27 August 2014

வானில் இரண்டு நிலா ; இணையத்தில் பரபரப்பு செய்திகள்

1409127211-081[1]
ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி செவ்வாய் கிரகம் பூமிக்கு மிக அருகில் வருவதால் வானில் இரு நிலவுகள் தோன்றியது போலக் காட்சியளிக்கும் என  இணையத்தில் பரபரப்பு செய்திகள் பரவி வருகின்றன.
கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் இத்தகைய தகவல்கள் தொடர்ந்து பரவிவருவதாகவும், ஆகஸ்ட் மாதம் இறுதியில் எப்போதும் தெரிவிக்கப்படும் இந்த செய்தி உண்மையானது இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு அளிக்கப்பட்ட விளக்கத்தில், செவ்வாய் கிரகமும் சனி கிரகமும் அருகே வருவதால், வானில் இக்கிரகங்கள் நட்சத்திரங்க போலத் தெரியுமே தவிர செவ்வாய் கிரகம் பூமிக்கு பக்கத்தில் வந்தாலும் நிலாவைப் போல பெரியதாய் தெரிய வாய்ப்பில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இணையத்தில் பரவும் இந்த செய்தியோடு இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் புகைப்படமும் பதிவேற்றம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment