8,814 கோடியாக உள்ளது.
|
Posted: 29 Dec 2015 08:39 AM PST
|
Posted: 29 Dec 2015 08:16 AM PST
மாணவர்கள், பெற்றோருக்கு இந்த விடைகள் குறித்து ஏதேனும் மாற்றுக் கருத்துகள் இருந்தால் ஜனவரி 9-ஆம் தேதிக்குள் க்ண்ழ்ங்ஸ்ரீற்ர்ழ்க்ஞ்ங்.ற்ய் |