
26 February 2015
24 February 2015
உபரி ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் விரைவில் பணியிட மாற்றம்
மாநிலம் முழுவதும், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் பிற ஒன்றியங்களுக்கும், மாவட்டங்களுக்கும், விரைவில் பணியிட மாற்றம் செய்யப்படவுள்ளனர். தொடக்கக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சி தொடக்கப் பள்ளிகள், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விவரங்களையும், உபரி ஆசிரியர்கள் பட்டியலையும், 25-ம் தேதிக்குள் அனுப்பிவைக்க மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உபரி பட்டியலில் இடம்பெறும் ஆசிரியர்கள், கலந்தாய்வின்படி பிற ஒன்றியங்கள், மாவட்டத்துக்குள் மற்றும் பிற மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும், சரியும் மாணவர்கள் எண்ணிக்கை, விதிமுறைகள் மீறி, நிர்வாக மாறுதல் என்ற பெயரில் வழங்கப்படும் இடமாறுதல்கள் காரணமாகவே, உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அந்தந்த ஆண்டு துவக்கத்தில் ஆசிரியர், மாணவர்கள் எண்ணிக்கையை கணக்கிட்டு கலந்தாய்வு நடத்தினால், உபரி, பற்றாக்குறை என்ற பேச்சுக்கு இடமில்லாமல் போகும்" என்றார்.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் டெல்லி மாநாடு மே 6
இந்தியத்தலைநகராம் புது டெல்லி யில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் கோரிக்கை மாநாடு வரும் மே மாதம் 6 ந்தேதி புதன் கிழமை புதுடெல்லி மக்களவை வளாகத்தில் அமைந்துள்ள கான்ஸ்டிஷன் கிளப் அரங்கில் நடைபெற உள்ளது. மேலும் தகவல்கள் விரைவில்
23 February 2015
21 February 2015
ஜாக்டோ பொறுப்பாளர்களை சந்திக்க முதலமைச்சர் வருகிற பிப்ரவரி 25ம் தேதி காலை 10 மணிக்கு ஒதுக்கீடு
தமிழக முதலமைச்சர் வருகிற பிப்ரவரி 25ம் தேதி காலை 10 மணிக்கு ஜாக்டோ அமைப்பினரை சந்திக்கிறார் ஜாக்டோ உயர்மட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று காலை பட்டதாரி ஆசிரியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் அவர்களிடம் முறையிட இன்று செல்வதென முடிவெடுக்கப்பட்டது. மாலை4.30 மணிக்கு சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டு ஜாக்டோ உயர்மட்ட தலைவர்கள் தலைமைசெயலகம் சென்று இருந்தனர். ஆனால் இதுகுறித்து விரிவாக விவாதிக்க இருப்பதால், முதலமைச்சர் பிப்ரவரி 25ம் தேதி காலை 10 மணிக்கு சந்திக்க நேரம் ஒதுக்கியதை உறுதிப்படுத்திக்கொண்டனர் பின்னர் ஏற்கனவே பிப்ரவரி -27-ந்தேதி கூடுவதாக இருந்த அடுத்த ஜாஒடோ உயர்மட்டக்கூட்டம் பிப்ரவரி 25ம் தேதியே முன்கூட்டி கூட உள்ளது. இருப்பினும் திட்டமிட்டப்படி வருகிற 22 ந்தேதி ஆயத்த விளக்க கூட்டம் மார்ச் 8ந்தேதி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவண் ஜாக்டோ மாநில அமைப்பு...
18 February 2015
25க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிக்கூடங்களில் சத்துணவு மையங்களை மூட முடிவு !!
நெல்லை மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட சத்துணவு மையங்களை மூடுவதற்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனால் சத்துணவு ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். நெல்லை மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரம் சத்துணவு மையங்கள் உள்ளன. ஒரு மையத்திற்கு சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என 3 பேர் பணியில் இருக்க வேண்டும். மாநிலம் முழுவதும் சத்துணவு மையங்களில் ஆயிரக்கணக்கான காலி பணியிடங்கள் உள்ளன. நெல்லை மாவட்டத்தில் மட்டுமே 1500க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன. இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவு எதுவும் இன்றி நெல்லை மாவட்டத்தில் 25க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிக்கூடங்களில் சத்துணவு மையங்களை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(சிறுசேமிப்பு) நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாநகராட்சி ஆணையாளருக்கு சமீபத்தில் இதுகுறித்து ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கை படி 25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளை கணக்கெடுத்து, அங்குள்ள சத்துணவு மையங்களை மூட கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி பாளை ஊராட்சி ஒன்றியத்தில் மட்டுமே 30க்கும் மேற்பட்ட சத்துணவு மையங்கள் மூடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் சத்துணவு ஊழியர்கள், அமைப்பாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு மூடுவதால் ஏற்கனவே ஊழியர்கள் பற்றாக்குறையால் திணறும் சத்துணவு திட்டத்தில் மேலும் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. மூடப்படும் மையங்கள் உள்ள பள்ளி மாணவர்களுக்கு மற்ற மையங்களில் இருந்து ஊழியர்கள் தலைச்சுமையாக சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் உணவை எடுத்து செல்ல வேண்டியது வரும். அங்குள்ள அமைப்பாளர், சமையலர், உதவியாளர்களுக்கான மாற்றுப்பணி அறிவிக்கப்படவில்லை. இதுகுறித்து தமிழக சத்துணவு ஊழியர்கள் சங்க மாநில செயலாளர் ராஜூ கூறுகையில், ‘‘நெல்லை மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட சத்துணவு மையங்களை மூட முடிவெடுத்திருப்பது தன்னிச்சையான செயலாகும். அரசாணை பிறப்பிக்கப்படாத நிலையில், கலெக்டரின் நேர்முக உதவியாளரே இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும் சத்துணவு மேலாளர்கள் கூட்டம் சிலசமயங்களில் இரவு 9 மணி வரை நடத்தப்படுகிறது. இதனால் பெண் ஊழியர்கள் இரவு நேரத்தில் பஸ் கிடைக்காமல் திண்டாடுகின்றனர். மாவட்ட நிர்வாகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரியும், நேர்முக உதவியாளர்(சத்துணவு) நடவடிக்கைகளை கண்டித்தும் வரும் 23ம் தேதி மாலை 4 மணிக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்’’ என்றார்.
தொடக்க கல்வி துறையில் பணி நிரவல் செய்ய விவரங்கள் சேகரிக்க உத்தரவு
தொடக்க கல்வி துறையில் 31.8.2014 மாணவர் எண்ணிக்கை படி பணி நிரவல் செய்ய விவரங்கள் சேகரித்து 26.2.14 முதல் மண்டல வாரியாக நடைபெறும் ஆய்வுக்கூடத்தில் சமர்ப்பிக்க தொ.க.இயக்குனர் உத்திரவு.
.jpg)
.jpg)
15 February 2015
COMPARISION 9300+4200 AND 1.86 & COMPARISION 9300+4200 WITH 5200+2800
Thanks to-masanan2013@gmail.com
13 February 2015
09 February 2015
07 February 2015
IT Tax Form 2015 - Collection
IT Forms Prepared By
|
Links
|
Mr. S.M. Thomas Antony,
B.T.Asst.,
St. Britto HSS, Madurai-16.
| |
Mr. K. Arunagiri,
PG Asst. in Maths,
GHSS Kasinayakkanpatti,
Vellore District. (Version 2.1)
| |
Mr. P. Manimaran,
B.T.Asst., (Science),
GHS, P.Thottiyankulam,
Virudhunagar Dt.
| |
Mr. K. Uduman Ali,
TAMS.
| Download |
Mr. S. Velavan,
P.G.Asst.,
Thiruvarur.
| |
06 February 2015
03 February 2015
தமிழகத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க 8 வார கால அவகாசம் ,சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
SSTA வின் அடுத்த வெற்றி!!!
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் கோரி SSTAசார்பாக சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டதுவழக்கு எண் WP-4420/2014 . வழக்கு கடந்த விசாரணையின் போதுபதில் தாக்கல் செய்ய அரசுக்கு பல முறை அவகாசம் அளிக்கப்பட்டது.நீதிபதி அவர்கள் direction கொடுக்கலாமா என கேட்டபோது நீதிமன்றத்திற்குள்ளாகவே இறுதி
தீர்வு வேண்டுமென SSTA சார்பாக கடந்த முறை (டிசம்பர்மாதம்)வேண்டப்பட்டது.
இந்நிலையில் 28.01.2015 அன்று வழக்கு- கோர்ட்டில் எண் -8 வரிசைஎண்-39 ஆக விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் மீண்டும் 4வார கால அவகாசம் கோரப்பட்டது. நீதிபதி அவர்கள் அரசுக்குபலமுறை கால அவகாசம் அளிக்கப்பட்டும் இதுவரை பதில் மனுதாக்கல் செய்யவில்லை என கூறி 8 வாரத்திற்குள் பரிசீலித்து பதில்அளிக்க வேண்டும் என் வழக்கை முடித்து வைத்தார்கள். பதில்சாதகமாக இருந்தால் தமிழகத்தில் பணிபுரியும் அனைவருக்கும்மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கிடைக்கும் இல்லை எனில்SSTA அதனை எதிர்த்து மீண்டும் தனது போராட்டத்தினை தொடரும் !!! """உச்சநீதிமன்றத்தில் தனித்து நின்று மாவட்ட மாறுதலில் வெற்றிபெற்றது """ போல இதிலும் வெற்றி பெற்று காட்டும்.பாதிக்கப்பட்டஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம்பெற்று தர SSTA அனைத்து ஆவணங்களையும் தயார் செய்து போராடிவருகிறது . வழக்கு வெற்றி பெறும் வரையில் SSTA ஓயாது. வெற்றியும் நமதே!!! அனைத்தையும் வெல்வதும் நமதே !!! உண்மையை சொல்வோம்!!!! சொல்வதை செய்வோம் !!!!
02 February 2015
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிய வேண்டிய உதவித் தொகை வலைதளங்கள்.
கல்வி செலவை சமாளிப்பதற்கான ஒரு முக்கிய வடிகாலாக மாணவர்களுக்கு இருப்பது உபகார சம்பளம் எனப்படும் கல்வி உதவித்தொகை. ஆனால் இன்றைய பொருளாதார தேக்கநிலை சூழலில் இந்த உதவி கிடைப்பதிலும் சிக்கல் நிலவுகிறது.
எனவே அதற்கான ஒரு மாற்று ஏற்பாடு, கல்வி செலவை சமாளிக்க திணறும் மாணவர்களுக்கு முக்கியமான ஒன்றாகும். ஆகவே கல்வி உதவித்தொகைகள் பற்றிய பல தகவல்களைக் கொண்டிருக்கும் சில இணையதளங்களின் முகவரிகளை இங்கே உங்களுக்காக வழங்கியுள்ளோம். இத்தளங்களை ஆராய்வதன் மூலம் கல்வி உதவித்தொகை சம்பந்தமான பல அரிய, உபயோகமான தகவல்களைப் பெறலாம்.
இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் கிடைக்கும் கல்வி உதவித்தொகைகள் பற்றி இந்த வலைத்தளம் பல தகவல்களைக் கொண்டுள்ளது. அதைத்தவிர பரிசுகள், போட்டிகள், ஆய்வு படிப்புகள், இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் தேர்வு முடிவுகள் ஆகியவைப் பற்றிய தகவல்களையும் தருகிறது. இந்த வலைத்தளத்தில் தகவல்கள் அடிக்கடி புதுப்பிக்கப்படுகின்றன. மேலும் இதில் நிபுணர்களின் கேள்வி-பதில் பகுதியும் அடங்கியுள்ளது.
இந்த தளம் மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இதில் பள்ளிகல்வி-கல்வியறிவு மற்றும் உயர்கல்வி துறை ஆகிய 2 துறைகள் உள்ளன. இந்திய அரசாங்கத்தால் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும் உதவித்தொகை அறிவிப்புகள் மற்றும் பிற நாடுகளால் இந்திய மாணவர்களுக்கு அறிவிக்கப்படும் சலுகைகள் பற்றி இந்த தளம் குறிப்பான விவரங்களை கொண்டுள்ளது.
இளநிலை, முதுநிலை, முனைவர் பட்டப் படிப்பு மற்றும் அதற்கு பிந்தைய உதவித்தொகை நிலவரங்களை தெரிந்துகொள்ள இந்த வலைத்தளம் உதவுகிறது. பல்கலைக்கழக வாரியாக உதவித்தொகை விவரங்களை அறிய முடிவதோடு, இந்த தளத்திலிருந்து செய்தி மடல்களையும் பெறமுடியும். மேலும் இதில் மாணவர்களுடைய சில கேள்விகளுக்கும் பதில் கிடைக்கிறது. இதைதவிர வெளிநாட்டு படிப்புகள் சம்பந்தமான உதவிக்குறிப்புகளை தருவதோடு அதற்கான உதவித்தொகை பெறுவதைப் பற்றியும் தகவல் தருகிறது. அதேசமயம் இந்த தளத்தில் நுழைந்து தேட சற்று சிரமம் எடுத்து கொள்ள வேண்டியிருக்கும்.
வெளிநாட்டு படிப்பிற்கான உதவித்தொகை கோருபவர்களுக்கானது இந்த தளம். முக்கியமாக மற்றும் குறிப்பாக அமெரிக்காவில் படிப்பதற்கான விவரங்களை இது கொண்டுள்ளது.
இந்த தளம் அமெரிக்க படிப்புகளை பற்றிய தகவல்களை மட்டுமே கொண்டுள்ளது.
உலகளாவிய அளவில் இளநிலை, முதுநிலை, முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கு பிந்தைய காலம் மற்றும் பட்டப்படிப்பு அல்லாதவற்றுக்காக கிடைக்கும் உதவித்தொகைகள் பற்றிய விவரங்களை கொண்டுள்ளது. ஆனால் இதில் நாடுவாரியாக விவரங்கள் இல்லை.
இந்த வலைத்தளம் இளநிலை மற்றும் முதுநிலை படிப்பு உதவித்தொகை விவரங்களை கொண்டிருப்பதோடு, சமூக அறிவியல் மற்றும் கோடைகால வகுப்புகள் பற்றிய விவரங்களையும் கொண்டுள்ளது. இதில் நாடுவாரியாக விவரங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.
இந்த தளத்தில் நிதி சம்பந்தமான விதிமுறைகள் நன்கு தொகுக்கப்பட்டுள்ளன. ஆனால் இதிலுள்ள கட்டுரைகள் மூலமாக ஒன்றிலிருந்து மற்றவைக்கு தொடர்பு கிடைத்தாலும், சில கட்டுரைகள் ஆர்வமிக்கதாக இருக்காது. மேலும் சமீபத்திய நிதிசம்பந்தமான விதிமுறைகள் இதில் கிடைப்பதில்லை.
பள்ளிகளில் மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில் தினமும் நாளிதழ்!
Subscribe to:
Posts (Atom)